புரட்டாசி சனிக் கிழமையை முன்னிட்டு நவ திருப்பதிகளுக்கு 'ஸ்பெஷல்' பஸ்கள்.
திருநெல்வேலி: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நவ திருப்பதிகளுக்கு "ஸ்பெஷல்' பஸ்கள் இயக்கப்படுகிறது. நவ திருப்பதி கோயில்களை பக்தர்கள் வசதியாக வழிபடும் நோக்கத்தில் புரட்டாசி சனிக் கிழமை நாட்களான வரும் 19ம் தேதி, 26ம் தேதி, அக்டோபர் மாதம் 3ம் தேதி, 10ம் தேதி, 17ம் தேதி ஆகிய தேதிகளில் நாட்களில் சுற்றுலா பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சுற்றுலா பஸ்கள் பாளை புதிய பஸ்ஸ்டான்டில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு நவ திருப்பதி கோயில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி வழியாக கருங்குளம், நான்குநேரி மற்றும் திருக்குறுங்குடி சென்று இரவில் பாளை புதிய பஸ்ஸ்டான்டிற்கு வந்தடையும். இதற்கான பஸ் கட்டணம் நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் ஆகும். இதற்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் பாளை புதிய பஸ்ஸ்டான்டில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டண தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் தேவைக்கேற்ப "ஸ்பெஷல்' பஸ் வசதி செய்யப்பட உள்ளது. நெல்லை ஜங்ஷன் - திருவேங்கடநாதபுரம், நெல்லை ஜங்ஷன் - கருங்குளம், நெல்லை ஜங்ஷன் - எட்டெழுத்து பெருமாள் கோயில், நெல்லை ஜங்ஷன் - நம்பி கோயில் (வழி - நான்குநேரி, ஏர்வாடி திருக்குறுங்குடி), திருக்குறுங்குடி - நம்பி கோயில், அம்பை - அத்தாழநல்லூர், வீரவநல்லூர் - அத்தாழநல்லூர் வழித்தடங்களில் "ஸ்பெஷல்' பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, பக்தர்களும்,பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
3 comments:
நல்ல செய்தி அன்பரே...பகிர்வுக்கு நன்று...
நான் இப்போதுதான் திருப்பதி போய்விட்டு வந்தேன்..
நல்ல பகிர்வு
Thanks for an useful post
Post a Comment