போல் குலுக்குகிறாய்
என் மனதை...
அன்பே உன்
முரட்டு அன்பினால்
உலுக்குகிறாய்
உயிரெ(ல்)லாம்
என் உணர்வெ(ல்)லாம்...
------------------------------------
காதல் கன்னிப் பேய்
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு
கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு
கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.
-------------------------------------
காதல் விளையாட்டில்
நீயொரு பொம்மை
நானொரு பொம்மை
கலங்காதே கண்ணெ
என்னருமை பெண்ணே
காலக்குழந்தை
இணைத்திடும் நம்மை.
நீயொரு பொம்மை
நானொரு பொம்மை
கலங்காதே கண்ணெ
என்னருமை பெண்ணே
காலக்குழந்தை
இணைத்திடும் நம்மை.
--------------------------------
ஏதுமறியா குழந்தை
போல் இருந்தாய்
காதலிக்கும் போது...
ஏதும் செய்யமுடியா
பொம்மை ஆக்கினாய்
என்னை கல்யாணத்திற்கு பின் ....
-------------------------------------------
பணிப்பளுவால் எழுத முடியாமல் நீண்ட நாள்களாக தவித்த என் கவிமனதை கவிதை எழுத தூண்டிய தோழி ஹேமாவிற்கு நன்றி.
12 comments:
நல்லாயிருக்கு நண்பா.
பணிப் பளுவிலும் இப்படி ஓர் அருமையான கவிதையா? ரொம்ப நல்லாருக்குங்க ராஜா!
கள்ளமில்லா பிள்ளைபோல், ஏதுமறியா குழந்தை என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
பிரபாகர்.
ராஜா உண்மையா இந்தப் படத்துக்கு எனக்குன்னா காதல் கவிதை வராது.
அசத்திட்டீங்க.எல்லாமே ஒண்ணைவிட ஒண்ணு நல்லாருக்கு.வாழ்த்துகள்.
ஓஓஓஓகே
சபாஷ் நல்லாருக்குங்க ராஜா!
குழந்தை கை பொம்மை
போல் குலுக்குகிறாய்
என் மனதை...
அன்பே உன்
முரட்டு அன்பினால்
உலுக்குகிறாய்
உயிரெ(ல்)லாம்
என் உணர்வெ(ல்)லாம்... //
முடிச்சு மிக அருமைங்க .... மிக ரசிக்கும் படியுள்ளது...இந்த புதிய கோணம்.
படத்துக்கேற்ற கவிதை மாதிரி தெரியல.கவிதைக்கேற்ற படம் மாதிரி தெரியுது..நல்லா இருக்கு பாஸ்.
அருமை எல்லாமே. :)
//காதல் கன்னிப் பேய்
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு
கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.//
அழகான வரிகள்...
http://kgjawarlal.wordpress.com
வரிகளை இரசித்தேன்.
அனைவருக்கும் இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்
அண்ணா....
எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை...
அனைத்துமே அருமை
படம் பயமுறுத்துவதுபோல் இருந்தாலும் உங்கள் கவிதைகள் அனைத்தும் அசத்தல்
Post a Comment