தொழிலாளி
ஒரு வருடமாக ஓடாத ஆலை
உருப்படியா கிடைக்கலையே ஒரு வேலை
வெளியே போனால் கடன்காரர் உரித்து விடுவார் தோலை
உங்களுக்கு தெரியுமா அந்த ஆளை
அவன் தான் தொழிலாளி.
ஒரு வருடமாக ஓடாத ஆலை
உருப்படியா கிடைக்கலையே ஒரு வேலை
வெளியே போனால் கடன்காரர் உரித்து விடுவார் தோலை
உங்களுக்கு தெரியுமா அந்த ஆளை
அவன் தான் தொழிலாளி.
வியாபாரி
குறைந்த விலைக்கே பொருட்களை வாங்கி
அதிக விலைக்கு விற்பான் மனசு நீங்கி
அதனை வாங்க ஏழைகள் ஏங்கி
அதன் மூலம் வயிறு வீங்கி
வாழ்பவன் தான் வியாபாரி
குறைந்த விலைக்கே பொருட்களை வாங்கி
அதிக விலைக்கு விற்பான் மனசு நீங்கி
அதனை வாங்க ஏழைகள் ஏங்கி
அதன் மூலம் வயிறு வீங்கி
வாழ்பவன் தான் வியாபாரி
எட்டாம் வகுப்பு படிக்கும் போது தமிழாசிரியர் விடுமுறையில் சென்றார். அந்த ஒரு மாதம் மட்டும் எங்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க வந்த பயிற்சி ஆசிரியை இலக்கிய மன்ற வகுப்புகளில் வித்தியாசமாக அனைவரையும் கதை, கவிதை, எழுதச் சொன்னார். எதுகை மோனையாய் எழுதுவதுதான் கவிதை என்றெண்ணி எத்தனையோ தத்துபித்து கவிதைகள் எழுதினாலும் அப்போது எழுதியவற்றிலே என்னை மிகவும் கவர்ந்தது கீழே உள்ள கவிதைதான்.இதனை ஏற்கனவே பதிவாகவும் இட்டுள்ளேன்.
கவர்ச்சி
நிலாக் கன்னியிடம்
அப்படியென்ன
கவர்ச்சி ??!!.
அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக் காளையர்கள் !!.!!.
இன்னொரு நண்பன் எழுதியது...
ஏ கிட்டு..
உன்கிட்டே இருக்கு லட்டு
கொடுத்திடு அதைப் பிட்டு
இல்லைன்னா முதல்ல திட்டு
அப்புறம் மண்டையில் விழும் குட்டு.
இன்னொரு நண்பனோ பலபடி மேலே போய் கல்கி, சாண்டில்யன் போல மிகப்பெரிய சரித்திரக்கதை எழுதி அழகழகாய் படங்களும் வரைந்து யாரிடமும் காண்பிக்காமல் வைத்திருந்தான். ஒரு நாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனது படைப்புகளை எல்லாம் காண்பித்தான். அவனது திறமை கண்டு மிரண்ட நான் அதன்பின் பதிவுலகம் வரும்வரை கவிதை எழுதுவதையே விட்டுவிட்டேன். அவன் வீட்டிற்கு செல்வதையும்தான்.
