Tuesday, January 17, 2012

பொங்கல் விருந்து - " நண்பன் " வீட்டில் " வேட்டை "

பரபரப்பான பணிக்கிடையில் அலைபேசியில் ஒரு பாச அழைப்பு. " டேய், நாளைக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்திடு. சேகர், சுந்தர்ட்ட்யும் சொல்லிட்டேன். சால்ஜாப்பு சொல்லாம வந்து சேரு." அழைத்த அன்பு நண்பனிடம் " என்னடா நாலு பரதேசிக்கு சாப்பாடு போடறதா வேண்டுதலா.. " என்று கலாய்க்க " டேய்.. நாளைக்கு பொங்கல்டா.. " என்றவுடன்தான் "ஆமாம். பொங்கல்ல... " என்பது நினைவிற்கு வந்தது. உடன் மற்ற நண்பர்களிடமும் பேசி பொங்கலன்று மதியம் நண்பன் வீடு சென்று விருந்து உண்டு பொங்கலை அருமையாக, இனிமையாக கொண்டாடினோம். படங்களும், பகிர்வும் உங்கள் பார்வைக்கு...

பொங்கலோ பொங்கல்

வண்ணம் தீட்டப்பட்ட அழகிய சிறிய மண்பானை. விலை இந்தியப்பணம் ரூபாய் நானூறாம். கேஸ் அடுப்பில் பொங்கிய பால்.

நண்பன் வீட்டு வாயிலில்  அலங்கார கரும்பு வளைவும், அழகிய மாவிலை, பனை ஓலை தோரணங்களும்...



சேகர்,ராஜகோபால், நான் மற்றும் சுந்தர்
















நான்தான் போட்டோ எடுப்பேன்... மடியிலிருந்து துள்ளி, துடிக்கும் நண்பன் ராஜகோபாலின் மைந்தன் ஜெய்கிஷோர்

ஜெய்கிஷோர்

வாழ்க்கையில் எத்தனை படி ஏறினாலும் இப்படித்தான் எப்போதும் இணைந்திருக்க வேண்டும்


சீனப்புத்தாண்டை வரவேற்கும் அலங்காரங்கள்


மூணு பேரும் வண்டியேறிப் போயிட்டாங்க...

தியேட்டர் வரை சென்றும், டிக்கெட் இருந்தும் நேரம் ஒத்து வராமையால் படம் பார்க்க முடியவில்லை.

நண்பன் ராஜகோபால், அவரது மனைவி சகோதரி அருள்செல்வி, குழந்தை ஜெய்கிஷோர் ஆகியோரது அன்பான உபசரிப்பு. அருமையான விருந்து. கல்லூரி காலத்திற்கே அழைத்து சென்ற கலகலப்பான உரையாடல்கள். உழைத்து, களைத்த உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தையும், உல்லாசத்தையும் ஒருங்கே தந்ததால் அடுத்து வரும் சீனப்புத்தாண்டு விடுமுறைக்கும் வித்தியாசமான இடத்தில் சந்திக்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.

2 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய பொங்கலை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது ராஜா.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Rajagopal said...

மிக நன்றாக என் வீட்டில் நடந்த சந்திப்பை தொகுத்து வழங்கியதற்கு நன்றி. இது போன்ற சந்திப்புகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்பது என் விருப்பம்.