ஆண்டுதோறும் செப்டம்பர் கடைசி ஞாயிறு உலக இதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பின் சார்பில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதயத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என்பது இந்த ஆண்டு இதய தினத்தின் நோக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிக உயிரிழப்புகள்: ஆண்டுதோறும் 1 கோடியே 75 லட்சம் பேர் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகிலேயே அதிக உயிரிழப்புக்கு காரணமான நோயாக இதய நோய்களே கருதப்படுகின்றன. இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் இதய நோய்களால் மரணமடைகின்றனர்.
பொருளாதார இழப்பு: இந்த ஆண்டு உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து இதய ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதய நோய் காரணமாக நடுத்தர வயதில் மரணமடைபவர்களால் அந்த குடும்பங்களுக்கு மட்டுமன்றி, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் இழப்பு. இந்தியாவில் மட்டும் இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு தடைவிதிப்பது, உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உலக பொருளாதார மன்றம், பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
நோய்களை தவிர்க்க...: முறையான உடற்பயிற்சி, சரியான உணவுப்பழக்கம் உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இதய நோயிலிருந்து பாதுகாக்கும். கொழுப்பு இல்லாத மீன், பருப்பு வகைகள், பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.
கட்டுப்பாடான எளிய வழிகளை கடைப்பிடித்து காப்போம் இதயத்தை.....
7 comments:
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் ராஜா, நினைவு கூர்தலுக்கு....
பிரபாகர்.
பயனுள்ள தகவல். நன்றிங்க ராஜா.
அருமையான பதிவு!
தகவலுக்கு நன்றி!
இவர்களின் முகவரியைத் தந்தால் நன்றாயிருக்குமே!
நல்லா இருக்கு ராஜா, வாழ்த்துக்கள்.
பிரயோசனமான பதிவு தந்தமைக்கு வாழ்த்துகள்.
பயனுள்ள தகவல். நன்றி ராஜா.
//ஆண்டுதோறும் 1 கோடியே 75 லட்சம் பேர் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர்.//
:(...
Post a Comment