"ஏன் சார், 'அந்த' வீட்டையா போய் பார்த்திங்க" என்று மாரியப்பன் கேட்டு “விவரம்” கூறியபோது எனக்கு உடம்பெல்லாம் மறுபடியும் ஒருமுறை புல்லரித்தது.
ஊத்துமலையில் காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பொழுது தினமும் ஊரிலிருந்து சென்றுவர காலை மூன்று மணிநேரம், மாலை மூன்று மணி நேரம் பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. வழக்கமாக செல்லும் பேருந்தை தவறவிட்டால் பயணநேரம் கூடிவிடும். காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்ப வேண்டும். இரவும் வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு தூங்க இரவு மணி பதினொன்றாகி விடும். மிகவும் கஷ்டமாக இருந்தது.
பக்கத்திலே வீடு பார்த்து சென்றுவிடலாம் என முடிவு செய்து உள்ளூர் நண்பர்களிடம் வீடு பார்க்க கூறினேன். எத்தனையோ வீடுகள் பார்த்தும் திருப்தியாக இல்லை.ஒருநாள் உடன் பணிபுரியும் வெளியூர் நண்பர் ஒருவர், ”சார் மேலமருதப்பபுரம் பிள்ளையார் கோயில் பக்கத்துல ஒரு புது வீடு இருக்குன்னு பஸ்ல வரும்போது ஒருத்தர் சொன்னாரு. தண்ணி வசதியெல்லாம் நல்லா இருக்காம். வேணும்னா போய் பாருங்க” என்றார்.
பிள்ளையார் கோயில் மெயின் ரோட்டில் இருப்பதால் அடிக்கடி அந்த வழியே வேலை விஷயமாக காரில் செல்லும்போது பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் போடுவது வழக்கம். சரி அந்த தெரு உள்ளேதானே இன்றே போய் பார்த்து விடவேண்டும் என முடிவு செய்தேன்.
அன்று மாலை வேலை முடித்து கிளம்ப ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அடுத்த பேருந்து ஏழு மணிக்குதான் வரும் என்பதால் இடைப்பட்ட நேரத்தில் அந்த வீட்டை போய் பார்த்து விடலாம் என முடிவு செய்து ஓட்டுநரிடம் “சுப்பிரமணி, வண்டி எடுங்க, மேலமருதப்பபுரத்துல ஒரு வீடு இருக்காம். ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடலாம்.” என்று கூறியவாறு சுமோவில் ஏறி அமர்ந்தேன்.
பிள்ளையார் கோயில் வந்ததும் சுமோவை நிறுத்தச்சொல்லி “நீங்க வண்டியை திருப்பிட்டு இங்கேயே இருங்க. பஸ் வர்ற சத்தம் கேட்டதுன்னா ஹாரன் அடிங்க. நா உடனே வந்துடறேன்” என்றவாறு கோயிலை ஒட்டி இருந்த தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
பிள்ளையார் கோவிலில் பூசாரி இன்னும் வரவில்லை. அந்த தெருவினுள் கொஞ்சம் தள்ளி ஒரே ஒரு வீடுதான் தெரிந்தது. சரி அதுவாத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டே நடந்தேன். அந்த தெருப்பாதை தோட்டங்களுக்கு செல்லக்கூடியது. இருட்டும் நேரம் என்பதால் எல்லோரும் தோட்டங்களில் இருந்து திரும்பியிருந்தார்கள். ஜன நடமாட்டமே இல்லை.
வீடு புதிதாக, பெரியதாக இருந்தது. வீட்டின் பின்புறம் பெரிய கிணறும் தோட்டமும் தெரிந்தது."அய்யா,அய்யா" என்று அழைத்தேன். பதிலே இல்லை. வீட்டினுள் யாரும் ஆள் இருப்பது போல் தெரியவில்லை. முன்கதவும் அடைத்திருந்தது. சரி பின்புறம் தோட்டத்தில் நிற்பார்களோ என்ற எண்ண்த்தில் வீட்டின் பக்கவாட்டு வழியாக பின்னோக்கி சென்றேன்.
அங்கு ஒரு விசித்திரமான காட்சி கண்டேன். கிணற்றின் சுற்றுச்சுவர் மேல் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். பெண் என்றால் இளம்பெண். பதினேழு அல்லது பதினெட்டு வயதுதான் இருக்கும். வெள்ளை நிறத்தில் சுரிதார் அணிந்திருந்தாள். அந்த கருக்கல் நேரத்தில் அப்போதுதான் தலைக்கு குளித்தவள் போல நீண்ட கருங்கூந்தல் விரிந்துகிடந்தது. சாம்பிராணி போட்டதுபோல் ஒரே புகைமூட்டம். மல்லிகை,சம்பங்கி என ஒரு கதம்பமான வாசனை. அப்படி ஒரு சூழ்நிலையை நான் அதுவரை கண்டதேயில்லை. அந்த பெண் எழுந்து என்னை நோக்கி மெதுவாக வந்தாள்.
நல்ல உயரமாக சிவந்த நிறமாக காண்போரை கவரும் இயற்கையான அழகு. ஒரு வனதேவதை போல் இருந்தவளைக் கண்டு எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. "ஆஹா, ஆஹா, என்ன அழகு" என் மனம் மயங்கி அப்படியே அசைவற்று நின்றேன். பேச்சே வரவில்லை. அவளோ என்னை நெருங்கி கொண்டிருந்தாள்.
( திகில் தருணங்கள் தொடரும்...... )
16 comments:
ஆவ்வ்வ்வ்வ்வ்! பயமாயிருக்கு...
நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்னு சொல்லலையே?!! :-)
அண்ணே, அமானுஷ்ய அணுபவமா..?
இல்ல, காமெடியா முடிக்க போறீங்களா..!
புரியல..
அடுத்த பார்ட் படிச்சா தெரிஞ்சுரும்ல..வெயிட்டிங்.
லக லக லக......................
// சந்தனமுல்லை said...
ஆவ்வ்வ்வ்வ்வ்! பயமாயிருக்கு...
நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்னு சொல்லலையே?!! :-)//
சகோதரி சந்தனமுல்லை...படிக்கிற உங்களுக்கே பயமாயிருக்குன்னா பக்கத்துல நின்ன எனக்கு எவ்வளவு படபடப்பா இருந்திருக்கும்....
// டக்ளஸ்... said...
அண்ணே, அமானுஷ்ய அணுபவமா..?
இல்ல, காமெடியா முடிக்க போறீங்களா..!
புரியல..
அடுத்த பார்ட் படிச்சா தெரிஞ்சுரும்ல..வெயிட்டிங்//
தம்பி டக்ளஸ்,வாழ்வில் மறக்க முடியாத ஒரு அ(ம்)மானுஷ்ய அனுபவம்தான். நாளைக்கு மீதிய படிச்சிட்டு சொல்லுங்க....
// லோகு said...
லக லக லக....................//
ஆமா லோகு,அந்த நேரம் எனக்கு "கலகல"த்து போயிட்டு....
எச்சூஸ் மீ... இப்படி பேய் கதைலாம் சொல்லாதீங்க.... எனக்கு பயமா இருக்கு....
சிலுக்கு சுமிதாவிடம் அப்படி என்ன கோபம் உங்களுக்கு?
கிளைமாக்ஸ் நாளைக்கா? தாங்காது ராஜா ... ! அருமையான நடை ...சொன்ன முறை கோர்வையாக, போரடிக்காமல் .... வாழ்த்துக்கள்!!!!!!!
வெள்ளை நிறத்தில் சுரிதார்ன்னு சொல்லிட்டு சேலை போட்டோ போட்டிருக்கீங்களே...?
அது சரி எப்ப எகிப்துலே இருந்து வந்தீங்க...?
ராஜா...நீங்களுமா...?
innoru vinaiyookki vaazhga vaazhga
பதிவுலக பிடி சாமி பேய்க்கதை மன்னர் வினையூக்கியின் இளவல் துபாய் ராஜா வாழ்க!
ரொம்ப நாளுக்கு அப்புறம் சில்க்கை ஞாபகப் படுத்தியிருக்கீங்க.நன்றி ராஜா.நான் பேய்க்க் கதையெல்லாம் படிக்கமாட்டேன்.பயமாயிருக்கு.
நான் கூட அந்த கிணத்துல வேற என்னமோ நினைச்சேன்...
படிக்கும் போதே படபடவென இருக்கு அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
Post a Comment