பாபநாசம் மலைமேல் அமைந்துள்ள எங்கள் சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்த சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடிஅமாவாசை மிகவும் விசேஷமான திருவிழா.
பல லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு மலைமேல் தற்காலிக குடில் அமைத்து குறைந்தது ஒரு வாரமாவது தங்கி அய்யனை தரிசித்து மகிழ்வது பலஆண்டுகளாக பழக்கத்தில் உள்ள ஒன்று.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இந்த திருவிழாவின் போது மட்டும் மக்களால் நிறைந்திருக்கும்.மாவட்ட நிர்வாகமும்,வனத்துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்திருப்பார்கள். மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துக்கள் மலையின் மேலும்,கீழும் வந்த வண்ணம் இருக்கும்.
இது குறித்த சுட்டி
விழாவின் முக்கிய அம்சமாக எங்கள் சிங்கம்பட்டி ஜமீன்தார் இரவில் பாரம்பரிய ராஜஉடையில் சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களை சந்திப்பார்.
சென்ற வருடம் இருசக்கர வாகனத்திலும்,அதற்கு முந்தைய வருடம் சுட்ட செங்கல்களால் அமைக்கப்பட்ட பழைய ஜமீன் காட்டு பாதையில் நடந்து சென்றும் அய்யனை தரிசித்தேன்.இந்த வருடம் முடியவில்லை. அடுத்த வருடமாவது ஆடிஅமாவசையன்று தரிசிக்க அய்யன் அருள் புரியவேண்டும்.
2 comments:
சபரிமலைக்குப் போகும் அடியேன் கடந்த 12 வருடங்களில் (ஒருமுறை தவறவிட்டுள்ளேன்) வந்து ஒருநாள் முழுவதும் தங்கி இருமுடிகட்டிச் செல்வது வழக்கம். அருமையான மனதுக்குப் பிடித்த இடம்! படங்கள் போட்டிருக்கலாமே! ஒரு தடவை வனப்பகுதியின் ஆரம்ப நுழைவாயிலில் ஓரிரவைக் கழித்தோம்! 150க்கும் மேற்பட்டோர் வந்திருந்த வாகனங்களினுள்ளும் வெளியிலும் இரவு தூங்கினோம் - அன்று இரவு பனியில் நாம்பட்ட அனுபவம் மறக்க முடியாது! நன்றிகளும் வாழ்த்துக்களும்!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.தங்கமுகுந்தன்.படங்கள் அனைத்தும் ஊரில் உள்ளன. அடுத்தமுறை ஊருக்கு செல்லும்போது எடுத்துவந்து தனிப்பதிவாக இடுகிறேன்.
நானும் சில இரவுகளை அந்த வனப்பகுதியில் கழித்துள்ளேன்.
Post a Comment