Wednesday, September 09, 2009

பத்திரிக்கை தர்மம் என்றால்....


நமீதா படம் எப்போ ரிலீசு ? நயன் தாரா இப்போ யார் கூட இதுதான் நம்ம தமிழ்நாட்டுப்பத்திரிக்கைங்க கவலை. இன அழிப்பு உச்சத்தில் இருந்தப்போ கூட அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவல்ன்னு ஈனச்செய்திகள் போட்டு அரிப்பை தீர்த்துகிட்டவங்க நம்மாளுங்க.

வட இந்திய பத்திரிக்கைகளூம், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுகிட்டு இனவாத அரசின் வெற்றியை எப்படி இடைவிடாம கொண்டாடுனாங்கன்னும் நமக்கு தெரியும்.

அநியாயத்தை தட்டி கேட்க,சுட்டி காட்ட தமிழனா,இந்தியனா இருக்கனும்கிற அவசியம் இல்லை.நல்ல மனுசனா இருந்தாப் போதும்.

ஏற்கனவே ஈழத்தமிழனை கண்ணைக் கட்டி சுட்டு கொல்றதை சானல் 4 ஒளிபரப்பி ஏற்படுத்தின பரபரப்பு இன்னும் அடங்கலை.இது குறித்த CNNன் செய்தி அறிக்கையை http://www.paristamil.com/tamilnews/?p=29996 என்ற சுட்டிக்கு சென்று பாருங்கள்.

இப்போ வன்னியில அகதி முகாம்கிற பேர்ல என்னென்ன அட்டூழியங்கள் நடக்குங்கறதை அல்ஜசீரா தொலைக்காட்சி தீவிரமா விசாரணை செய்து ஒரு செய்தி தொகுப்பா வெளியிட்டிருக்கு. செய்தி தொகுப்பின் சுட்டி http://www.paristamil.com/tamilnews/?p=32093. அதில் உள்ள Video என்பதை க்ளிக் செய்து அல்ஜசீராவின் வீடியோ செய்தி தொகுப்பை பார்க்கவும்.

இப்படியெல்லாம் செய்தி வெளியிடுறதுல இந்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு என்ன லாபம் ?. உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறைன்னு விளம்பரம் மூலம் சம்பாதிக்கிறாங்களா ? அநியாயத்தை உலக மக்களுக்கு தெரியப்படுத்தணும், நியாயத்துக்காக போராடணும்கிற பத்திரிக்கை தர்மம்தான் காரணம்.

முடிந்தால் இச்செய்திகளை நாலு நல்ல மனுசங்க அறிய தெரியப்படுத்துவோம்.

நம்ம தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் வழக்கம் போல சினிமா செய்திகளுக்கே முன்னுரிமை தரட்டும். மேலும் மேலும் வருமானத்தை பெருக்கட்டும்.

8 comments:

நாமக்கல் சிபி said...

Good Post!

Anbu said...

\\\சினிமா செய்திகளுக்கே முன்னுரிமை தரட்டும்.மேலும் மேலும் வருமானத்தை பெருக்கட்டும\\\


இவங்களை திருத்த முடியாது அண்ணா..

லோகு said...

ஆதங்கம் உண்மைதான் அண்ணா.. ஆனால் என்ன செய்ய முடியும்..

அ. நம்பி said...

//முடிந்தால் இச்செய்திகளை நாலு நல்ல மனுசங்க அறிய தெரியப்படுத்துவோம்.//

தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறோம்; இன்னும் செய்வோம்.

தீப்பெட்டி said...

உண்மைதான்..
:(

ஹேமா said...

ராஜா சாகிறவன் சாக இருக்கிறவன் பிழைச்சுக் கொண்டிருக்கிறான்.
எல்லாமே வியாபாரம்தான்.
ஈழத்தமிழன் உயிர் கூட.

தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல ஆழமான வரிகள் அனைத்தும் பத்திரிக்கைகள் அனைத்தும் தற்போது ஒரு பக்க சார்பாகவோ அல்லது ஆட்சியாளர்களுக்கு அடிவருடிகளாகத்தான் இருக்கின்றன. தமிழினம் அழிவதை தமிழ் பத்திரிக்கைகளே (குறிப்பாக தினமலர்(ம்) எழுதும் போது வடக்குப் பத்திரிக்கைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

உண்மை! நல்ல பதிவு!