Tuesday, January 26, 2010

குடி அரசு

குடியே வாழ்க்கை என கொண்டாடுவோரும்
அரிசி வாங்கவே அனுதினம் தவித்திடுவோரும்
குடிகளுக்கு அரசராய் சல்லிசு சலுகைகள்
அள்ளி வழங்கிடும் அரசியல்வியாதிகளும்
அரசு குடிகளாய் மாறிட்ட அதிகாரிகளும்
இனமானம் ஏலம்போடும் ஈனத் தொலைக்காட்சிகளும்
நினைந்து நினைந்து கசந்திடும் மனதின்
ஏதோ ஒரு அடிஆழத்தில்
குழந்தைப்பருவத்தில்
கொடி ஏற்றிய போது
வரிசையில் நின்று
வாங்கி தின்ற மிட்டாயின் இனிப்பு.

8 comments:

லோகு said...

ம்ம்ம்ம்...

ஹேமா said...

அரசியல்....ம்ம்ம்.
எங்கள் நாட்டிலும் தேர்தலாம் !
ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்பதுபோல !

துபாய் ராஜா said...

//லோகு said...
ம்ம்ம்ம்... //

ம்ம்ம்ஹூஹூம்ம்ம்ம்ம்ம்.....

Starjan (ஸ்டார்ஜன்) said...

குடியரசு தின வாழ்த்துக்கள்

Paleo God said...

மிட்டாய்லாம் போய் அல்வா வந்தாச்சு..:)))

பிரபாகர் said...

நினைத்து வேதனைப்படத்தான் முடியும் ராஜா...

என் கனவெல்லாம், என் உயிர் மூச்சிலேயே ஒரு வளமான, வலிமையான இந்தியாவை பார்த்துவிடவேண்டும் என்பதுதான். வேண்டுவோம்.

பிரபாகர்.

கலகலப்ரியா said...

:)

சிநேகிதன் அக்பர் said...

என்ன செய்ய‌