Wednesday, November 04, 2009

என்னவளே....

படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....

சூரியனை கண்டால் மலரும் தாமரை சந்திரனை கண்டால் மலரும் அல்லி என்னவளே உன்னை நினைத்தாலே மலருதே என் முகம்....

நல்லபாம்பின் பல்பட்டால் ஒரு முறைதான் உயிர்போகும் என்னவளே நல்லழகுப்பெண் உன்பார்வை பட்டு பலமுறை போகுதே என்னுயிர்....

14 comments:

பிரபாகர் said...

ராஜா.... ம்... ம்... ஒரு மாதிரியாத்தான் இருக்கீரு போலிருக்கு. கவித, கவித... கலக்கல்...

பிரபாகர்.

Raju said...

அய்... நல்லாருக்கே..!

இரும்புத்திரை said...

என்ன ஆச்சு..ஏன் இப்படி..ரொம்ப நல்லா இருக்கு..

ப்ரியமுடன் வசந்த் said...

//படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....//

ஆஹா..

அற்புதம்..

Thamira said...

என்னவள்ங்கிற வார்த்தையை தடை பண்ணனும்.. முடியலை..

இருக்கிறவங்க பத்தாதுன்னு இன்னொண்ணா.. யப்பா.. சாமீ..

அன்புடன் நான் said...

கல்யாணமாகி விட்டதா... இல்லையா?
துணிச்சலா படம் போடுரிங்களே! கவிதை நல்லாயிருந்ததுங்க துபாய் ராசா.

துபாய் ராஜா said...

// பிரபாகர் said...
ராஜா.... ம்... ம்... ஒரு மாதிரியாத்தான் இருக்கீரு போலிருக்கு. கவித, கவித... கலக்கல்...

பிரபாகர்.//

வாங்க பிரபாகர்.. இங்க கிளைமேட் மாறி ரொம்ப கூலாகி ஒரு மாதிரியா இருக்குது.... அதான் காதல் கவிதையா பொங்குது.... :))

துபாய் ராஜா said...

// ♠ ராஜு ♠ said...
அய்... நல்லாருக்கே..!//

வாங்க ராஜூ தம்பி, உங்க ரசனையும் நல்லாருக்கு... நன்றி.

துபாய் ராஜா said...

//பிரியமுடன்...வசந்த் said...
படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....//

ஆஹா..

அற்புதம்..//

வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வசந்த்... :))

ஹேமா said...

எங்கடா ரொம்ப நாளாக் காணோமேன்னு பாத்தேன் !

துபாய் ராஜா said...

// இரும்புத்திரை அரவிந்த் said...
என்ன ஆச்சு..ஏன் இப்படி..ரொம்ப நல்லா இருக்கு..//

ஆமா தம்பி அரவிந்த், என்னமோ ஆனாலும் இது நல்லாத்தான் இருக்கு... :))

Muruganandan M.K. said...

நல்லாக இருக்கின்றன உங்கள் கவிதை வரிகள்.

Admin said...

//படித்து வியந்த அகநானூறு புறநானூறு நிகழச்சிகளெல்லாம் மறந்தேன். என்னவளே உன் முகநானூறு உணர்ச்சிகள் கண்டபின்....//



அருமை...

எங்கேயோ போய்ட்டிங்க

சிநேகிதன் அக்பர் said...

நல்லா இருக்கு படங்களும் கவிதைகளும்.