Monday, July 31, 2006

திருமண வாழ்த்துக்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!.


சாதாரண பயணம்
'சரித்திரம்' படைத்துவிட்டது.

ஆம் நண்பர்களே !
விடுமுறையில் சென்றவன்
'விதி'முறைகளுக்குள் சென்றுவிட்டேன்.

ஊருக்கு செல்வதைப்பற்றி
ஏற்கனவே ஒரு தனிப்பதிவு இட்டிருந்தேன்.

சென்ற இடத்தில் திருமணம்
நிச்சயமானது.தங்கள் அனைவருக்கும்
அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன்.

க.பி.கவ.வா.ச. சார்பிலும்
திருமணசெய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சிட்னியிலிருந்து நண்பர் கானா பிரபா,
சூடானிலிருந்து தோழர் நாகை சிவா
மற்றும் பல அயல்நாட்டு நண்பர்கள்
கைபேசியில் அழைத்து வாழ்த்திட்டனர்.

எனதினிய நண்பன் பாலபாரதி,
ப்ரியன்,ராஜஸ்தானிலிருந்து நம்ம
தல கைப்புள்ள, லிவிங் ஸ்மைல் வித்யா,
தேவு, விவசாயி இளா, பார்த்திபன்,
கட்டதுரை மற்றும் பல நண்பர்கள்
உள்நாட்டின் பலபகுதிகளிலிருந்தும்
உளமார்ந்த வாழ்த்து கூறினர்.

தங்கத்தளபதி நாமக்கல் சிபி
காலை,மாலை,மதியம்,இரவு என
நினைத்தபொழுதெல்லாம் அழைத்து
என்னை அன்பில் நனைத்துவிட்டார்.

க.பி.க,வ.வா.ச பதிவுகளிலும்
மற்றும் எனது வலைப்பதிவிலும்
பல நண்பர்கள் பின்னூட்ட
வாழ்த்துக்கள் அனுப்பியிருந்தனர்.

எல்லாம் நல்லபடியாக முடிந்து
துபாய் திரும்பி வந்தாயிற்று.

இணையமெங்கும் எனது
திருமணச்செய்தியை
சிறப்பாக பரப்பிட்ட
க.பி.கழக கண்மணிகள்,
வ.வா.சங்க சிங்கங்கள்
அனைவரையும் வாழ்த்தி
வணங்குகிறேன்.

திருமணத்திற்கு நேரில் வந்து
வாழ்த்திய அன்பர்கள்,
கைபேசியில் அழைத்து
வாழ்த்திட்ட நண்பர்கள்,
இணையம் மூலம்
மனமார்ந்த மணநாள்
வாழ்த்துக்கள் தெரிவித்த
அன்பார்ந்த 'தமிழ்மணம்'
வலைபதிவு நண்பர்கள்
அனைவருக்கும் 
 நன்றி! நன்றி!! நன்றி!!!.

25 comments:

மகேந்திரன்.பெ said...

உங்களை பட்டியல் போடச்சொல்லி பின்னூட்டம் போட்டா நீங்க கல்யாணத்துக்கு நன்றி சொல்றீங்களா?
வாழ்த்துக்கள் :)
எல்லாரும் கல்யாணமாச்சுன்னா மாறித்தான் போறாங்கப்பா :) உங்களுக்கு அழைப்பு இங்க இருக்கு
http://paarima.blogspot.com/2006/07/blog-post_31.html

நன்மனம் said...

புதிய உலகிற்க்கு வருக! வருக!

johan -paris said...

ராசா!
வாழ்த்துக்கள்!
ராஜசபையில் ராணியாரும் ;சேர்ந்திருக்கிறாரா? இனிதான் சேருவாரா? கையோடு கூட்டிவந்தீங்களா? என்று கேட்டேன்.
யோகன் பாரிஸ்

johan -paris said...

ராசா!
வாழ்த்துக்கள்!
ராஜசபையில் ராணியாரும் ;சேர்ந்திருக்கிறாரா? இனிதான் சேருவாரா? கையோடு கூட்டிவந்தீங்களா? என்று கேட்டேன்.
யோகன் பாரிஸ்

நாகை சிவா said...

நன்றி சொன்னது எல்லாம் போதும்.
சங்கத்தில் கடமை உன்னை அழைக்குது, விரைந்து வரவும்.

சங்கத்து சிங்கங்களுக்கு விருந்து எப்பொழுது?

Chandravathanaa said...

ராஜா
இல்லறம் இனிதே தொடர வாழ்த்துக்கள்

(துபாய்) ராஜா said...

மக்கா மகேந்திரா!நன்றி!சீக்கிரம் பட்டியல் போட்டுடுறேன்.

(துபாய்) ராஜா said...

வரவேற்பிற்கு நன்றி,நன்மனம் ஐயா.

(துபாய்) ராஜா said...

ஜோஹன் அண்ணா,நன்றி!அலுவலக அழைப்பின் காரணமாக அவசரமாக வந்துவிட்டேன்.ராணி பின்னே வருகிறார்.

(துபாய்) ராஜா said...

சந்திரவதனாக்கா ! அன்பார்ந்த வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!!.

(துபாய்) ராஜா said...

புலிப்பாண்டி நாகை சிவா! சங்கத்து
சிங்கங்களுக்காக ஒட்டக விருந்து தயாராயிட்டுருக்குப்பா !!!.

அருட்பெருங்கோ said...

யப்பா...

கொஞ்ச நாள் தமிழ்மணம் பக்கம் எட்டிப் பார்க்காம இருந்தா நாட்டுல என்ன நடக்குதுன்னேத் தெரியாது போல இருக்கே....

வாழ்த்துக்கள் ராசா...

இனிமேதான் ராஜாவோட சபை கலை கட்டும்னு சொல்லுங்க.. :)

ILA(a)இளா said...

இப்போ சொலுங்க வித்தியாசத்தை.
க.மு. க.பி


அதாங்க கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின்.

சின்னக்குட்டி said...

ராணியும் விரைவில் தூபாய் வந்து... உங்கள் இல்லற ராஜ்யம் சிறக்க வேணுமென்று
இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்

(துபாய்) ராஜா said...

" இனிமேதான் ராஜாவோட சபை கலை கட்டும்னு சொல்லுங்க.. :) ".

ஆமா அருள்.ராணி வந்ததனாலே சபையில கலையழகு கூடத்தான் போகுது.

(துபாய்) ராஜா said...

" இப்போ சொலுங்க வித்தியாசத்தை.
க.மு. க.பி
அதாங்க கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின். "

போங்க இளா ! எனக்கு வெக்க,வெக்கமா வருது.

(துபாய்) ராஜா said...

சின்னக்குட்டி ஐயா!அன்பார்ந்த வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!!.

கானா பிரபா said...

தலைவா, வந்துட்டீங்களா?

(துபாய்) ராஜா said...

// "தலைவா, வந்துட்டீங்களா? " //

ஆம் அன்பு நண்பரே.

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் ராஜா.

விரைவில் விசா கிடைக்க வாழ்த்துகள்.

(திருமணம் ஆனதும் முகத்தை காட்ட என்ன வெட்கம்)

- பரஞ்சோதி

(துபாய்) ராஜா said...

வாழ்த்துகளுக்கு நன்றி பரஞ்சோதி.

// " திருமணம் ஆனதும் முகத்தை காட்ட என்ன வெட்கம் " //

இதுவரை பொதுச்சொத்து.
இனி தனிச்சொத்தல்லவா தலைவா :-)

aaradhana said...

Congratulations.. though a little late..

(துபாய்) ராஜா said...

//aaradhana said...
Congratulations.. though a little late.. //

வாழ்த்துக்களுக்கு நன்றி ஆராதனா.

Anitha Pavankumar said...

Congrats...

(துபாய்) ராஜா said...

//Anitha Pavankumar said...
Congrats...//

Thanx for ur Wishes Anitha.