Monday, October 12, 2009

ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 3 – பாலைவனப் பயணம்.



18.09.2009 – வெள்ளி

வாகனம், ஓட்டுநர் எல்லாம் தயார். இரவு எட்டு மணிக்கு கிளம்பலாம் என நேரம்கூட குறித்தாயிற்று. ஆனால் எத்தனை பேர் என்பது மட்டும் இறுதியாகவில்லை. மூன்றுபேர் ஆர்வமாக ஆரம்பித்தோம். பின் இருவர் இணைந்தனர். மற்ற நண்பர்கள் பயணதூரத்தை நினைத்து பயந்தனர். யாரையும் வற்புறுத்தவில்லை. விருப்பமிருந்தால் வாருங்கள். சொல்லவில்லை எனக் கூறக்கூடாது என்பதற்காகத்தான் தெரிவித்தோம் என கூறிவிட்டோம். கெவின் சின் எனும் மலேசிய சீனர் இடமிருந்தால் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என அவரோடு அறுவர், ஓட்டுநர் இருவர் மொத்தம் எண்மர் என உறுதியானது.

பயணத்திற்கு தேவையானவற்றை இரண்டு சிறிய பைகளாக பிரித்து எடுத்து கொண்டு எடை அதிகமோ என யோசித்து கொண்டே இரவு எட்டுமணிக்கு கீழே வந்தால் பெரியபெரிய பொதிப்பைகளோடு நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தனர். டிஜிட்டல் காமெராக்கள்,லேப்டாப்கள், பயணத்தின் போது பயன்படுத்த இணைய இணைப்பு கருவி, சரியான பாதையில் செல்ல உதவும் செயற்கைகோள் இணைப்பு கொண்ட GPRS அலைபேசி என அனைத்தும் அல்ட்ரா மாடர்ன் ஏற்பாடுகளோடு தங்குமிடத்தில் இருந்து கிளம்பினோம்.

கெய்ரோவிலிருந்து அஸ்வான் செல்ல நைல் நதிக்கரையின் வழியாக ஒரு சாலையும், பாலைவனத்தின் வழியாக ‘டிசர்ட் ரோடு’ எனப்படும் விரைவுச்சாலை என இரண்டு பாதைகள் உள்ளன. போக்குவரத்து அதிகம் இல்லாத பாலைவன விரைவுச்சாலையையே நாங்கள் பயணத்திற்கு தேர்ந்தெடுத்தோம். போகும்வழியில் கேரிஃபோரில் நிறுத்தி இரவு உணவு மற்றும் சினாக்ஸ் வாங்கிகொண்டு கிளம்பும்போது இரவு மணி பத்து ஆயிற்று.

வண்டியில் சென்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு, ஒருவரையொருவர் கதை பேசி கலாட்டா செய்து கொண்டிருந்தபோதே ஒவ்வொருவராக உறங்க ஆரம்பித்தனர். ஓட்டுநர் இருவரும் முன்னாலே அமர்ந்திருந்ததாலும், பதினைந்துபேர் செல்லும் வாகனத்தில் ஆறுபேர் மட்டும் இருந்ததாலும் ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொருவராக நீட்டி படுத்துவிட்டோம். அமைதியான இரவு, அழகான பயணம், திருப்தியான உணவு, இனிமையான மெல்லிய இசை எல்லோருமே நன்றாக உறங்கிவிட்டோம்.

19-09-2009 - சனி

காலை கண்விழித்தபோது நண்பர்கள் அனைவருமே எழுந்திருந்தனர். சுற்றி பார்த்தபோது மணல் குன்றுகளும் , பாறைகளூம் மட்டுமே சூழ்ந்த பாதையில் எங்கள் வாகனம் மட்டுமே சென்று கொண்டிருந்தது.

பாலைவனப்பாதை சிலபடங்கள்..











அழகான மணல்குன்றுகள் நிறைந்த அந்த இடம் எல்லோர் மனதையும் கவர வண்டியை நிறுத்தி சில புகைப்படங்கள் எடுத்தோம்.









மீண்டும் பயணம் தொடர்ந்த பொழுது நடுபாலைவனத்தில் ஒரு குடில். அதில் ஒரு குடும்பம். நான்கு சிறிய குழந்தைகள். வண்டியை ஓரம் கட்டி உணவு ஏதாவது இருக்குமா என விசாரித்தோம். வண்டிக்கு தேவையான டீசல் மட்டுமே அங்கு இருப்பதாகவும் சிறிது தொலைவு சென்றால் உணவகம் இருக்கும் எனவும் குடும்பத்தலைவர் கூற அந்த குழந்தைகளுக்காக வண்டிக்கு மட்டுமாவது டீசல் போட்டுகொள்ள முடிவு செய்தோம்.






எந்த நாடு, என்ன விவரம் என விசாரித்தவர் கெவின் சின்னைப் பார்த்து பிலிபைன்சா எனது மனைவியும் பிலிப்பைன்ஸ் தான் என்றார். அந்தப்பெண்ணும் எங்களுடன் ஆர்வமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். நான் இதுவரை இவ்வளவு மோசமான நிலையில் எந்த பிலிப்பைன்ஸ் பெண்ணையும் பார்த்ததில்லை. அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள் பெற்று மெலிந்து சோகமாய் காணப்பட்ட அந்த பெண்ணை பார்த்த என்னுள் இருந்த கதாசிரியன் இந்த பெண்ணைப்பற்றிய விபரம் கிடைத்தால் வெற்றிகரமாக ஒரு இருபது பாகம் கொண்ட தொடர் எழுதிவிடலாமே என யோசிக்க ஆரம்பித்தான்.


அங்கிருந்து அரைமணி நேரம் பயணம் செய்தபொழுது உணவகம் கண்ணில் தென்பட வண்டியை ஓரம் கட்டினோம்.



பாலைவனப் பயணக்காட்சிகளும், பயணக்குறும்புகளும் – வீடியோ காட்சிகள்....





( பயணம் தொடரும் )


15 comments:

பிரபாகர் said...

புகைப்படம், காணொளி என அசத்துகிறீர்கள் ராஜா. மிகவும் அருமையாய் இருக்கிறது.

பிரபாகர்.

venkat said...

பயணம் விறுவிறுப்பு, படங்கள் அருமை,
அந்த புகைப்படத்தில் துபாய் ராஜா யார்?

துபாய் ராஜா said...

//பிரபாகர் said...
புகைப்படம், காணொளி என அசத்துகிறீர்கள் ராஜா. மிகவும் அருமையாய் இருக்கிறது.

பிரபாகர்.//

தொடர்வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி பிரபாகர்.

துபாய் ராஜா said...

// venkat said...
பயணம் விறுவிறுப்பு, படங்கள் அருமை,//

நன்றி வெங்கட்.போக போக இன்னும் சுறுசுறுப்பாக இருக்கும்.

//அந்த புகைப்படத்தில் துபாய் ராஜா யார்?..//

விளம்பரம் பிடிக்காது என்றாலும் உங்கள் அன்புக்காக ஒரு தகவல்...
வலது ஓரம் நிற்பவர்தான் உங்கள்
துபாய் ராஜா... :))

vasu balaji said...

/விளம்பரம் பிடிக்காது என்றாலும் உங்கள் அன்புக்காக ஒரு தகவல்...
வலது ஓரம் நிற்பவர்தான் உங்கள்
துபாய் ராஜா... :))/

இதத்தான் அவையடக்கம்னு சொல்றதோ! பயணம் சுவாரசியமா போகுது.

கலகலப்ரியா said...

aiyo.. arumaiyaana pics + thagaval.. video parkka vidaama thookkam kannaith thazhuvuthe.. naalaikku vanthu paarththukkiren.. avvv..

அ. நம்பி said...

பயணக் கட்டுரை நன்று; சுவையாகச் சொல்கிறீர்கள்.

படங்கள் அருமை.(உங்கள் படங்களுள் சிலவற்றை நான் `திருடும்' எண்ணத்தில் இருக்கிறேன்.)

தொடருங்கள்.

துபாய் ராஜா said...

//வானம்பாடிகள் said...
இதத்தான் அவையடக்கம்னு சொல்றதோ! பயணம் சுவாரசியமா போகுது.//

வரவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி பாலா சார்...

துபாய் ராஜா said...

// கலகலப்ரியா said...
aiyo.. arumaiyaana pics + thagaval.. video parkka vidaama thookkam kannaith thazhuvuthe.. naalaikku vanthu paarththukkiren.. avvv..//

ப்ரியாக்கா, ப்ஃரியா இருக்கும் எல்லா படமும் பாருங்க....

தொடர்வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிக்கா... :))

துபாய் ராஜா said...

// அ. நம்பி said...
பயணக் கட்டுரை நன்று; சுவையாகச் சொல்கிறீர்கள்.

படங்கள் அருமை.(உங்கள் படங்களுள் சிலவற்றை நான் `திருடும்' எண்ணத்தில் இருக்கிறேன்.)

தொடருங்கள்.//

தொடர்வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அய்யா...

உரிமை இருக்கும் இடத்தில் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு போகத்தான் மீதி அய்யா... :))

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

சுவராசியமான பதிவு! வேகம் சும்மா ஜிவ்வுன்னு போகுது ... வாவ் .....

ஹேமா said...

எங்களோடு உங்கள் அனுபவத்தையும் சந்தோஷத்தையும் பகிர்ந்துகொள்கிறீர்கள் நன்றி.மிக ஆவலாகக் காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக.படங்கள் அழகாய் இருக்கு.இப்படித்தான் அரபு நாடுகள் முழுதும் இருக்குமா ?

துபாய் ராஜா said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
சுவராசியமான பதிவு! வேகம் சும்மா ஜிவ்வுன்னு போகுது ... வாவ் .....//

வரவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார். நல்ல வேகம்தான். மணிக்கு 140-170 கி.மீ வேகத்துலதான் எங்க வண்டி போச்சு... :))

தொடர்ந்து னாருங்கள்.போகப்போக இன்னும் ருசிக்கும்....

விக்னேஷ்வரி said...

கலக்கிருக்கீங்க போல.

வடுவூர் குமார் said...

யாராவது தெரிந்த முகமாக இருக்குமா(குரூப்பில்) என்று தேடினேன் யாரும் அகப்படவில்லை.