Wednesday, December 14, 2011

நண்பனே… என் நண்பனே…



உலகப்பந்தெங்கும்
உருண்டு  கொண்டிருந்தாலும்
கண்டம் விட்டு பல கண்டம்
பறந்து கொண்டிருந்தாலும்
ஏற்றம் இறக்கம்
எத்தனை நான் கண்டாலும்...

என் நண்பனே….

வாழ்வின்
பல தருணங்களில்
நீ என்னை
வாழ்த்தும் போதெல்லாம்
வருத்தப்படவைக்கிறாய்...

நான் உன்னை எப்போதும்
வாழ்த்தியதில்லையென….


சூழ்நிலைகள் என்னை
சுற்ற விட்டிருக்கலாம்...
சுகதுக்கங்களில் நான்
சுழன்றிருக்கலாம்…

அல்லது

என் நண்பனே….

சுத்தமாக உன்னை 
நான் மறந்து கூட
போயிருக்கலாம்….


எது எப்படி ஆனாலும்
என் வாழ்வில் வந்த
ஓராயிரம் உறவுகளில்
ஒன்றாய்
உன்னை நான்
நினைத்திருந்தாலும்….


நண்பனே… என் நண்பனே…

உன் உடலொட்டிய
உயிராய்தான்
என்னை நினைக்கிறாய்…
உணர்வால் நனைக்கிறாய்…

9 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை வரிகள் மனதை பிழிந்துவிட்டன. நண்பனை பற்றிய நல்லதொரு கவிதை. உங்க நண்பர் கொடுத்து வைத்தவர். கவிதை ரொம்ப நல்லாருக்கு.

துபாய் ராஜா said...

அனுபவம்தான் நான் எழுத்தில் வடித்தது. தங்கள் அன்புள்ளம் விரும்பி படித்தது.உடன் பிடித்தது.

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி ஸ்டார்ஜன்.

ஹேமா said...

மனம் நெகிழ வைகிறது வரிகள்.உங்கள் நண்பர் பார்த்தால் மிக மிக சந்தோஷப்படுவார் ராஜா.உங்கள் நட்பு இதேபோல் பலகாலம் வாழ வாழ்த்துகள்.

vasu balaji said...

good one raja

துபாய் ராஜா said...

// ஹேமாsaid...

மனம் நெகிழ வைகிறது வரிகள்.உங்கள் நண்பர் பார்த்தால் மிக மிக சந்தோஷப்படுவார் ராஜா.உங்கள் நட்பு இதேபோல் பலகாலம் வாழ வாழ்த்துகள்.//

வரவிற்கும், மேலான கருத்திற்கும் நன்றி ஹேமா. உண்மையில் வாழ்த்தியது நான்தான். நெகிழ்ச்சியடைந்த நண்பரின் உணர்ச்சிகளை அவரது பார்வையில் வார்த்தை வரிகளாக கொண்டு வந்து தாங்கள் வாசிக்கத் தந்தேன்.

துபாய் ராஜா said...

// வானம்பாடிகள் மொழிந்தது...

good one raja //

Very much Thanx for ur Valuable Comment Sir.

உணவு உலகம் said...

தூய நட்பின் வெளிப்பாடு. அருமை.

உணவு உலகம் said...

தூய நட்பின் வெளிப்பாடு. அருமை.

உணவு உலகம் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்