எந்த ஒரு விஷயத்தையும் குழந்தைகள் போல கற்றுக்கொள்ளவேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள்.
ஒரு குழந்தையானது இப்பூமியில் பிறந்தவுடன் எந்த ஒரு கவலையும் இல்லாமல் வேளைக்கு உண்டு உறங்குகிறது.பின் சுற்றுப்புறம் நடப்பவற்றை மற்றும் காண்போர் பேசுவதையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறது. பின் தானும் அவர்களைப் போல பேச மழலை மொழி எழுப்புகிறது. பின் நன்றாக பேசி, ஊர்ந்து, எழுந்து, விழுந்து ,நடந்து சராசரி மனித வாழ்க்கைக்கு வந்து விடுகிறது.
அதுபோல்தான் நானும் 'தமிழ்மணம்' அறிமுகமானவுடன் எல்லோரது பதிவுகளையும் படித்து மட்டும் வந்தேன்.பின் பிடித்த பதிவுகளுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட ஆரம்பித்தேன். நான் இட்ட பின்னூட்டங்களுக்கு பதிவர்கள் பதில் கொடுப்பதை கண்டு உற்சாகமானேன். தமிழில் எழுதவும் ஆரம்பித்தேன்.
இப்போது 'பிளாக்கர் கணக்கும், தனி வலைப்பதிவும் தொடங்கியாயிற்று. இனி நான் எழுதிய கவிதைகள், எனக்கு தெரிந்த கதைகள், அனுபவங்கள் எல்லாவற்றையும் இங்கு எடுத்துவிட வேண்டியதுதான்.
அன்புடன்,
(துபாய்) ராஜா.
4 comments:
//இனி நான் எழுதிய கவிதைகள்,எனக்கு தெரிந்த கதைகள்,அனுபவங்கள் எல்லாவற்றையும் இங்கு எடுத்துவிட வேண்டியதுதான்.//
ஆஹா கவிதை எல்லாம் கூட எழுதுவீயளா ராசா? :)
சீக்கிரம் எடுத்து உடுங்க ராசா நான் உங்க கவிதைய பரப்பிடறேன் ;-)
//ஆஹா கவிதை எல்லாம் கூட எழுதுவீயளா ராசா? :)//
ஆமா பாண்டி!ஆச்சர்யமா இருக்கா?!.
/சீக்கிரம் எடுத்து உடுங்க ராசா நான் உங்க கவிதைய பரப்பிடறேன் ;-)/
நம்ம சபையோட கொள்கை பரப்பு
செயலாளர் பாண்டி வாழ்க!வாழ்க!
கவிஞர் துபாய் ராஜா வாழ்க :)..
//கவிஞர் துபாய் ராஜா வாழ்க :)..//
பொன்சக்கோ!!எல்லாம் உங்களால வந்த தைரியம்தான்!!.
(நீங்க எழுதுனகவிதைகளையே(??!!)
'தமிழ்மணம்' மக்கள் தாங்கும்போது....)
Post a Comment