Saturday, October 03, 2009

ஏதோ மோகம்... – பாகம் 7



அடுத்த நாள் காலை 8 மணி அளவில் அவள் வீட்டிற்கு சென்றேன். வாசலிலே காத்திருந்தவள் “அம்மா 8 மணிக்கு வேலைக்கு போயிருவாங்க. அதுக்குள்ள நீங்க வரணுமேன்னு பார்த்துகிட்டேயிருந்தேன்” என்றாள். அவளது அம்மாவும் “வாங்க. வாங்க. ரெண்டு நாளா உங்க புராணம்தான் பாடிக்கிட்டுருக்கா. அவளுக்கு யாரையாவது ரொம்ப புடிச்சுப்போயிட்டுதுன்னா இப்படித்தான்” எனவும் ராதா முகத்தில் ஒரே வெட்கம். “சரி.எனக்கு நேரமாயிடுச்சு. நான் கெளம்பறேன். நீங்க சாப்பிட்டு அப்புறம் போங்க” என்றவாறு அவர் கிளம்பி சென்றார். வீடு ஆடம்பரமின்றி எளிமையாக இருந்தது.


“சேமியா உப்புமா சாப்பிடுவீங்கல்ல” என்றவாறே அவள் ஆளுக்கொரு தட்டில் சேமியா உப்புமா எடுத்து வந்தாள். பேச்சிலர் லைஃபுல எது கெடச்சாலும் அடிச்சு கெளப்ப வேண்டியதுதான்” என்றவாறே சாப்பிடத் தொடங்கினேன். ”ம்ம். லெமன்லாம் பிழிஞ்சு நல்லா டேஸ்ட்டா இருக்கே. யார் பண்ணது” என்று கேட்டவனிடம், “நான்தான் பண்ணினேன்னு சொன்னா நம்பவா போறிங்க” என்று குறும்பாக அவள் பதில் கூற “பரவாயில்லையே. சமைக்கல்லாம் தெரியுமா” என்றேன். அம்மா வேலைக்கு போறதால சாப்பாட்டுக்கு கஷ்டப்படக்கூடாதுன்னு சின்ன வயசுலே சமையல் கத்துகொடுத்திட்டாங்க” என்றாள்.


சாப்பிட்டுமுடித்து இருவரும் கிளம்பினோம். அன்றும் பயிற்சி பரபரப்பாய் இருந்தது. மற்றவர்கள் யாரோடும் நின்று பேசாத ராதா என்னோடு நெருங்கிப் பழகுவதை பலரும் பொறாமை கண்ணோடு பார்ப்பது நன்றாக தெரிந்தது. எனது பாஸும் வித்தியாசமாய் பார்ப்பது போல் இருந்தது.


அன்று மாலை திரும்பும்போது நான் ஏதும் பேசாமல் வந்த்தை கண்ட ராதா “என்ன டல்லா இருக்கீங்க” என்றதற்கு “தலைவலி.அதான்” என்றேன். அதன்பின் அவளும் ஒன்றும் கேட்கவில்லை. அவள் வீட்டருகே இறக்கி விட்ட போது “உள்ள வாங்களேன்.காபி, டீ தான் சாப்பிடமாட்டிங்க. கஷாயம் வைத்து தருகிறேன். குடித்து விட்டு போங்களேன்” என்றாள். “பரவாயில்லை. போய் நல்லா தூங்கினா சரியா போயிடும்” என்று கூறி விடைபெற்று சென்றேன்.


அன்று இரவு ஏதேதோ குழப்பமான யோசனைகள். அவளது அப்பாவித்தனமான முகமும், குறும்பு பேச்சும், சிறுபிள்ளை போன்ற சிரிப்பும் என்னை தூங்கவிடாமல் அலைக்கழித்தன. “ஒரு சின்னப்பெண்ணின் மனதில் தேவையில்லாத எண்ணங்களை ஏற்படுத்தும்படி நடந்துகொண்டோமோ” என குழம்பி கொண்டே இருந்தேன். எக்காரணத்தை கொண்டும் அவளது படிப்பும், வளர்ச்சியும் நம்மால் தடைப்படக்கூடாது என்பதால் ”சரி. எல்லாவற்றிற்கும் இன்றோடு முடிவு கட்டிவிடலாம்” என முடிவு செய்தேன்.


( தொடரும் )

8 comments:

லோகு said...

//“ஒரு சின்னப்பெண்ணின் மனதில் தேவையில்லாத எண்ணங்களை ஏற்படுத்தும்படி நடந்துகொண்டோமோ” என குழம்பி கொண்டே இருந்தேன்.//

அவ்வளவு நல்லவரா நீங்க.. எனக்கு நம்பிக்கை இல்ல..

லோகு said...

//.மற்றவர்கள் யாரோடும் நின்று பேசாத ராதா என்னோடு நெருங்கிப் பழகுவதை பலரும் பொறாமை கண்ணோடு பார்ப்பது நன்றாக தெரிந்தது.//

எனக்கும் பொறாமையாத்தான் இருக்கு..

லோகு said...

கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது.. தொடருங்கள்..

Raju said...

இன்னாங்கோ, அடுத்த பாகம் கிளைமேக்ஸ் போலயே...!

பிரபாகர் said...

காதல் வயப்படுதலை கண்ணியமாய் சொல்லுகிறீர்கள் ராஜா... சுவராஸ்யமாய் அருமையாய் இருக்கிறது உங்கள் நடை...

பிரபாகர்.

கலகலப்ரியா said...

அப்புறம்...?

vasu balaji said...

சுவாரசியமா போகுது. :)

அன்புடன் நான் said...

பயணம் நல்லாயிருக்கு.