Friday, September 18, 2009

ஏதோ மோகம் - பாகம் 3




நானும் அவர்களருகே சென்று ரமேஷ் அருகே காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.”சார்,இது ராதா” என்றான் சேகர். ”அதான் காலையிலே சொன்னாங்கள்ல” என்ற என்னைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். ”காலையில டீ பிரேக்ல நீங்க வெளியே வரலலை.அதான் உங்ககிட்ட அறிமுகப்படுத்த முடியலை.ராதா என்னோட தங்கச்சி.சித்தப்பா பொண்ணு” என்றதும் என் மனதில் ஏதோ இனம்புரியாத நிம்மதி.


”சார் பேரு ராஜா. எங்க ஃபேக்டரி இன்சார்ஜ். பாசுக்கு அடுத்தது இவர்தான். டிசைன், பிளானிங், புரொடக்சன், குவாலிட்டி, டெஸ்ட்டிங், டெஸ்பாட்ச் எல்லாம் பார்க்கிறார். இவருக்கு கீழேதான் நாங்க ஒரு பத்து இன்சினியர்ஸ் இருக்கோம்” என்று அவளிடம் என்னை சேகர் அறிமுகப்படுத்தினான்.”அப்போ ஆல் இன் ஆல் அழகு ராஜான்னு சொல்லுங்க” என்று அவள் கூறியதும் அனைவரும் சிரித்தோம்.சாப்பிட்டு முடிக்கும் வரை கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தாள்.


அவர்கள் முன்னமே வந்துவிட்டதால் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டனர்.கைகழுவச் செல்லாமல் எனக்காக காத்திருந்தவர்களை நீங்கள் போய் கை கழுவுங்கள் என்று அனுப்பி வைத்தேன்.ஐஸ்கிரீம் எடுத்துகொண்டு அவளும்,சேகரும் என்னருகே வந்தார்கள்.”நான் என் கம்பெனி ஆள்களோடு சென்று கொஞ்சம் டிஸ்கஸ் செய்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.


என் எதிரே அமர்ந்த சேகரிடம் “ரமேஷ், எங்கே ?” என்றேன்.”சார், அவனால சாப்பிட்டவுடன் சிகரெட் அடிக்காம இருக்க முடியாது.அதான் வெளியே போய் ஒரு தம் போட்டு வர்றேன்னு போயிருக்கான்” என்றான்.


நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மற்ற நிறுவனங்களை சேர்ந்த சிலருடன் பேசியவாறே ராதா அவள் கம்பெனி ஆள்களோடு சென்று அமர்ந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த இடம் கலகலப்பாக இருந்தது. அவ்வப்போது வெடிச்சிரிப்பும் கிளம்பியது. அதைக் கவனித்தவாறே சேகர் “பாவம் சார் அந்த பொண்ணு” என்றான்.”ஏன்ப்பா,நல்லா சந்தோஷமாத்தானே இருக்கு” என்ற என்னிடம் “இல்ல சார். வெளியேதான் அப்படி சந்தோஷமா இருக்கமாதிரி காமிச்சிக்கிறா” என்றவனை புரியாமல் பார்த்தேன்.

(தொடரும்)


6 comments:

கிளியனூர் இஸ்மத் said...

தொடரா...? தொடருங்கள்...!

பிரபாகர் said...

//ராதா என்னோட தங்கச்சி.சித்தப்பா பொண்ணு” என்றதும் என் மனதில் ஏதோ இனம்புரியாத நிம்மதி.//

நல்லா பரபரப்பாத்தான் கொண்டு போறீங்க... அடுத்ததற்கு ஆவலாய் உள்ளேன்... பதிவேற்றுங்கள்...

பிரபாகர்.

இரும்புத்திரை said...

suspense kalakkal

vasu balaji said...

எதிர் பார்ப்பைத் தூண்டும் நடை. அசத்துங்க ராஜா.

Raju said...

இது என்ன போயிட்டே இருக்கு...!

சண்முகம் said...

இப்பெல்லாம் என்னன்னே தெரியல, லவ் சப்ஜக்ட் னாலே எனக்கு படிக்க விருப்பமா இருக்கு.