லட்சம், கோடி என
எனதினிய நண்பர்கள்
ஏணிகள் பல
ஏறிக் கொண்டு
இருக்கும் போது
பதிவுலகம் வந்து
ஆண்டுகள் ஐந்தானாலும்
பத்தாயிரம் பார்வை
பெற்றது இன்றுதான்.
ஏனின்னும் வைக்கவில்லை
ஃபாலோயர் விட்ஜெட்டு பலகை
எத்தனையோ நண்பர்கள்
கேட்டிட்டார் தினம் தினம்...
கன்னி மொழி
அறிந்த அளவு
கணிணி மொழி
அறியாத காரணத்தால்
குழம்புது என் மனம் மனம்..
எவ்வளவோ முயற்சித்தும்
வலைப்பூவின் வண்ணம்
மாற்ற முடியாமல்
ஏற்றி வருகிறேன்
எனது பல எண்ணம்...
புதிய வலைப்பூ தொடங்கிட
அன்பு நண்பர்கள்
ஆலோசனை கூறியும்
ஒப்ப மறுக்கும் எனதுள்ளம்
உதவி யாராவது செய்திட்டால்
இனிதே துள்ளும்.
பணிப்பளு
பார வலி
போக்கவும்
அன்னை தமிழ்
கேட்க ,பேச
இயலாமை
பதிவெழுதி தணித்து
வரும் இந்த அடியேனை
ஊக்கம் தந்து
உற்சாகப்படுத்தும்
அன்பு உள்ளங்களுக்கு
நன்றிகள் பல...
மின்னியலான் என்னை தங்கள் மென்னியல் அறிவால் தொடர்பாளர்களாக இணைத்து கொண்ட வலையுலக நண்பர்கள் அத்திரி, அரூர், ஆதிமூலகிருஷ்ணன், ராஜூ, லோகு, பா.ராஜாராம், பித்தனின் வாக்கு, பிரபாகர், ஜெட்லி, ஜெகன்குமார், ஜீவா, கலகலப்ரியா, கரிசல்காரன், மனோ மற்றும் விஜய் ஆனந்திற்கு எனது அன்பு வணக்கங்களும் நன்றிகளும்.
எனதினிய நண்பர்கள்
ஏணிகள் பல
ஏறிக் கொண்டு
இருக்கும் போது
பதிவுலகம் வந்து
ஆண்டுகள் ஐந்தானாலும்
பத்தாயிரம் பார்வை
பெற்றது இன்றுதான்.
ஏனின்னும் வைக்கவில்லை
ஃபாலோயர் விட்ஜெட்டு பலகை
எத்தனையோ நண்பர்கள்
கேட்டிட்டார் தினம் தினம்...
கன்னி மொழி
அறிந்த அளவு
கணிணி மொழி
அறியாத காரணத்தால்
குழம்புது என் மனம் மனம்..
எவ்வளவோ முயற்சித்தும்
வலைப்பூவின் வண்ணம்
மாற்ற முடியாமல்
ஏற்றி வருகிறேன்
எனது பல எண்ணம்...
புதிய வலைப்பூ தொடங்கிட
அன்பு நண்பர்கள்
ஆலோசனை கூறியும்
ஒப்ப மறுக்கும் எனதுள்ளம்
உதவி யாராவது செய்திட்டால்
இனிதே துள்ளும்.
பணிப்பளு
பார வலி
போக்கவும்
அன்னை தமிழ்
கேட்க ,பேச
இயலாமை
பதிவெழுதி தணித்து
வரும் இந்த அடியேனை
ஊக்கம் தந்து
உற்சாகப்படுத்தும்
அன்பு உள்ளங்களுக்கு
நன்றிகள் பல...
மின்னியலான் என்னை தங்கள் மென்னியல் அறிவால் தொடர்பாளர்களாக இணைத்து கொண்ட வலையுலக நண்பர்கள் அத்திரி, அரூர், ஆதிமூலகிருஷ்ணன், ராஜூ, லோகு, பா.ராஜாராம், பித்தனின் வாக்கு, பிரபாகர், ஜெட்லி, ஜெகன்குமார், ஜீவா, கலகலப்ரியா, கரிசல்காரன், மனோ மற்றும் விஜய் ஆனந்திற்கு எனது அன்பு வணக்கங்களும் நன்றிகளும்.
எனது வலைப்பூவை தொடர விருப்பப்படும் நண்பர்களுக்கு ஒரு தகவல். எனது பிளாக் ஐந்து ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது என்பதால் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் சேர்க்க முடியவில்லை. பலமுறை முயற்சி செய்ததில் தேவையற்ற மாற்றங்கள்தான் ஏற்பட்டன. உதாரணமாக 2006 முதல் பதிவிட்டு வருகிறேன்.பெட்டகத்திலும் 2006 முதல் பதிவுகள் உள்ளன.ஆனால் புரோபைலில் 2007 என்று மாறி விட்டது. என்ன செய்வது என தெரியாமல் அப்படியே விட்டுவிட்டேன்.
ஒரு சிறிய எளிய வழி.உங்கள் Dash Boardல் Reading Listன் கீழே உள்ள ADDஐ கிளிக் செய்தால் Add blogs to follow வரும்.அதில் எனது URLஐ (http://rajasabai.blogspot.com) கொடுத்து விட்டால் எனது
ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் சேர்ந்து எனது பதிவுகளும் தொடர்ந்து கிடைக்கப்பெறுவீர்கள்.
ஒரு சிறிய எளிய வழி.உங்கள் Dash Boardல் Reading Listன் கீழே உள்ள ADDஐ கிளிக் செய்தால் Add blogs to follow வரும்.அதில் எனது URLஐ (http://rajasabai.blogspot.com) கொடுத்து விட்டால் எனது
ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் சேர்ந்து எனது பதிவுகளும் தொடர்ந்து கிடைக்கப்பெறுவீர்கள்.
நன்றி. வணக்கம்.
19 comments:
தலைவா, நீங்களுமா ஹிட்ஸ், கமெண்ட்ஸ் எல்லாம் கணக்கிலெடுத்து கொள்கிறீர்கள். எழுதுவது சுய திருப்திக்குத்தான் என்றபின் ஹிட்சில் என்ன இருக்கிறது.
// லோகு said...
தலைவா, நீங்களுமா ஹிட்ஸ், கமெண்ட்ஸ் எல்லாம் கணக்கிலெடுத்து கொள்கிறீர்கள். எழுதுவது சுய திருப்திக்குத்தான் என்றபின் ஹிட்சில் என்ன இருக்கிறது..//
சரியா சொன்னீங்க லோகு. எவ்வளவு எழுதறோம்கிறது முக்கியமில்லை. என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம்.
நமது பதிவுகள் நமக்கே படிக்க பிடிக்க வேண்டும். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுத வேண்டும் என்பதும் எனது கொள்கை.
ஃபாலோயர்ஸ் விட்ஜெட் வைக்க சொல்லி கேக்கிற அன்பு உள்ளங்களுக்கு ஒரு அறிவிப்பு அம்புட்டுதான். இந்த பதிவில் வேறெந்த வரலாறு,புவியியலும் இல்லை. :))
//
ஃபாலோயர்ஸ் விட்ஜெட் வைக்க சொல்லி கேக்கிற அன்பு உள்ளங்களுக்கு ஒரு அறிவிப்பு அம்புட்டுதான்//
அறிவிப்பு செஞ்ச அன்பு உள்ளத்துக்கு ஒரு வாழ்த்து...
சேக்கு மாதிரி(மாதிரிதான்) இருந்த profile படத்தை ஏன் மாத்திடீங்க??
:)
Congrats Buddy!
எறும்பு said...
//அறிவிப்பு செஞ்ச அன்பு உள்ளத்துக்கு ஒரு வாழ்த்து...//
எங்க ஊரு எறும்பாரின் வரவு குறித்து மிக்க மகிழ்ச்சி.
//பழமைபேசி மொழிந்தது...
Congrats Buddy!//
பழமையாரின் வாழ்த்து மிகப்புதுமை.
அதில் எனக்கு ரொம்ப பெருமை.
எந்த வனம் போனாலும் இனத்தோட சேரணும்.நம்ம சபைக்கு அடிக்கடி பழமையார் வரணும்.
வரவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி பழமை பேசி அண்ணா.
// எறும்பு said...
சேக்கு மாதிரி(மாதிரிதான்) இருந்த profile படத்தை ஏன் மாத்திடீங்க??
:)//
பேக்குரவுண்ட் இந்த புது படத்துல நல்லா இருக்கிற மாதிரி தெரிந்தது. அதான் எறும்பாரே... :))
வாழ்த்துக்கள் ராஜா... என் இதயத்தில் என்றும் நீங்கள் உண்டு... உங்களின் அன்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உமது நட்பால் பெருமை அடைகிறேன்.
பிரபாகர்.
// எறும்பு said...
சேக்கு மாதிரி(மாதிரிதான்) இருந்த profile படத்தை ஏன் மாத்திடீங்க??
:) //
நல்ல வேளை சேக்கு மாதிரின்னு சொன்னீங்களே. :)) தங்கமணி, ஒரு நாள் கடுப்புல பேக்கு மாதிரி இருக்குன்னுட்டாங்க.. :((
பத்தாயிரம் பத்து லட்சமாக வாழ்த்துக்கள்
//நல்ல வேளை சேக்கு மாதிரின்னு சொன்னீங்களே. :)) தங்கமணி, ஒரு நாள் கடுப்புல பேக்கு மாதிரி இருக்குன்னுட்டாங்க.. :((//
எல்லோரும் அவங்க மாதிரி உண்மை பேச முடியாது.. :)))))))))
தொடரட்டும் உங்கள் பணி....
நானும் கேட்கனும்னு நினைச்சேன்...
நீங்க சொன்னமாதிரி பண்ணிட்டாப்போச்ச... எவ்வளேவோ பண்ணிட்டோம்...
என்னையும் உங்க கூட்டத்துல சேர்த்துகிடுங்க.
:D... follower widget-ku oru vazhi kandu pudikkaama vittuduvomaa.. irunga irunga..
வாழ்த்துக்கள்.
அடேடே ஒரு குறிப்பிடத் தகுந்த லான்ட் மார்க்கை எட்டியிருக்கீங்க... இன்னும் பல பத்தாயிரங்கள் விரைவில் தொடரட்டும்.
http://kgjawarlal.wordpress.com
Post a Comment