அந்தத் தொடர்பதிவு 26 ஆங்கில எழுத்துக்களுக்கும் ஒரு பதில் தருவது.
சுவாரசியம்தானே!! இதன் விதிகள்:
1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.
இப்போ நாம ஆரம்பிப்போமா!!...
1. A – Avatar (Blogger) Name / Original Name : /ராஜா சபை / (துபாய்) ராஜா
2. B – Best friend? : மனதறிந்து நடப்பவன்/ள்.
3. C – Cake or Pie? : இரண்டுமே பிடிக்காது.
4. D – Drink of choice? : இளநீர்,பதநீர் (பார்லி நீர்) போன்ற இயற்கை பானங்கள்.....
5. E – Essential item you use every day? : காது (தினமும் காலையில அலாரம் சத்தம் கேட்டுத்தானே எழும்புறோம்)
6. F – Favorite color? - மிட்டாய் ரோஸ் கலர் ?! (திருமணத்திற்கு முகூர்த்தப்பட்டு ரோஸ் கலரில் எடுங்கள் என்று கூறிய என்னை என் மனைவி உட்பட எல்லோரும் முறைக்க ... அடுத்த மாதம் அதே நிற பட்டை ஜோதிகா-சூர்யா திருமணத்தில் முகூர்த்தப்பட்டாக கண்டு எல்லோரும் வியந்தனர்)
7. G – Gummy Bears Or Worms: என்ன கொடுமை சார் இது.
8. H – Hometown? - திருநெல்வேலி.
9. I – Indulgence? – எதிரிலிருப்பவரைப் பொறுத்தது..
10. J – January or February? - பிப்ரவரி மாதம் - பிறந்த மாதம் (காதல் மாதம்)
11. K – Kids & their names? - ஒண்ணே ஒண்ணு,கண்ணே கண்ணு பெயரும் எதுகை மோனைதான். ராஜா மகள் பூஜா.
12. L – Life is incomplete without? - Friendship (நல்லதோ,கெட்டதோ நாலு பேரு வேணும்ல..)
13. M – Marriage date? – மறக்ககூடிய சம்பவமா... . (http://rajasabai.blogspot.com/2006_07_01_archive.html)
14. N – Number of Siblings?( உடன்பிறப்புகள்) -அக்கா ஒண்ணு அண்ணன் ஒண்ணு. (இணையம் மூலம் ஏராளம்)
15. O – Oranges or Apples? – எதுனாலும் ஜூஸா..
16. P – Phobias/Fears? - பெண்கள்.(அம்மா முதல் கொண்டு) ஆழமின்னா ஆழமில்ல சேறும் கடலும் ஆழமில்ல.ஆழம் எது அய்யா.... அந்த பொம்பள மனசு தான்யா.....
17. Q – Quote for today? – அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்......
18. R – Reason to smile? – உணர்ச்சிகளின் வெளிப்பாடு. (வெற்றியானாலும்,விரக்தியானாலும்)
19. S – Season? - குற்றால சீசன் தான். (திருநெல்வேலிகாரன்ட்ட கேக்குற கேள்வியால இது..)
20. T – Tag 4 People?- (யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)
1.பல்சுவை பதிவர் – தங்கராசு நாகேந்திரன்.
2.நையாண்டி மன்னன் - நையாண்டி நைனா.
3.நகைச்சுவை ராணி - (சந்திரமுகி) கலகல ப்ரியா .
4.நண்பர் - கடையம் ஆனந்த்.
21. U – Unknown fact about me? – எங்கே செல்லும் இந்தப்பாதை...
22. V – Vegetable you don't like? - முள்ளங்கி
23. W – Worst habit? - ஓய்வில்லாமல் உழைப்பது (பொழுதுபோக்கிற்காக இணையத்தில்... :))... )
24. X – X-rays you've had? - எண்ணிக்கை இல்லை.(கைகால் முறிவுகளுக்கும்,விசா மருத்துவ சோதனைகளுக்கும் பல முறை)
25. Y – Your favorite food? – சுடச்சுட கூட்டாஞ்சோறு.
26. Z – Zodiac sign? - கும்ப ராசி,சதய நட்சத்திரம்..
தொடருங்கள் நண்பர்களே.....
6 comments:
பதில்கள் அட்டகாசம்..
ராஜா மகள் பூஜா.. அருமை.. (பேர் வச்சது யாரு நீங்களா, அண்ணியா)
இதுலையே தமிழ் உயிர் எழுத்துக்கும் கேள்விகள் இருந்ததே.. அதை விட்டுடீங்களா.. (அரவிந்த் அண்ணாவும் எழுதவில்லை)
சிரிப்புக்கான விளக்கம் அருமை ராஜாண்ணே..அதுதான் டாப்பு.
இப்போதான் கவனிக்கிறேன்.. நீங்க பழைய பதிவுலக சீனியர் 'லொச்சா' பார்ட்டியா? 2006லேயே கல்யாணம் வேற ஆயிப்போச்சா?
நா வேற புதுசா வந்த யூத்துனுலா நினைச்சுப்போட்டேன். அடடா..
அருமை .
எழுதியிருவோம். நன்றி.
எல்லாமே நல்லா இருக்கு
திருநெல்வேலியா ....
சொல்லவே இல்லை ....
நண்பர் தங்க ராசு மூலமா என்னையையும் மாட்டிவிட்டிங்களே
ம்ம்ம் நடத்துங்க ...
ஜோதியில ஐக்கியமாயிருவோம்
Post a Comment