Saturday, October 17, 2009

தீபா”வலி”






அமெரிக்க அதிபர்
மலேசிய அமைச்சர்
நாட்டின் பிரதமர்
இன்னும் பல
தலைவரெல்லாம்
தொலைக்காட்சியில்
தீபாவளி வாழ்த்து
கூறினர்
இந்திய மக்களுக்கு.....

நானும் வாழ்த்து
கூறினேன்
தொலைபேசியில்
என் இனிய
குடும்ப மக்களுக்கு.....

--------------------------------------

தீபாவளிக்கு தீபாவளி
தேங்காய் பர்பி
செய்வார் என் அம்மா.


பள்ளிக்கு
எடுத்துச்சென்று
பகிர்ந்துண்ணுவேன்
பசங்களோடு..

படிப்பு முடித்து
பலநாடுகள்
சென்றேன்
பணிக்காக..

தீபாவளியுமில்லை...
தேங்காய் பர்பியுமில்லை...

----------------------------------------

எல்லா கதவுகளையும்
இழுத்தடைத்து
இருட்டறைக்குள்
இருந்தாலும்
வீல் வீல் என
வீறிட்டு அழுகிறது
வெடிச்சத்தத்திற்கு
பயந்த குழந்தை...

-------------------------------------

17 comments:

பழமைபேசி said...

//இருடறைக்குள்//

இருட்டறைக்குள்

தீபாவளின்னாலே வெடிச் சத்தம்தான்!

பா.ராஜாராம் said...

இரண்டாவதும்,மூன்றாவதும் நல்ல கவிதைகள் ராஜா.தீபாவளி வாழ்த்துக்கள் மக்கா.

ஹேமா said...

தீபாவளி உண்மையில் வலிதான்.
உங்கள் உணர்வை அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க.கடைசிப் பந்தி எனக்குப் பிடிச்சிருக்கு.தீபாவளி வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

// பழமைபேசி said...
//இருடறைக்குள்//

இருட்டறைக்குள்//

வரவிற்கும், சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி பழமைபேசியாரே... திருத்திவிட்டேன்...


//தீபாவளின்னாலே வெடிச் சத்தம்தான்!//

உண்மைதான். ஆனால் அக்கம்பக்கம் இருக்கிறவங்களுக்கு தொந்திரவு கொடுக்காம கொண்டாடலாமேங்கிற கருத்துல எழுதினேன் நண்பரே...

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ச் எனக்கும் வலியோடதான் இன்றைய தீபாவளி...ரெண்டாவது கவிதை சேமம்

துபாய் ராஜா said...

// பா.ராஜாராம் said...
இரண்டாவதும்,மூன்றாவதும் நல்ல கவிதைகள் ராஜா.தீபாவளி வாழ்த்துக்கள் மக்கா.//

வரவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணாச்சி. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

கலகலப்ரியா said...

அழகான கவிதை.. வாழ்த்துகள் ராஜா..!

கலகலப்ரியா said...

mm.. voted.. (tamilmanam vote poda kaththukunga.. click thumbs up.. lol..)

u dun hv to publish this comment.. =))

vasu balaji said...

அமைதியான மத்தாப்பாய்க் கவிதைகள் நன்று. உங்களுக்கு என் வாழ்த்துகள்.

யாழினி said...

அருமையாக இருக்கிறது ராஜா அனைத்து கவிதைகளும்! இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

தீபாவளி வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

எல்லா கதவுகளையும்
இழுத்தடைத்து
இருட்டறைக்குள்
இருந்தாலும்
வீல் வீல் என
வீறிட்டு அழுகிறது
வெடிச்சத்தத்திற்கு
பயந்த குழந்தை...//

ந‌ல்லாயிருக்கு...துபாய் ராசா.

அத்திரி said...

நண்பா அருமை..வெளியூரிலோ வெளிநாட்டிலோ இருப்பவர்களின் உணர்வை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறாய்.......

பிரபாகர் said...

முக்கியமான தருணங்களில் நமக்கு உயிர்கொடுத்த, வளர்த்த, நம்மோடு வளர்ந்த உறவுகளை விட்டு பிரிந்து இருத்தல் மிக கொடுமையானது நண்பா... கவிதையை படித்தலின் பின், ஒரு ஏக்கம், பின் நினைவின் தாக்கம்....

அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பா...

பிரபாகர்.

Jackiesekar said...

நிச்சயமா அந்த பிலிங் வலிக்குது...

Thamira said...

வீறிட்டழும் குழந்தை ஓகே ரகம். மற்ற‌வை சுமார்.!

இரசிகை said...

wow........

pidichirukku:)