ஏதும் அறியாத
என்னை
எல்லாம் அறிய
வைத்தவள் நீ.
சின்னப்பையன்
என்னை
சின்னாபின்னம்
ஆக்கியவள் நீ.
தொலைக்காட்சி
பார்க்கவந்த
போதெல்லாம்
தொல்லைகள் பல
தந்தவள் நீ.
முத்தம்
மட்டுமல்ல
மொத்தமும்
உணரவைத்தவள் நீ.
மூன்றாம்பிறை
ஸ்ரீதேவி போல்
முழித்து முழித்து
குணா கமல்
போல் என்னை
குழப்பியவள் நீ.
பக்கத்து வீட்டில்
இருந்தாலும்
பக்கா ஆத்து குடி
சேர்ந்தவள் நீ.
நம் காதல்
நெருங்கி வந்த நேரம்
நெருங்க முடியா தூரம்
சென்றவள் நீ.
என் திருமணத்திற்கு
மணி ஆர்டர் அனுப்பி
மனம் ஆறாத்துயரம்
தந்தவள் நீ.
சிந்தனையெலாம்
நிறைந்த சின்னவளே
உன்னை இந்த
மண்ணுலகம்
இருக்கும் வரை
மறக்குமா
என் மனம்.
13 comments:
அப்படியா சங்கதி.. மாமி என்ன ஆனாங்க..
இந்த ஆட்டோகிராப் விஷயம் அண்ணிக்கு தெரியுமா
Raittuuuuu..
:-)
ஹிஹி...ஆட்டோகிராஃபா..நடக்கட்டும்..நடக்கட்டும்!! :-)
\\நெருங்கி வந்த நேரம்
நெருங்க முடியா தூரம்
சென்றவள் நீ.\\
இதுதான் சூப்பர்.
ரொம்ப புடிச்சுருக்கு.
\\நெருங்கி வந்த நேரம்நெருங்க முடியா தூரம்சென்றவள் நீ.\\
இதுதான் சூப்பர்.
ரொம்ப புடிச்சுருக்கு.
.....ஏன் படைத்தானோ இறைவனும் என்னை,
மனதில் எனக்கு நிம்மதி இல்லை..
ராஜா என்பார், மந்திரிஎன்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள - ஒரு
“மாமியும்” இல்லை வாழ...
யாரு ராஜா அது
அந்த மோகினியா
கவிதை சும்மா நச்சுன்னு இருக்கு
ராஜா,சாப்பிட்டீங்களா.ரொம்பக் கவலையோ.சரி...சரி மனசை ஆத்திக்கோங்க.
வரிகள் கோர்த்த விதம் அழகு ஸ்ரீதேவி போலவே.
ராஜா....எகிப்துநாட்டு இளவரசிகளைப் பார்த்ததும் உங்கள் கடந்த கால காதலியின் நினைவு வந்துவிட்டதோ...?
சரி.
//என் திருமணத்திற்கு
மணி ஆர்டர் அனுப்பி
மனம் ஆறாத்துயரம்
தந்தவள் நீ.//
அப்படியா சங்கதி ....கவிதை சூப்பர் ...
நல்லா சொன்னீங்க,இஸ்மத்...நமக்கும் அதே சந்தேகம்தான்.பத்ரம் மக்கா.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
Post a Comment