Friday, August 21, 2009

50-வது பதிவு - பாசம் நிறைந்த பதிவுலகம்




எனது இந்த 50-வது பதிவை நட்பை பெருக்கும் பதிவுலகிற்கும்,பதிவுலக நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன்.

அலுவலக காரியங்களுக்காகவும், நண்பர்கள் தொடர்பிற்காகவும் பல ஆண்டுகளாக இணையத்தை பயன்படுத்தி வந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் 2005ல் தான் தமிழ்மணம் அறிமுகமாயிற்று. அயல்நாட்டில் இருப்பதால் நாளிதழ்களில் செய்திகள் படிப்பது, சாட்டிங், மெயில் ஃபார்வர்டு செய்வது என்று அலுத்துப்போய் இருந்த நேரத்தில் பலவிதமான பகிர்வுகள் நிறைந்த பதிவுலகம் இனிதே ஈர்த்தது.

முதலில் பதிவுகளை மட்டும் படித்து வந்தவன் பின் அனானியாக ஆங்கிலத்தில் பின்னூட்டங்கள் இடவும் ஆரம்பித்தேன். அனானி ஆப்சனிலும் கீழே எனது பெயர் குறிப்பிட்டே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன். பல நண்பர்களும் அறிமுகமானார்கள். அவர்கள் மூலம் ஈ கலப்பை பற்றி அறிந்து தரவிறக்கம் செய்து தமிழிலே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன்.

நட்பு வளையம் பெருகியது. பின் தனியே இந்த வலைப்பூவையும் 2006ல் பதிவுலக நண்பர்கள் மூலம் உருவாக்கி பதிவுகள் இட ஆரம்பித்தேன்.

தமிழ்மணத்திற்கு வந்த நேரம் எனது திருமணமும் இனிதே முடிந்தது. வாழ்த்துக்களும் குவிந்தன. பல நாடுகளிலிருந்தும் முன்பின் சந்தித்திராத பதிவுலக நண்பர்கள் அலைபேசியில் அழைத்து நெகிழ வைத்துவிட்டனர்.

கால சுழற்சியால் பணியிடம் மாறி நாடுகள் பல சென்று பதிவுகள் இடமுடியாமல் போனாலும் பதிவுலக நண்பர்கள் தொடர்பு விட்டுப் போகவில்லை. அன்பு நண்பர்கள் மூலமே மறுபடியும் பதிவிட வந்தேன்.

சில நூறுகளில் இருந்த பதிவர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்திருப்பது, எழுத்தார்வத்தை ஊக்குவிக்க பல பயிற்சி பட்டறைகள், சிறுகதைப் போட்டிகள், பல நாடுகளிலும் நடக்கும் பதிவர் சந்திப்புகள் போன்றவை மிக்க மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள்.

பதிவுலக உறவுகள் சந்தோசத்திலும், துக்கத்திலும் சரிசமமாக பங்குகொண்டு வருவதற்கு எத்தனையோ சான்றுகள். சமீபத்திய சிறந்த உதாரணம் நண்பர் செந்தில்நாதனின் இருதய அறுவை சிகிச்சைக்காக, உயிர் காப்பான் தோழன் என பதிவுலகமே ஓரணியில் திரண்டது. எனது பங்களிப்பையும் சேர்த்து விட்டேன். நண்பர்களும் தொடர்ந்து உதவி வருகிறார்கள். உங்களாலும், நண்பர்களாலும் முடிந்த உதவிகளையும் செய்யுங்கள்.

எனதிந்த வலைப்பூ உருவாக உதவிய நண்பர்கள், தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமும், ஆக்கமும் அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகளும் வணக்கங்களும்.

இணையதளத்தில் இனிய உலகம் உருவாக்குவோம்.

பதிவுலகை பாசம் நிறைந்தது ஆக்குவோம்.


36 comments:

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

Raju said...

வாழ்த்துக்கள்ண்ணே..
:)

சந்தனமுல்லை said...

50க்கு வாழ்த்துகள்!! தொடர்ந்து எழுதுங்கள்! :-)

துளசி கோபால் said...

அரைச்சதத்துக்கு இனிய பாராட்டுகள்..


பதிவுலகம் பாசக்கார உலகம்!

எல்லாரும் நல்லா இருங்க.

இரும்புத்திரை said...

விரைவில் சதம் அடிக்க இந்த தம்பியின் வாழ்த்துக்கள்

லோகு said...

வாழ்த்துகள் !!!!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் ராஜா

Jerry Eshananda said...

துபாய் ராசாவுக்கு வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் !

ஆயில்யன் said...

50க்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் அண்ணாச்சி :))

ஹேமா said...

ராஜா,மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய எழுதுங்க.

Arun said...

vazhthukal annachi.. thodarndhu ezhududhungal..

கலகலப்ரியா said...

வாழ்த்துக்கள்...! ஐம்பது நூறாகி.. நூறு .. ஆயிரமாகி.. ஆயிரம் ஆயிரமாயிரமாக வாழ்த்துக்கள்.. (தோடா அம்பூட்டும் படிக்கிறதுக்குள்ள நாம எந்த லோகத்ல இருப்போமோ..)

Sutha said...

வாழ்த்துக்கள் ....nanba

vasu balaji said...

வாழ்த்துகள்

நையாண்டி நைனா said...

Congrates Ma... Nanbaa....

கானா பிரபா said...

வணக்கம் ராஜா

சும்மாவா 4 வருஷ வலை தந்த நட்பாச்சே, 50 பதிவுகள், 500, 5000 ஆக கடக்க வாழ்த்துக்கள் நண்பா

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்துகள்..!

Karthik said...

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..! :))

கிளியனூர் இஸ்மத் said...

வாழ்த்துக்கள்....ராஜா.....வாழ்த்துக்கள்.....

SUMAZLA/சுமஜ்லா said...

இனிய தோழரே,
வாழ்த்துக்கள்!

//இணையதளத்தில் இனிய உலகம் உருவாக்குவோம்.

பதிவுலகை பாசம் நிறைந்தது ஆக்குவோம்.//

வழி மொழிகிறேன்!

payapulla said...

வாழ்த்துகள் நண்பரே !

விரைவில் நூறு அடியுங்கள் !

பா.ராஜாராம் said...

அருமை நண்பா...வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

50 க்கு வாழ்த்துக்கள்.

na.jothi said...

வாழ்த்துக்கள் ராஜா அரைச்சதத்துக்கு

அன்புடன் அருணா said...

50-க்கு பூங்கொத்து!

Anonymous said...

முதல 50-க்கு வாழ்த்துக்கள் தல.
தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பின்னால் நாங்கள் நிற்கிறேhம்.

Unknown said...

வலைப்பதிவில் அடித்த அரைச் சதத்துடன் நின்று விடாமல் பல்லாயிரம் சதமடிக்க வாழ்த்துக்கள் !!

Unknown said...

வலைப் பதிவில் அரைச் சதத்துடன் நின்று விடாமல் பல்லாயிரம் சதமடிக்க வாழ்த்துக்கள்!!

Unknown said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய நிறைய பதிவுகள் போட.. வாழ்த்துக்கள்... அண்ணன்

Anonymous said...

விரைவில் சதம் அடிக்க வாழ்த்துக்கள்

Santhosh said...

வாழ்த்துக்கள் அண்ணே, இதே மாதிரி பல நூறு பதிவுகளை போட்டு தமிழ் மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்

ஜெட்லி... said...

50க்கு வாழ்த்துகள்!! தொடர்ந்து எழுதுங்கள்.

அத்திரி said...

வாழ்த்துக்கள்

kuma36 said...

வாழ்த்துகள்:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்.