பணிப்பளுவினால் பயணப்பதிவு முடிக்காதது பெருங்குறையாக மனதை உறுத்திகொண்டே இருக்கிறது. நிறைய தகவல்களும், படங்களும் தரவேண்டும் என்ற எண்ணமும் தாமதத்திற்கு காரணம். இந்த தொடர் படிக்காதவர்கள் முதல் பாகத்தில் இருந்து படித்து விடுங்கள்.
அடுத்ததாக எகிப்தின் புராதான கோவில்களில் ஒன்றான ஃபிலே கோயில் செல்லலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.
அஸ்வான் பேரணையை விட்டு கிளம்பும் முன் சில புகைப்படங்கள்
உலகின் முதல் மிகப்பெரிய செயற்கை நீர்த்தேக்கமான நாஸர் ஏரி குறித்த விபரங்களை இன்னொரு முறை பார்த்து படம் எடுத்து கொண்டோம்.
அஸ்வான் பேரணையில் இருந்து அரைமணி நேரம் பயணம் செய்து படகுத்துறையை அடைந்தோம். ஆம். நீர்த்தேக்கத்தின் நடுவில் அமைந்துள்ளதால் ஃபீலே கோவிலுக்கு படகில் தான் செல்ல முடியும்.
2 comments:
இதுக்கு பேர் தான் படங்காட்டுறதா???
அருமையாக உள்ளது ..
தொடருங்கள் பயணத்தை ...
Post a Comment