Wednesday, October 21, 2009

பணிப்பளு...


ஊற்றாக தோன்றி
ஓடையாக உருவாகி
அருவியாய் விழுந்து
ஆற்றில் கலந்து
கால்வாய் பல கடந்து
கடலில் கலக்கும்போது
காணாமல் போகிறோம்
கடைசியில் நாம்.......

12 comments:

vasu balaji said...

:)). கஷ்டத்த கூட கவிதை சொல்லி ஆத்திக்கலாம் போல இருக்கே ராஜா. அழகு.

அத்திரி said...

எனக்கும் இதே மாதிரி கவித எழுத சொல்லிக்கொடுங்களேண்

பிரபாகர் said...

வாழ்வின் அர்த்தத்தை
வார்த்தைகள் சில கோர்த்து
ஆழ்மனதில் பதியுமாறு
அழகாய் ராஜாவும்

நாலிரண்டு வரிகளினில்
நயமாய் சொல்லியது
எளிமையான அருமை
நண்பரும்மால் பெருமை...

பிரபாகர்.

துபாய் ராஜா said...

//வானம்பாடிகள் said...
:)). கஷ்டத்த கூட கவிதை சொல்லி ஆத்திக்கலாம் போல இருக்கே ராஜா. அழகு.//

ஆமா சார்.ஆளை அமுக்குது வேலை... இணையம்பக்கம் இரவுதான் வரமுடியுது... :((

துபாய் ராஜா said...

//அத்திரி said...
எனக்கும் இதே மாதிரி கவித எழுத சொல்லிக்கொடுங்களேன்..//

கொஞ்சம் கஷ்டம்னாலும்
எழுதப்பழகிட்டா ரொம்ப
இஷ்டமாயிரும் நண்பரே...

உள்ளத்தில் தோன்றும்
உணர்ச்சிகளை பிடித்து
அழகான இனிமையான
வார்த்தைகளில் வடித்து
எழுதியதை மீண்டும் மீண்டும்
பலமுறை படித்து
அளவிற்கேற்றார்போல் மடித்து
கொடுத்தால் படிப்போர் மனதை
குடித்துவிடும் கவிதை...

கலகலப்ரியா said...

அபாரம் ராஜா..!

Anonymous said...

நல்ல கவிதை.

ஹேமா said...

பெரிய விஷயத்தை சின்னதா சொல்லி முடிச்சிட்டீங்க.ஆனாலும் மனசில பெரிய பெருமூச்சு.

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள்

ஈ ரா said...

நன்றாக இருக்கிறது..

ரெம்ப வேலையோ, சின்னதா முடிச்சுட்டீங்க

விக்னேஷ்வரி said...

வேற என்ன பண்றது...

Thamira said...

வேலைப்பளுவுக்கு இந்த உவமை பொருத்தமற்றிருக்கிறதோ?