ஒரு வரலாறே
வரலாறு பேசுகிறதே
ஆச்சர்ய குறி.
ஆம். நெடுநாளைய பயணத்திட்டம். இப்போதுதான் ஈடேறியுள்ளது.
நமது இந்தியநாட்டின் கலாசாரம், பண்பாட்டிற்கு ஈடான நதிக்கரை நாகரிகம் கொண்டது எகிப்து. இங்கு வந்தவுடனே பிரமிடுகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற மியூசியம் , மம்மிகள் பார்த்தாயிற்று. தலைநகரம் கெய்ரோ, தங்கியிருக்கும் அலெக்சாண்டிரியா நகரம் எல்லாம் ஓரளவு சுற்றியாயிற்று. பண்டைய எகிப்தின் வரலாற்று ஆதார இடங்களான கோயில்கள், அரண்மனைகள் நிறைந்த அஸ்வான், லோக்சூர் போன்ற இடங்கள் பார்க்க வேண்டுமானால் குறைந்தது ஒரு வார காலம் தேவை. எதிர்பாராத விதமாக ரமலான் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தது. நீண்ட நாள் கனவு கைகூடும் நேரம்.
விமானம், கப்பல் மூலம் சென்றால் குறிப்பிட்ட இடங்களை மட்டும்தான் பார்க்க முடியும். சாலை வழி பயணம் என்றால் நாம் விருப்பப்பட்ட இடங்களை எல்லாம் பார்க்கமுடியும் என்பதால் திடீர் ஏற்பாடாக நண்பர்கள் அறுவர் இதோ கிளம்பிவிட்டோம். இறைவன் அருளால் நல்லபடியாக பயணம் முடித்து வந்து அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
15 comments:
வயித்தெரிச்சல கெளப்பிட்டு கெளம்பராங்களே.....என்ஜாய்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
அருமையான பயணமாய் அமைய வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ராஜா.....பார்த்துவிட்டு வந்து பட்டைய கிளப்புங்க....
சுகமாய்ப் போய் வாங்கோ.வந்து நிறையக் கதை சொல்லணும்.
சந்தோஷமாக அமையட்டும் பிரயாணம்.
நண்பா,
வரலாறு படைத்து அனுபவங்களை அழகாய் எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள். பயணம் அருமையாய் அமைய எனது வாழ்த்துக்கள். காத்திருக்கிறேன் நீங்கள் ரசித்ததை வாசிக்க.
பிரபாகர்.
என்ஜாய்.!
நல்லபடியா போய்ட்டு வாங்க.
நான் வெயிட் பன்றேன்.
ஆமா எத்தன கிலோ வெயிட் பன்னட்டும்?
சரி பயணத்த முடிச்சிட்டு வாங்க.
நம்ம அராஜகசபைய கூட்டிருவோம்...
உண்மைதான்
பயணக் கட்டுரை எப்போது?
காத்திருக்கிறேன் நண்பா... உங்கள் பயண அனுபவத்தை கேட்க.... சென்று வாருங்கள்...
ஆஹா..சந்தோசமான பயணமாக இருக்கட்டும்,ராஜா.உங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்.பயணம் முடித்து வாருங்கள்.
என்ஜாய் என்ஜாய் என்ஜாய் என்ஜாய்
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் பயண கட்டுரையை....
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
பயணம் இனிதே அமையட்டும்
Post a Comment