நினைவு
தெரிந்த நாள்
முதல்
தலைமுடியை
தூக்கி வாரி
வணங்காமுடியாய்
வளைய வருவதுதான்
என் பழக்கம்...
ஒரு தீபாவளித் திருநாளில்
எனது வீட்டிற்கு
வந்து
திரும்பும் உன்னை
பேருந்துநிலையம்
வரை
வழியனுப்ப
நானும்
உடன் நடந்து
வந்து கொண்டிருந்தேன்...
ஆளில்லா இருட்டுச்சாலை
அந்திக்கருக்கல்காற்றில்
அலைந்து கலைந்திருந்த
என் தலைமுடியை
மேலும் கலைத்து
பணியச் செய்து
பார் இப்போது
முன்னை விட
அழகாகி விட்டாய்
என்றாய்…
அன்று முதல்
மாறியது
என்
தலை எழில்
மட்டுமல்ல …
காதல் கன்னி
உன்
கை பட்டு
தடதடத்து
தடுமாறிப்
போனது
என்
தலை எழுத்தும்
கூடத்தான்…
6 comments:
கவிதையும் கவிதைக்கு காரணமான பெண்ணின் படமும் அருமை!
அருமையான கவிதாவின் சாரி கவிதையின் சாராம்சம் ரசித்தேன் நண்பரே..
இதையெல்லாம் தங்களது மணையாட்டி படிப்பதில்லையோ.....
காதல் வழிகிறது...
அருமை.
ஊக்கக் கருத்துரைக்கும், உன்னத ரசிப்பிற்கும் நன்றி திரு.S.P.Senthil Kumar...
// KILLERGEE Devakottai said...
அருமையான கவிதாவின் சாரி கவிதையின் சாராம்சம் ரசித்தேன் நண்பரே..
இதையெல்லாம் தங்களது மணையாட்டி படிப்பதில்லையோ.....//
ஹா..ஹா..ஹா. மனையாட்டி படித்து சொல்லும் கருத்துக்களுக்கு மண்டையாட்டி விடுவது என் பழக்கம் நண்பரே... நீங்கள் நகைச்சுவையாக கூறியிருப்பது போல் அவ்வப்போது படத்தில் உள்ளது போல் சாரி வாங்கிக் கொடுத்து சரி செய்து விடுவதும் உண்டு.
// பரிவை சே.குமார் said...
காதல் வழிகிறது...அருமை. //
ஆம் நண்பரே... காதல் பொங்கியதால் வழிகிறது. :))
Post a Comment