எகிப்தில் ஏறத்தாழ எல்லா இடங்களையும் பார்த்து விட்டாலும் கட்டுமானத்துறையின் மிகப்பெரும் சாதனையான சூயஸ் கால்வாயை சென்று பார்க்க தகுந்த நேரம் வாய்க்கவில்லை. நாங்கள் இருக்கும் அலெக்சாண்டிரியா நகரிலிருந்து சுமார் 250கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் இக்கால்வாய் அமைந்துள்ள போர்ட் சைட் நகருக்கு நேற்று திடீர் பயணமாக கிளம்பிவிட்டோம்.
சூயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் இணைக்கிறது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக்கால்வாயினால் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது. இக்கால்வாய் அமைந்த பின் கிட்டத்தட்ட 6000கிலோ மீட்டர் பயண தூரம் குறைந்ததால் உலக கப்பல் போக்குவரத்தில் இக்கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
சூயஸ் கால்வாய் வழிப்பாதையை குறிக்கும் உலக வரைபடமும், கால்வாயின் வழியில் உள்ள முக்கிய எகிப்து நாட்டு நகரங்களை காட்டும் படமும்.
பச்சை நிறமே.... பச்சை நிறமே....
பயண வழியே பேரீச்சை மரத்தோட்டங்கள்
பேரீச்சை மரங்களுக்கிடையே ஊடு பயிராக காய்கறிச் செடிகள்
நெல் வயல்களும், கீரைத் தோட்டங்களும்...
எங்கள் வாகனமும், ஓட்டுநரும்
எங்கள் ஓட்டுநர் திரு.ஆதில் எங்கள் மீது பேரன்பும், பிரியமும் கொண்டவர். அலுவலகத்திற்கு மட்டும் அல்லாமல் எங்கள் எல்லா எகிப்திய பயணங்களிலும் உடன்வந்து பல உதவிகள் செய்தவர். பகலில் இந்த சாலை ராடார் கண்காணிப்பில் இருப்பதால் காலையில் செல்லும் போது மெதுவாக 4மணி நேரம் ஓட்டி சென்றவர் இரவு திரும்பும் போது 2மணி நேரத்தில் பறந்து கொண்டு வந்து பாதுகாப்பாக சேர்த்தார்.
செல்லும் வழியில் ஒரு சிறிய மீன்பிடி துறைமுகம்
அழகிய மணல் மேடுகள்
இக்கரையிலிருந்து அக்கரை ஒரு பார்வை
பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இக்கரையிலிருந்து அக்கரை சென்று பார்த்து விட்டு திரும்பி வர இலவசமாக கப்பலகள் தொடர்ந்து இயங்கி கொண்டே உள்ளன. நாம் செல்லும் கார்களையும் மிகச்சிறிய கட்டணம் செலுத்தி கப்பலில் ஏற்றிச்செல்லாம்.
படகில் ஏறி பயணம்
கப்பலில் இருந்து கால்வாயின் தோற்றம்
கால்வாயை கடக்கும் கப்பல்கள்
அக்கரையில் அமைந்துள்ள அழகிய மசூதி
நாங்கள் சென்ற கப்பல். கார்களையும் ஏற்றி செல்லலாம்.
கப்பலில் இருந்து கரையில் இறங்கும் கார்கள்
பிரிட்டிஷார் வசித்த பழைய காலத்து வீடுகள்
கண்ணைக் கவரும் கால்வாயும், கப்பல்களும்...
கப்பலில் இருந்து கால்வாயின் தோற்றம்
கால்வாயை கடக்கும் கப்பல்கள்
அக்கரையில் அமைந்துள்ள அழகிய மசூதி
நாங்கள் சென்ற கப்பல். கார்களையும் ஏற்றி செல்லலாம்.
கப்பலில் இருந்து கரையில் இறங்கும் கார்கள்
பிரிட்டிஷார் வசித்த பழைய காலத்து வீடுகள்
கண்ணைக் கவரும் கால்வாயும், கப்பல்களும்...
அன்பு நண்பர்களே, மூன்றாம் நூற்றாண்டிலே புராதான மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின் பல நாட்டு அரசுகளின் விடாமுயற்சியால் வெற்றிகரமாக அமைக்கப்பட்டு பல போர்களையும், போராட்டங்களையும் சந்தித்து தற்போது எகிப்திற்கு பெரும் வருமானத்தை அள்ளித்தரும் சூயஸ் கால்வாய் குறித்த மேலதிக வரலாற்று தகவல்களையும், அரிய பல புகைப்படங்களையும் இந்த சுட்டியில் சென்று பார்த்து மகிழுங்கள்.
23 comments:
WOW! Very nice photos.
தகவல்களும் படங்களும் குறிப்புகளும் சேர்க்கப்பட்ட அசத்தல் தொகுப்பு.
எகிப்து பற்றிய தகவலுக்கு நன்றி.. belly dance பற்றியும் சொல்லணும்..
சூயஸ் கால்வாய்க்கு நேரிலேயே போய் பார்த்துவிட்டு வந்தமாதிரி இருக்கு சார்..! அதுவும் திரு.ஆதிம் போல் நல்ல மனிதர் சக பயணியாக கிடைத்துவிட்டால், பயணத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிவிடுகிறது. புகைப்படங்களும் தகவல்களும் மிக அருமை..! பகிர்வுக்கு நன்றி..!
-
DREAMER
சூயஸ் கால்வாயை அழகாக
சுற்றி காண்பித்து விட்டீர்கள்!!!
நன்றி.
சூப்பருங்கண்ணோ
புகைப்படங்கள் அனைத்தும் அருமை..... விவரிப்பும் நன்றாக இருந்தது...
பள்ளிகூட பாடத்துல கேள்விபட்டது. அழகா போட்டோவோட போட்டு தாக்கிட்டயேண்ணே....
நெம்ப டாங்க்ஸ்......
:)
ட்ரிப் படங்களை பார்த்தால் வரணும்னு தோணுது....
ராஜா,உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணித்த ஒரு பிரமிப்பு.சொன்ன விதம் அருமை.படங்களும்கூட.
புக்லதான் படிச்சிருக்கோம்.
நல்லாருக்கு படங்கள். ரோடெல்லாம் நம்மூர் மாதிரிதான் இருக்கு.
அறிய தந்தமைக்கு மிக்க நன்றி . மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்
பகிர்வுக்கு நன்றி.
அங்கே யாரையாவது ஒரு எகிப்தியரை பார்த்து "மிஸ்ரி" என்று அழைத்துவிட்டு,
அதற்கு அர்த்தம்.....
என்னவென்று கேளுங்கள்.....
நல்லா கிடைக்கும்?!
அருமையான டூர்:) நன்றி ராஜா
வாவ்.. கொடுத்து வைத்தவரய்யா..
அழகான புகைப்படங்கள்.
அசத்தல்!
அட ரொம்ப சூப்பரா இருக்கே.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
உங்கள் பயணம் சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துகள்.
எப்பவோ சின்ன வயசில படிச்சதுங்க சூயஸ் கால்வாய் பத்தி. புகைப்படங்கள் அருமைங்க. நேர்ல பார்க்கறமாதிரி இருக்குங்க.
நல்ல தொகுப்பு. இதேபோல் தென் அமெரிக்காவில் அட்லான்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் பனாமா கால்வாய் இணைக்கிறது. இரு கடல்களின் நீர்மட்டம் வெவ்வேறாக இருப்பதால், கால்வாயில் தடுப்புகளை அமைத்து நீர்மட்டத்தை ஏற்றியும் இறக்கியும் செய்து படிப்படியாக கப்பல்களை கால்வாய் வழியே செலுத்துகிறார்கள். அதே போன்ற அமைப்பு சூயஸில் உள்ளதா?
தகவல்களும் படங்களும் அருமை....
அருமையான படங்கள். பாலைவனமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் பச்சை பசேல் என்று இருக்கே. ஸ்கூல படிச்சது. வாவ். ரொம்ப நன்றி. ஒரு மாதிரி ஜூன் 2009 வரை உங்கள் ஆக்கங்களை படிச்சு முடிச்சிட்டேன். திகில் கதையையும் ஈஜிப்ட் பயண கட்டுரையையும் தவிர. சந்திரமுகி கதை உண்மையா? மத்ததுகள படிக்க பயமாக இருக்கு. ஈஜிப்ட் பயண கட்டுரையை ஆறுதலாக படிக்கணும். அவசரமாக படிக்க கூடாது.
கப்பல் சூயஸ் கால்வாயை கடப்பது எப்படி என்று படங்கள் மூலம் விளக்க முடியுமா? ரெண்டு பக்கம் கடல்களும் லெவல் ஒரே மாதிரி இல்லாததால.. & some more things... எப்பவோ வாசிச்ச ஞாபகம்.. அதில் படங்கள் இல்லாததால சரியாப் புரியல.
சான்ஸே இல்லை.ஃப்ரீயா ஒரு மெகா ட்ரிப் கூட்டிக்கிட்டு போய் வந்த துபாய் ராசா பல்லாண்டு எகிப்திலேயே இருந்து இன்னும் நமக்கு நல்ல பல இடங்களை சுற்றி காண்பிக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்......
Post a Comment