Thursday, September 17, 2009

கதை சொல்லியின் கதை




இதயநோயால் அவதிப்பட்டு வந்த, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோ.சுவாமிநாதன். சென்னை, மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

கடந்த 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை, திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில், வேளாண் துறை இயக்குனராகப் பணியாற்றி, "வீடும் வயலும்' நிகழ்ச்சி வழங்கினார். பிறகு, உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், "இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில், மூன்று நிமிட நகைச்சுவை, சிந்தனைக் கதைகளைக் கூறி, பிரபலமானார்; கருத்துப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். "இலக்கணம்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன், போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12.40 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 68.சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்செல்வி, மருமகன் தமிழரசன், பேரன் நவீன் உள்ளனர்.


தென்கச்சி சுவாமிநாதனின் உடல், அவரது பூர்வீகமான தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர் கிராமத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.


4 comments:

பிரபாகர் said...

ராஜா,

எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர். மரணம் நிறையவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

எல்லா விவரங்களையும் இட்லி வடையில் முன்பாக படித்து தெரிந்து கொண்டேன்... இருப்பினும் உங்களின் பகிர்வுக்கு எனது வந்தனம்...

பிரபாகர்.

அ. நம்பி said...

தொலைக்காட்சியில் இவர் சொன்ன கதைகளைக் கேட்காதவர்கள் இருப்பார்களா என்பது ஐயமே.கேட்டவர்களால் இவரை மறக்க இயலுமா என்பதும் ஐயமே.

இனிய மனிதர்.

தங்கராசு நாகேந்திரன் said...

தகவல்களின் முடிவில் அவர் சொல்லும் நகைச்சுவைக்காக தொடர்ந்து கேட்டதுண்டு. அருகாமையில் அமர்ந்து பரிவுடன் கதை சொல்லும் ஒரு நெருக்கமான உறவினர்போல் தான் எனக்கு அவர் தெரிந்தார். அன்னாரது இழப்பு உண்மையிலேயே தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு. கதை சொல்லியின் கதை சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்

Anonymous said...

எனக்கு மிகவும் பிடித்தமான மனிதர். அவருடைய அன்பான எளிமையான குரல் என்றும் இனியது. பல ஆண்டுகளாக காலை 7.40-7.45மணிக்கு சென்னை வானொலியில் ஒலிபரப்பான அவரின் ‘இன்று ஒரு தகவல்’ கேட்டிராத நாட்கள் இருந்ததில்லை, அந்த ஐந்து நிமிடத்தின் கடைசியில் அவர் சொல்லும் நகைச்சுவை துணுக்குகள் இன்னும் நினைவில் இருக்கு.

May his soul rest in peace.