Friday, October 09, 2015

கூத்தாடி இரண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம்...


பத்து ஆண்டு காலத்திற்கு பின் நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பரபரப்புகள் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற, சட்ட மன்ற தேர்தல் ஏற்பாடுகளை விட விறுவிறுப்பாக இருப்பதால் பத்திரிக்கைகள் போட்டி போட்டு கொண்டு செய்திகளை வழங்கி 'கூத்தாடி இரண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம்'  என பழமொழியையே மாற்றி விட்டன.


















ராதிகாசிம்புவுக்கு நன்றிவிஷால் குஷால்!

நாட்டிலேயே அதிகமாக சம்பாதிக்கும் நடிகர்ளுக்கு இடையே என்ன பிரச்சினை என்று அலசி, ஆராய்ந்து தினம் தினம் நூறு தகவல்கள் தரும் பத்திரிக்கைகள் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில்  சந்திக்கும் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கும் தேவையான முக்கியவத்தை கொடுக்குமாறு பணியாற்றி பத்திரிக்கை தர்மம் நிலைக்க செய்வார்களா என்பது பாமர மக்களோடு, படித்த மக்களின் எதிர்ப்பார்ப்பும் ஆகும்.

3 comments:

KILLERGEE Devakottai said...


வணக்கம் நண்பரே இந்த மா3யான தியாகிகளைப்பற்றி படிக்கும் பொழுது மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது நண்பரே...
இவர்களையெல்லாம் மொத்தமாக ஓரிடத்தில் கூட்டி....................................................................... நான் என்ன எழுதியிருப்பேன் 80தை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் நண்பரே...
சில பதிவுகளுக்கு ஸூப்பர் க்ளு தந்தமைக்கு நன்றி நண்பா...

'பரிவை' சே.குமார் said...

இவர்களெல்லாம் ஆட்டம் போடுவது அரசியல் ஆசையில்...
பத்திரிக்கைகள் இப்போ ஆனந்தக் கூத்தாடுகின்றன இந்தக் கூத்தாடிகளால்...

துபாய் ராஜா said...

ஆம் திரு.KILLERGEE Devakottai & பரிவை சே.குமார், எந்த பத்திரிக்கை திறந்தாலும் இவர்கள் செய்திதான். இவர்களையெல்லாம் பெரிய ஆட்கள் ஆக்குவதே பத்திரிக்கைகள்தான். எல்லா பத்திரிக்கைகளுமே மன தர்மத்தை விட்டு பண தர்மத்திற்கு மாறி வெகு நாளாகி விட்டன.

நாட்டில் பரபரப்பாக பேசப்பட வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் இருக்க நடிகர்களது பிரச்சினை குறித்த பத்திரிக்கையாளர்களின் தனிப்பட்ட கருத்தை நம் மீது திணிப்பதில் ஏன் இத்தனை ஆர்வம் இவர்களுக்கு என்பதே நம்மைப் போன்ற சாமான்ய மக்களின் கேள்வி.