Sunday, September 06, 2009

காதல் (அப்)பாவி

உடல்
பொருள்
ஆவி.

ஒருங்கே
எடுத்தாள்
பாவி.
------------------------------------
புரண்டு
புரண்டு
படுத்தேன்.
தூக்கம்
வரவில்லை.

பெண்ணே
உன்னை
நினைத்தேன்.
படுக்கவும்
முடியவில்லை.

--------------------------------------------

இதயம்
துடிக்கும்
எந்திரம்.


எப்போதும்
சொல்லும்
உன் பெயரெனும்
மந்திரம்.

5 comments:

லோகு said...

தொடர்ந்து காதல் கவிதையே எழுதி, தான் யூத் என பொய் சொல்லும், ராஜா அண்ணாவை வன்மையாக கண்டிக்கிறேன்..

இப்படியே போனா நான் எல்லாரையும் அண்ணி ன்னுதான் கூப்பிடனும் போல.. :((

அ. நம்பி said...

//உடல் பொருள் ஆவி.
ஒருங்கே எடுத்தாள் பாவி.//

விரும்பியே அனைத்தையும் கொடுத்துவிட்டு அந்த அப்பாவியைப் `பாவி' என்று சொல்வது அடுக்குமா? பாவம் அவள், ஏதும் அறியாள்!

//எப்போதும் சொல்லும் உன் பெயரெனும் மந்திரம்.//

மந்திரம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்; பலிக்காவிட்டால் ஏதேனும் தந்திரம் செய்யும் உத்தேசம் உண்டா?

தங்கராசு நாகேந்திரன் said...

படத்த பாக்கும் போது எனக்கும் கவித அருவியா கொட்டுதுங்க அத எழுத நினைக்கும் போது தான் உங்கள மாதிரி வார்த்த வரமாட்டேங்குது

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

இரசம்... காதல இரசம்...! அருமை!

ஹேமா said...

இது ரொம்பக் கஸ்டம்.