Tuesday, January 19, 2010

சந்திரமுகியை சந்தித்தேன்....



சொந்த மாவட்டமான திருநெல்வேலியில் காற்றாலையில் வேலை பார்க்கும் போது நிகழ்ந்த திகில் அனுபவங்களான

போல இதுவும் ஒரு அமானுஷ்ய அனுபவம்தான்.

கூத்தாடி வேலை பார்த்தாலும் காத்தாடி வேலை மட்டும் பார்க்ககூடாதுன்னு அனுபவப்பட்டவங்க சொல்வாங்க. திட்டம்,உற்பத்தி, பராமரிப்பு என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் ஒரு தனி உலகம். நாங்க டவர் ஏறினாத்தான் ஊர்ல பவர் இருக்கும்ன்னு பெருமையா பேசி திரிஞ்சுகிட்டிருந்தோம்.

மறைப்பில்லாத வெட்டவெளியிலே காற்று தடங்கலின்றி வீசுவதால் காற்றாலைகள் அமைந்திருப்பதெல்லாம் பெரும்பாலும் ஊரை விட்டு ஒதுக்குபுறமா, ஆள்நடமாட்டமிலாத காட்டு பகுதியாகவே இருக்கும். ஒவ்வொரு இயந்திரத்துக்கும் குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். ஏதாவது கோளாறு என்றால் மட்டுமே நாங்களும் சென்று பார்ப்போம். மற்றபடி அலுவலகத்தில் இருந்தபடியே கம்யூட்டரில் மானிட்டரிங் செய்து கொண்டு இருப்போம்.

எங்கள் நிறுவனத்தில் ஒரு செக்சனுக்கு 100 காற்றாலைகள் என பிரித்து இருந்தார்கள். தனித்தனி குறியீட்டு எண் இருந்தாலும் ஒவ்வொரு மெஷினுக்கும் தனிப்பட்ட அடையாளம் ஒன்றும் சொல்வார்கள். ஊத்துமலை செக்சனில் உற்பத்தி, பராமரிப்பு இரண்டுமே எனது பொறுப்பில் இருந்தன.

நல்ல காற்று சீசனில் ஒருநாள் பணியில் இருந்தபோது ஒரு மெஷினில் பிரச்சினை. உடன் பணியில் இருந்தவர் எல்லாம் ஆளுக்கொரு மெஷினுக்கு சென்றிருக்கவே நான் தேவையான கருவிகளோடு குறிப்பிட்ட மெஷினுக்கு பைக்கை எடுத்து கொண்டு தனியாக கிளம்பி சென்றேன். அந்த மெஷின் எங்கள் செக்சனிலே கடைசியாக மலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் அமைந்திருந்தது. வண்டி செல்லும் பாதையை தவிர மற்ற இடமெல்லாம் ஏதேதோ மரங்கள் அடர்ந்து நிழல் படர்ந்திருந்தது. ஆள் அரவமில்லாத அந்த காட்டுப்பாதையில் பைக் சத்தத்தை கேட்டு முயல்கள் சில விலகி ஓடின.சில மயில்களும் சடசடவென பறந்தன.

குறிப்பிட்ட மெஷினை அடைந்து பைக்கை வெளியே நிறுத்திவிட்டு தவறை சரிசெய்து முடிக்க அரைமணி நேரத்திற்கும் மேலாயிற்று.மறுபடியும் நல்ல படியாக ஓடி மின் உற்பத்தி ஆரம்பித்தவுடன் கருவிகளை எடுத்துகொண்டு கதவை பூட்டிவிட்டு பைக்கை நோக்கி வந்தவன் அதிர்ந்தேன். அந்த நேரம் பார்த்து காட்டுக்குள்ளிருந்து நரியொன்றும் ஊளையிடவே இனம் புரியாத எண்ணத்தில் என் உடல் சிலிர்த்தது.

( தொடரும் )


7 comments:

Raju said...

தொடருமா...?
அடிச்சு ஆடுங்க தல.

vasu balaji said...

யப்பே. நல்ல காலம். இன்னைக்கு முன்னெச்சரிக்கை. நாளைக்கு வேப்பிலை வெச்சிகிட்டு படிக்கலாம்:)

Jawahar said...

த்ரில்லிங்கா இருக்கே... இன்னும் இருக்கா?

http://kgjawarlal.wordpress.com

வடுவூர் குமார் said...

ஏங்க‌! இந்த‌ காற்றாடிக‌ளை ப‌ற்றி எப்போதாவ‌து எழுதியிருக்கீங்க‌ளா?

ஹேமா said...

அச்சோ....ராஜா இப்பவே சொல்லி முடிச்சிருக்கலாம்.அடிக்கடி பயப்பிட முடியாது.

பிரபாகர் said...

கலக்கலா இருக்கு ராஜா... எகிப்திலயுமா?

தொடரும் போடல? ஓ.... தொடருங்க ராஜா!

பிரபாகர்.

கலகலப்ரியா said...

பேய்க்கதைன்னா அது என்னோட கதையா இருந்தாலும் அப்பீட்டு.. =))... சாரி .. :(