Saturday, August 29, 2009

புருவம் திருத்திய பெண்கள்.....



பள்ளி, கல்லூரி
புகைவண்டி, பேருந்து
நடைபாதை, கடைவீதி
கோயில், குளம் எங்கும்
புருவம் திருத்திய பெண்கள்.

செய்திதாள், சின்னத்திரை
திரைப்படம், நாட்டியம்
நாடகம் எங்கும்
புருவம் திருத்திய பெண்கள்.

பாவாடை, தாவணி
சேலை, சுரிதார்,
மடிசார், மிடி
மற்றும்
பல ஒய்யார
உடைகள், ஒப்பனை எங்கும்
புருவம் திருத்திய பெண்கள்.

சினிமாவில் கதாநாயகி
தோழிகள், கூட
நடனமாடும் பெண்கள்
கண்ணீர் விட்டழும் அம்மா
தொலைக்காட்சி நாடகத்தில்
வரும் அத்தைகள், சித்திகள்
அனைவரும்
புருவம் திருத்திய பெண்கள்.

வீடுகள், தெருக்கள்
கிராமம், திருவிழாக்கள்
சிறுநகரம், பெருநகரம்
ஆகாயம், பூமி
அனைத்திலும்
புருவம் திருத்திய பெண்கள்.

திருத்தாத நெற்றியுடன்
தென்படுவாரா எவரேனும்
திரும்பிய திசையெல்லாம்
புருவம் திருத்திய பெண்கள்.

இயல்பான நெற்றியுடன்
இருப்பாரா எவரேனும்
எங்கெங்கு காணிணும்
புருவம் திருத்திய பெண்கள்.

உனக்கு ஏனிந்த அக்கறை
யாருக்குமில்லாத அக்கறை
என்று நீங்கள் கேட்கலாம்.

சிறிதே செவிசாய்ப்பீர்
என் சிந்தனைக்கு.

புருவம் திருத்துவதால்
உங்கள் பருவம்
குறைவதாக நீங்கள்
நினைக்கலாம்.

இயற்கையான
அழகு உருவம்
மறைகிறதே என
வருத்தப்படுகிறேன் நான்.

இதற்கு மேலும்
நீங்கள்
ஒத்துக்கொள்ளாமல்
என்னை ஆணியல்வாதி
என்று கூறலாம்.

ஆம் நான்
ஆணியல்வாதிதான்.

ஆணியல்வாதி = ஆண் + இயல் + வாதி = இயல்பான அழகை ரசிக்கும் ஆண்.


14 comments:

பா.ராஜாராம் said...

ஆஹா..துபாய் ராஜா..என்ன இப்படி கிளம்பிட்டீறு?உருவம் பார்க்க கூட இங்கு(சவுதியில்)வழியை காணோம்.(ஹும்ம்ம்..)துபாயில் புருவம் வரைக்கும் பார்க்க கிடைக்கிறதாக்கும்?.எப்படியோ i am the first!வாழ்த்துக்கள் ராஜா.

அத்திரி said...

தலைப்பே அசத்தல்

அத்திரி said...

//இயற்கையான
அழகு உருவம்
மறைகிறதே என
வருத்தப்படுகிறேன் நான்.//


நானும்தான்..............

Raju said...

\\ஆணியல்வாதி = ஆண் + இயல் + வாதி = இயல்பான அழகை ரசிக்கும் ஆண். \\

சூப்பர் தலைவா.

லோகு said...

அழகுக்கு அழகு சேக்கறது தப்பா.. அப்பவும் அழகாத்தான் இருப்பாங்க ரசிங்க அண்ணா..

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையிலும் அருமை அண்ணா.....

குறிப்பா கடைசி point
////ஆணியல்வாதி = ஆண் + இயல் + வாதி = இயல்பான அழகை ரசிக்கும் ஆண்.///

பின்னிட்டீங்க அண்ணா.....

வாழ்த்துக்கள்....

ஹேமா said...

ராஜா,புருவம் திருத்துவதில்கூட இவ்வளவு சிக்கல் இருக்கா !அதையும் ஆண்கள்ரசனயோடு ரசிக்கிறார்களா !ம்ம்ம்...

vasu balaji said...

ஆணியல் வாதிக்கு நல்ல விளக்கம்:)). அசத்தல்.

பா.ராஜாராம் said...

//இயல்பான நெற்றியுடன்
தென்படுவாரா எவரேனும்...//
அழகான ஆதங்கம் ராஜா.

கலகலப்ரியா said...

அவங்க புருவம்.. அவங்க திருத்துறாங்க.. (இயற்கை அழகெல்லாம் இந்த யுகத்ல பேசினா எப்டி ஹிஹி..) அது பிடுங்கி எடுக்கிறது அவங்களுக்கே வலிக்கலயாம்.. உங்களுக்கு என்ன பண்றது.. ஹும்..?

(ஐயோ நம்ம புருவம் அப்டியேதான் இருக்குங்க.. ஆனாலும்.. அணில்.. சாரி.. ஆணியல்.. பெண்ணியல்னு ஆணி அடிக்காம அதையும் அழகியல்ல அடக்குங்கோ.. புருவம் பாவம் பொல்லாதது..)

கிளியனூர் இஸ்மத் said...

நல்ல அசத்தல் ராஜா....

Jawahar said...

புருவத்தை மட்டுமா திருத்துகிறார்கள்?

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

துபாய் ராஜா வணக்கம்.எது எப்படியோ ஆனா உங்க ஆணியல்வாதி மட்டும் பிரமாதம்!வாழ்த்துக்கள்.

புதுசுரபி said...

ராஜா,

"புருவம் திருத்திய பெண்கள்....."

அருமையான தலைப்பு -தேர்வு..
உமக்கு தெரியுமா? அதே அரபுலகில் தோன்றிய எமது நபி அதை தடுத்தும் / வெறுத்தும் இருக்கிறாரென்று...

The Messenger of Allah (SAWS) cursed the one who does the removing and the one who has it done.
The full hadith is narrated by Abdullah ibn Masud and recorded in al-Bukhari, kitab-ul-libaas.
A similar hadith with similar wording is recored by Abu Dawd on good authority.

நேர் வழியில் இருக்கும் பெண்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள் என நம்புவோமாக!