அடர்மழை நாளொன்றில்
அலுப்போடும்
கொஞ்சம் சலிப்போடும்
ஒரு பயணம்....
மழைநீர் தள்ளும்
வைப்பர் போல
மனநினைவுகள்
தள்ள முயல்கிறேன்...
இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
விரட்டும் மனமோகம்....
கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....
அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் நினைவுகள்....
மழைநீர் வடிந்தாலும்
என் மனநினைவுகள்
வடியாது...
வெள்ளநீர்
விலகினாலும்
விலகாது
வீண் நினைவுகள்...
என்னோட இந்த கவிதை தனிமைக்கொடுமையில் விளைந்த சோகத்தின் வெளிப்பாடுன்னா கவிதாக்கா கவிதை சுகராக கீதம். இனிமையான எதிர்க்கவிதை புனைந்த கவிதாக்காவிற்கு வாழ்த்துக்கள்.
7 comments:
இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
விரட்டும் மனமோகம்.... //
அழக வந்திருக்கு கவிதை...வாழ்த்துக்கள் துபாய் ராசா.
kalakal kavithai
http://kavithavinpaarvaiyil.blogspot.com/
நோ நோ நோ டென்ஷன்.. உங்க கவிதைய பாத்து எனக்கும் கவிதை மழை மாதிரி வந்துடுத்து... :)
மழையும் நினைவுகளும் என குளிர்ச்சியாய் இருக்கிறது ராஜா...
பிரபாகர்.
வரிகள் அழகாக் கோர்த்திருக்கிறீங்க.மழை, தனிமை கலைக்கும் காதலன்(லி).
ada ada... arumainga..! kavithakkada kavithaiyum unga kavithaiyum..!
இதைத்தான் எங்க ஊர்லே மழை விட்டும் தூவானம் விடல்லை என்பார்கள்.
http://kgjawarlal.wordpress.com
Post a Comment