Sunday, August 30, 2009

கவலையோ கவலை.......

பிறந்தவுடன்
பால் கவலை.
வளர வளர
படிப்பு கவலை.
படித்து முடிந்தால்
வேலை கவலை.
வேலை கிடைத்தால்
நல்ல சம்பளம் கவலை.
சம்பளம் கூடினால்
கல்யாணம் கவலை.
கல்யாணம் முடிந்தால்
பிள்ளை கவலை.
பிள்ளை பிறந்தால்
பேர் வைக்க கவலை.
உடன் வரும்
வீடு கட்ட கவலை.
வீடு கட்டினால்
கடன் அடைக்க கவலை.
கடன் அடைத்தபின்
ஓய்வு கவலை.
ஓய்வுக்கு பின்னும்
ஓயாத கவலை.
மரணம் எப்போது
மனதின் கவலை.
எப்போதுமுண்டு
எல்லோர் மனதிலும்
இறந்தால் மீண்டும்
பிறப்போமா
என்றொரு கவலை.
பிறந்தவுடன்
பால் கவலை.

12 comments:

Raju said...

கவலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் போலயே...!

கிளியனூர் இஸ்மத் said...

மனிதனுக்கு எல்லாம் கவலைதான்.... தன்னைத்தவிர....

லோகு said...

விடுங்க.. கவலை எல்லாருக்கும் இருக்கத்தான் செய்யும்.. இதுக்கெல்லாம் கவலைப்பட்டா முடியுமா??

தங்கராசு நாகேந்திரன் said...

"கவலைப்படாதே சகோதரா"

சந்தனமுல்லை said...

:-) போஸ்ட் போட்டா கமெண்ட் வரணுமேன்னு கவலை...

சி.கருணாகரசு said...

வாழ்க்கை ஒரு வட்டமுங்க, இங்க பிறப்பவன் இறப்பான்...இறப்பவன் பிறப்பான். நல்லாஇருக்கு துபாய் ராசா.

Anbu said...

ஒரு பெண்ணை நாம் பார்த்தால்..
அவள் பார்ப்பாளா என்ற கவலை.
பார்த்துவிட்டால்..
பேசுவாளா என்ற கவலை..
பேசிவிட்டால்..
காதலிப்பாளா என்ற கவலை..
காதலும் செய்து விட்டால்..
கல்யாணம் பண்ண சம்மதிப்பாளா
என்ற கவலை..
அவள் சம்மதித்தாலும் அவள்
முன்னாள் காதலன் சம்மதிப்பானா
என்ற கவலை..
:-))))))))

அ. நம்பி said...

//ஓய்வுக்கு பின்னும்
ஓயாத கவலை.//

உண்மை; இது ஓயாது.

அத்திரி said...

அருமை ராஜா

ஹேமா said...

ராஜா,பிறக்கும்போதே ஆசைகளோடுதானே பிறக்கிறான் மனிதன்.அதனால்தான் கவலைகள் தொடர்கிறது.

முருக.கவி said...

கல்லும் பூவாகலாம்
கவலையும் மகிழ்வாகலாம்
சுட்டால்தான் பொன் ஒளிரும்
பட்டை தீட்டினால்தான் வைரம் ஜொலிக்கும்
கவலை நமக்குள் நாம் கொண்ட அக்கறை
கவலை நம்மை கடைத்தேற்றும் பாசறை.
கவலைகள் வந்தால்தான் வாழ்வு சிறக்கும்!

KILLERGEE Devakottai said...


ஸூப்பர் நண்பரே மிகவும் இரசித்தேன்...