உலகெங்கும் வருடா வருடம் ஆகஸ்ட் முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை "நண்பர்கள் தினம்" கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததுதான். இணையம் மூலம் ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்ததால்,இந்த வருடம் எனக்கு மிகவும் இன்பமான வருடம்.
மதுமிதாவுக்கான பதிவில் " அத்தனையும் முத்து. நண்பர்கள்தான் நான் சேர்த்த சொத்து " என்று கூறியிருந்தேன்.ஆம்.நல்முத்து கிடைப்பது கடினம். நல்ல நண்பர்கள் கிடைப்பது மிக மிக கடினம்.
பெற்ற நண்பர்களை பேணிக்காப்போம்.
அனைவருக்கும் இனிய மனம்கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
13 comments:
முகம் தெரியாமல், ஒருமித்த ரசனை கொண்டு இணைந்திட்ட உங்களைப் போன்ற நண்பர்கள் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் நண்பர்கள் தினம் தான். நட்புடன் வாழ்த்துக்கள்.
சொல்ல மறந்துவிட்டேனே,
"நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் உண்மையான நண்பன் இதயத்தின் நடுவில் இருப்பான். பொய்யான நண்பனோ இவன் நடுமுற்றத்தில் இருந்தாலும் ஏழுகடலுக்கு அப்பால் இருப்பது போலத்தான்" என்கின்றது ஒரு வேற்று நாட்டுப் பழமொழி.
வாழ்த்துக்களுக்கு நன்றி பிரபா!.
"நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் உண்மையான நண்பன் இதயத்தின் நடுவில் இருப்பான். பொய்யான நண்பனோ இவன் நடுமுற்றத்தில் இருந்தாலும் ஏழுகடலுக்கு அப்பால் இருப்பது போலத்தான்".
நல்லதொரு நண்பர்கள்தினச்செய்தி பிரபா.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
(ஆமா அது ஏன் நகைச்சுவை நையாண்டியில வகைப்படுத்து இருக்கீங்க?)
:)
வாழ்த்துக்கள் மாப்ளே...
ராஜா நானெல்லாம் புதிய வலைப்பதிவன் எனக்கும் ரெம்ப சந்தோசம் இவ்வளவு நண்பர்கள் கிடைத்தது,
நீங்கள் சொன்னது போல் "பெற்ற நண்பர்களை பேணிகாப்போம்",உங்களின் வாழ்த்துக்களுடன் சேர்த்து எனது இனிய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,
அன்புடன்...
சரவணன்.
யப்பா ராசா, நானும் என் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே!
// "ஆமா அது ஏன் நகைச்சுவை நையாண்டியில வகைப்படுத்து இருக்கீங்க" //
நாமக்கல் நண்பா,நான் எதுவும் பண்ணலை.திரட்டியின் வேலையோ!!
// "வாழ்த்துக்கள் மாப்ளே... " //
நன்றி பாலா மாம்ஸ் :-)
// " ராஜா நானெல்லாம் புதிய வலைப்பதிவன் எனக்கும் ரெம்ப சந்தோசம் இவ்வளவு நண்பர்கள் கிடைத்தது " //
நண்பா சரவணா,இங்கு எல்லோருமே புதியவர்களாக வந்து பழகியவர்கள்தான்.
சேருவது இனம்.என்றுமே மாறாதது நல்ல நண்பர்கள் மனம்.
நன்றி.வாழ்த்துக்கள்.
/ யப்பா ராசா, நானும் என் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே/
வாங்க ஜூடான் புலி ! இங்க அனல் பறக்குது.அங்க சூடு எப்படி ??!!.
மூழ்காத shipe friendshipதான்... வாழ்த்துக்கள் நண்பா
// ILA(a)இளா said...
மூழ்காத shipe friendshipதான்... வாழ்த்துக்கள் நண்பா//
நன்றி இளா.மீறி மூழ்கினாலும் நாம் முத்தெடுப்போம்.
Post a Comment