Saturday, September 12, 2009

“ அப்பா மாமா ”


எப்போதாவது வீட்டுக்கு
வரும் உறவினரையெல்லாம்
சுரேஷ் மாமா,ரமேஷ் மாமா
என்று சொல்லி பழ(க்)கியதால்
‘அப்பா’ம்மா,’அப்பா’ம்மா
என்று அடித்து அடித்து
அறிமுகப்படுத்தினாலும்
‘அப்பா மாமா’ ‘அப்பா மாமா’
என்றே அழைக்கிறது
விடுமுறையில் வந்திருக்கும்
வெளிநாட்டில்
வேலை செய்யும் தந்தையை
நினைவு தெரிந்தநாள் முதல்
சந்தித்திராத குழந்தை.

9 comments:

லோகு said...

மெல்லிய சோகம் உள்ள கவிதை.. நல்லாருக்கு..

தங்கராசு நாகேந்திரன் said...

வலி மிகுந்த கவிதை ராஜா

manjoorraja said...

உண்மை
மனைவி குழந்தைகளை பிரிந்து தூர இடங்களில், வெளிநாடுகளில் வாழும் பலருக்கும் இந்த நிலை ஏற்படுவதோ உண்மைதான்.

venkat said...

குழந்தை ரெம்ப அழகு..

Anbu said...

:-((

Unknown said...

சோகமான கவிதை.. அழகாக இருக்கு

பா.ராஜாராம் said...

அருமையான கவிதை ராஜா!

அமுதா கிருஷ்ணா said...

நிஜம் தான்....ராஜா..மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது..

vasu balaji said...

இது பெரிய கொடுமையான வலிங்க.