ஐ.நா., அதிகாரியை வெளியேற்ற இலங்கை பிடிவாதம்.
கொழும்பு: "ஐ.நா., அதிகாரி கொழும்பிலிருந்து, வரும் 21ம் தேதிக்குள் வெளியேறியே ஆக வேண்டும்' என்று, இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. ஐ.நா., குழந்தைகள் நிதியகத்தின் (யுனிசெப்) இலங்கை பிரிவுக்கான உயரதிகாரி ஜேம்ஸ் எல்டர். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இவர் அறிக்கை வெளியிட்டு செயல்பட்டு வருவதாக, இலங்கை அரசு குற்றம்சாட்டியது.
அவரது விசாவை, நேற்று முன்தினம் இலங்கை அரசு ரத்து செய்தது. அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வரும் 21ம் தேதி வரை, இலங்கையில் தங்க அனுமதி அளித்துள்ளது. இலங்கை அரசின் இந்த முடிவை, யுனிசெப் அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.இதுகுறித்து "யுனிசெப்' இயக்குனர் மற்றும் தகவல் தொடர்பு தலைமை அதிகாரி கூறியதாவது:ஜேம்ஸ் எல்டரின் வெளியேற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில், யுனிசெப் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஐ.நா.,வின் உயர்மட்டம் வரைக்கும் இவ்விவகாரத்தை கொண்டு செல்வதாக இருந்தும், அவருக்கு சட்டரீதியான கடிதத்தை வழங்கி, வெளியேற்றுவதிலேயே இலங்கை அரசு உறுதியாக இருக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------
சுமார் 2 கோடி மக்கள்தொகை கொண்ட குட்டி நாடு , இனவாதம் என்ற பெயரில் என்னவெல்லாம் சேட்டை செய்கிறது.
இது யார் கொடுத்த தைரியம் ?.
ஐநா என்ற அமைப்பு எதற்கு ??.
வலியோன் எளியோனை அடிப்பதை வேடிக்கை பார்க்கவா ???.
தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் ஐநாவின் நடுநிலைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் குறித்து மேலும் மேலும் யோசிக்க வைக்கின்றன.
4 comments:
ஐநா என்ற அமைப்பு ??.ஐயா +அமுக்கு =ஐநா
//தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் ஐநாவின் நடுநிலைத்தன்மையையும்,
நம்பகத்தன்மையையும் குறித்து மேலும் மேலும் யோசிக்க வைக்கின்றன.//
ஐ.நா. என்று ஓர் அமைப்பு இருந்தது; அது மாண்டுபோய் நீண்ட காலம் ஆகிறது; இப்போது அந்த அமைப்பின் எலும்புக்கூடு மட்டுமே எஞ்சி இருக்கிறது.
ஐ.நா.சபை, வல்லரசுகளின் அல்லக்கையாகி பலகாலமாகின்றது அண்ணே..!
எல்லாம் எல்லாருமே சும்மா.
Post a Comment