Wednesday, October 14, 2009

எகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 4 – அஸ்வான் பேரணை.

பாகம் 3

பாகம் 4 – அஸ்வான் பேரணை


எதுவுமே இல்லாத பாலைவனத்தில் எல்லா வசதிகளுடனும் எழிலாக இருந்த உணவகம்.









உணவகத்தில் சோளரொட்டியும், காரமாய் குழம்பும் இருந்தது. கொண்டு வரச்சொல்லி அமர்ந்தோம்.




















கொண்டுவந்த ரொட்டியை உணவகப் பணியாளர் அப்படியே டேபிளில் வைத்துச் செல்ல ஒட்டுநர் இருவரும் எடுத்து சாப்பிடச் சொல்ல எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நமது ஊரில் ஹோட்டல்களில் இலை ஓரம் கிழிந்தததற்கெல்லாம் எப்படி சண்டை போட்டிருக்கிறோம் இங்கே தட்டு கூட இல்லை அப்படியே வைத்து செல்கிறானே என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். சரி என்ன செய்ய இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொள்ள வேண்டியதுதான் என்றவாறு சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.












ஒன்றரைமணி நேர பயணத்திற்குபின் அஸ்வான் அணையின் முகப்பை அடைந்தோம். அங்கே இருந்த பிரமாண்ட நினைவுச்சின்னம் எங்களை மிகவும் கவரவே இறங்கி பார்க்கச்சென்றோம்.





























அஸ்வான் அணை சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டதால் நினைவுச்சின்னமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட ஸ்தூபி அது. ஐந்து பெரிய பக்கவாட்டு சுவர்களும் உச்சியில் வட்டவடிமாக இணைக்கப்பட்டிருந்தன.





























ஒரு சுவரில் எகிப்து, சோவியத் ரஷ்யா நாடுகளின் அடையாள முத்திரை சின்னங்களோடு இரண்டு நாட்டு மொழிகளிலும் குறிப்பு எழுதப்பட்டிருந்தது. மற்ற சுவர்களில் எகிப்திய ஓவியங்கள் அழகாக வரையப்பட்டிருந்தன.




















நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்கள் ஓட்டுநர் இருவரும் பணிநேர காவலாளியிடம் பேசி மேலே சென்று பார்க்க அனுமதி வாங்கி வந்தனர். லிப்டின் மூலம் மேலே சென்று பார்க்கலாம் என்று கூற கிடைத்த வாய்ப்பை விடவேண்டாம் என உடனே ஒப்புக்கொண்டோம். சுவரின் கீழ்பகுதியில் சிறிய கதவுடன் இருப்பதே லிப்ட் ஆகும். சுவர் பெரியதாக இருப்பதால் பார்க்க சிறிதாக தெரிகிறது. பத்துபேர் நிற்கும் அளவு பெரிய லிப்ட்தான்.









சோவியத் ரஷ்யா மற்றும் எகிப்து நாடுகளின் அதிகாரபூர்வ அரசாங்க அடையாளச் சின்னங்கள்.











மேல்புற வட்டவடிவ அமைப்பு.











மேலிருந்து கீழே பார்த்த சில காட்சிகள்...
வாகனங்கள் நிறுத்துமிடம்











அணையின் நடுவே ஒரு அரங்கு











அணையின் தடுப்புச்சுவரும் அதன்மேல் அமைக்கப்பட்ட அழகான சாலையும்











ஸ்தூபிக்கு வரும் பாதை - மேலிருந்து ஒரு பார்வை
வித்தியாசமான கோணத்தில் மேற்புற அமைப்பு


நினைவுச்சின்னத்தின் நினைவாக ஒரு குழுப்படம்
வித்தியாசமான கோணத்தில் கீழ்ப்புற அமைப்பு


ஸ்தூபியின் மேல்புற வட்டவடிவ அமைப்பு
அணையும், அணை சார்ந்த இடங்களும் - ஸ்தூபியின் மேலிருந்து கீழே சில காட்சிகள்













( பயணமும் படங்களும் தொடரும்.... )


17 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த போட்டோல நீங்க எங்க இருக்கீங்க

கலகலப்ரியா said...

woah & wow.. amazing pictures.. enna title onnum kanom.. :-s

பிரபாகர் said...

ராஜா,

விளையாட்டுக்கு சொல்லவில்லை, இவ்வளவு தெளிவாய் படங்களுடன் எந்த ஒரு பயணக் கட்டுரையையும் படித்ததில்லை. நிறைய மெனக்கட்டிருக்கிறீர்கள். மிகவும் அருமை ராஜா...

பிரபாகர்.

அன்புடன் நான் said...

அனைத்து படங்களும் அம்மாடியோ ரகம் ... மிக கலைநுட்பத்துடன் அந்த கட்டடமும், அதிலிருந்து கீழ்நோக்கி எடுக்கப்பட்ட படங்களையும் ரசித்தேன்.

//அஸ்வான் அணை சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டதால் நினைவுச்சின்னமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட ஸ்தூபி அது. நான்கு பெரிய பக்கவாட்டு சுவர்களும் உச்சியில் வட்டவடிமாக இணைக்கப்பட்டிருந்தன.//


இதில் "நான்கு" பெரிய பக்கவாட்டு சுவர்களும்... என்றிருப்ப‌து த‌வ‌று என‌ நினைக்கிறேன். எண்ணிபார்க்கையில் ஐந்து ப‌க்க‌வாட்டு சுவ‌ர் உள்ள‌து. ப‌கிர்வுக்கு மிக்க‌ ந‌ன்றிங்க‌ துபாய் ராசா.

துபாய் ராஜா said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இந்த போட்டோல நீங்க எங்க இருக்கீங்க..//

வாங்க ஸ்டார்ஜன்.முந்தைய பதிவு பின்னூட்டத்துல உங்க கேள்விக்கு பதில் இருக்கு.... :))

துபாய் ராஜா said...

// கலகலப்ரியா said...
woah & wow.. amazing pictures.. enna title onnum kanom.. :-s//

வாழ்த்துக்களுக்கு நன்றி ப்ரியாக்கா. இப்ப எல்லாம் சரியா இருக்கு... :))

துபாய் ராஜா said...

// பிரபாகர் said...
ராஜா,

விளையாட்டுக்கு சொல்லவில்லை, இவ்வளவு தெளிவாய் படங்களுடன் எந்த ஒரு பயணக் கட்டுரையையும் படித்ததில்லை. நிறைய மெனக்கட்டிருக்கிறீர்கள். மிகவும் அருமை ராஜா...

பிரபாகர்.//

புரிதலுக்கு நன்றி பிரபாகர். படங்களை தொகுப்பது கஷ்டமாகவும்,அதிக நேரத்தையும் எடுக்கிறது என்றாலும் உங்கள் பாராட்டுக்கள் மிகவும் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் தருகின்றன.

துபாய் ராஜா said...

வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி திரு.கருணாகரசு. தவறை திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

அ. நம்பி said...

??கொண்டுவந்த ரொட்டியை உணவகப்பணியாளர் அப்படியே டேபிளில் வைத்துச்செல்ல ஒட்டுநர் இருவரும் எடுத்து சாப்பிடச்சொல்ல எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.//

சரி...

//இருக்கும் இடத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொள்ள வேண்டியதுதான் என்றவாறு சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.//

சரி, சாப்பிட்டு முடித்தீர்கள்; சோள ரொட்டியின் சுவை எப்படி இருந்தது என்றும் சொல்லி இருக்கலாமே! (சோள ரொட்டி சாப்பிட்டிராத என்னைப் போன்றவர்களுக்காக...!)

சந்தனமுல்லை said...

ஃபோட்டோஸ் பகிர்வுக்கு நன்றி!! சப்பாத்தி அப்படியே மேஜையிலே வைத்திருக்கிறார்களே...:-)

அது ஒரு கனாக் காலம் said...

good one sir, very well written, lots of nice photos.. I will read the earlier ones too..

வடுவூர் குமார் said...

அருமையான படங்கள்.கட்டுமானத்துறை கண்ணோடு பார்க்க இன்னும் பல விபரங்கள் தெரிகிறது.

vasu balaji said...

அழகான பயணக் கட்டுரைன்னா இது! நன்றிங்க ராஜா.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமையான சுற்றுலாவிற்கு அழைத்து செல்கிறீர்கள்! அனுபவித்தேன்!

விக்னேஷ்வரி said...

அஸ்வான் அணை பிரம்மாண்டமாக உள்ளது. ரொம்ப அழகான படங்கள். ஒற்ற ரசனையுள்ளவர்களுடன் பார்க்க வேண்டும்.

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா மொழிந்தது...

// கலகலப்ரியா said...
woah & wow.. amazing pictures.. enna title onnum kanom.. :-s//

வாழ்த்துக்களுக்கு நன்றி ப்ரியாக்கா. இப்ப எல்லாம் சரியா இருக்கு... :))//

hihihi..

இரசிகை said...

enakkum oor suththk kaanpichchitteenga:)

vaazhththukal.......