கோடையில் கொசுக்கடி
அதனினும் கொடியது
உன் நினைப்படி
அன்றாடம் நீ
புழங்கும் அறையடி
அங்கெலாம் நான்
இல்லாக் குறையடி
இடுப்பிலே உனக்கு மடிப்படி
அங்கே இருந்து தவிக்குது
என் இதயத்துடிப்படி
ஊரெல்லாம் இருக்குது உறவடி
நீ இல்லாமல்
என்நிலை துறவடி
அனைவரும் வியக்கும்
அழகுச்சிலையடி
அருகில் இருந்து
ரசிக்க முடியா
நிலையடி
அனுதினம் வருகுது
காலை மாலையடி
அன்பே உன் அருகாமை
வேண்டி நான்
அரற்றுவது
கடும் பாலையடி
கன்னி நீ இருக்கும்
திசையடி
காண முடியா மனதில்
உன் நினைவு
கசையடி
பறக்க எனக்கில்லை சிறகடி
பாவை உனை நினைத்து
பதறும் என்நிலை
ஈரம்காய்ந்த விறகடி
ஓய்வில்லா உழைப்படி
ஒப்புக்குத்தான்
இந்த பிழைப்படி
போதும் பொன்னே இந்த இழப்படி
வேண்டும் இறைவன் நினைப்படி
அமைப்போம் வாழ்வை
நல்ல நிலைப்படி
எப்பொழுது தான் சேர்வேன் உன்னை
அப்பொழுது நான் மறப்பேன் என்னை
அந்த நாளும் வருவது
எப்போது
எண்ணி ஏங்குது என்மனம் இப்போது....
இது எனது 200வது பதிவு மற்றும் பதிவுலகில் 10வது ஆண்டாகும்.
5 comments:
காதல் கவிதை காதலால் கசிந்துருகி ரசிக்க வைத்தது...
பத்தாண்டுப் பயணம்...
200வது பகிர்வு...
வாழ்த்துக்கள் ராஜா...
தொடர்ந்து எழுதுங்க.
காதல் ஓவரா பாதிச்சுட்டோ?
வாழ்த்துகள்
ராஜா,
காதல் கவிதை அற்புதம்.காதலியை சேரும் தூரம் தொலைவில் இல்லை, இப்போதே நீங்கள் 200 கல் தொலைவை கடந்து விட்டீர் இன்னும் கொஞ்சம் தூரம்தான். இணை சேர வாழ்த்துக்கள்.
கோ
அனைத்தும் வரிகளும் ரசித்த வைத்தது அருமை நண்பரே...
10வது ஆண்டுக்கும்
200 வது பதிவுக்கும் வாழ்த்துகள்
நேரமிருப்பின் எமது குடியுக்கு(ம்) வருகை தரவும்
அன்புடன்
கில்லர்ஜி.
தொடர் வருகைக்கும், ஊக்க கருத்துரைகளுக்கும் நன்றி நண்பர்களே....
Post a Comment