Saturday, January 23, 2010

தலைமுறை


ஆற்றங்கரையோரம்
அழகாய் வாழ்ந்தனர்
பூட்டன், பூட்டி.

ஊர் சில கண்டு
ஓய்ந்து போயினர்
தாத்தா, பாட்டி.

நகரம் சென்று
நரகம் கண்டனர்
அப்பா, அம்மா.

நாடெங்கும் சுற்றி
நைந்து போனோம்
நாங்களிருவரும்.

பாரெங்கும் பறந்து
பல கண்டம்
பார்த்தான் மைந்தன்.

உலகமெல்லாம்
ஓய்வின்றி
அலைகிறான்
என் பேரன்.

எந்த கிரகத்தில்
எப்படி வசிப்பானோ
அவன் பிள்ளை.

12 comments:

லோகு said...

வித்தியாசமான கருத்தேர்வு அண்ணா..
ஆனால் கவிதையாக்கத்திலும், வார்த்தை தேர்விலும் இன்னும் கொஞ்சம் நிதானித்திருக்கலாம்.

ஆரூரன் விசுவநாதன் said...

எதிர்காலம் பற்றிய நிதர்சன கருத்துக்கள். சொன்ன விதம் அருமை

துபாய் ராஜா said...

// லோகு said...
வித்தியாசமான கருத்தேர்வு அண்ணா..
ஆனால் கவிதையாக்கத்திலும், வார்த்தை தேர்விலும் இன்னும் கொஞ்சம் நிதானித்திருக்கலாம்//

வரவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி தம்பி.

எப்போதோ எழுதி வைத்த கருத்து. வார்த்தைகளை செதுக்கி, செதுக்கி வடிவம் கொடுத்தேன் இப்போது. எண்ண உளியை இன்னும் கூர் படுத்தி கொள்கிறேன் தம்பி. :))

Paleo God said...

நல்லா இருக்குங்க ராஜா.. வேற டெம்ப்ளேட் மாத்தவேண்டியதுதானே,அனேகமா எல்லாரோட இமெயில் ஐடி இருக்கும் ஒரு மெயில் தட்டினீங்கன்னா திரும்ப ஜாய்ன் பண்ணிடலாம் நிறைய வசதிகள் கிடைக்குமே..:)

பிரபாகர் said...

சொல்ல வந்ததை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் ராஜா...

பிரபாகர்.

தமிழ் said...

அருமை

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான சிந்தனை

நல்லாருக்கு துபாய் ராஜா

எறும்பு said...

தீர்க்கதரிசி ராஜா வாழ்க! வாழ்க

Asir said...

எந்த கிரகத்தில்
எப்படி வசிப்பானோ
அவன் பிள்ளை.


Congrats

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லாருக்கு

அத்திரி said...

ஞானி ( தீர்க்கதரிசி) துபாய்ராஜா அண்ணாச்சி வாழ்க

சந்தனமுல்லை said...

ரசித்தேன்...:-)