Friday, June 29, 2012

இதுதாண்டா போலீஸ்....

இன்றைய தினமலரில் வந்த செய்தியும், படங்களும் உங்கள் பார்வைக்கு.


சென்னை:கல்வி தனியார் மயமாவதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள், சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை நேற்று முற்றுகையிட முயன்றனர். இவர்களை, சாலையிலேயே தடுத்து நிறுத்தி, கைதுசெய்ய போலீசார் முயன்றபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவ, மாணவியரை போலீசார் கைது செய்தனர். தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக்க வேண்டும்; அனைவருக்கும் இலவச, கட்டாயக்கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர், மாநிலத் தலைவர் கணேசன் தலைமையில், நேற்று காலை 11 மணிக்கு, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். மொத்தமே 50 முதல் 60 பேர் வரை தான் இருந்தனர்.திருவல்லிக்கேணி துணைக் கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், மாணவ, மாணவியரை, சாலையிலேயே தடுத்து நிறுத்தினர். "முன் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்த அனுமதியில்லை; கலைந்து செல்லுங்கள்' என, போலீசார் கூறினர். அதைக் கேட்காமல், சாலையிலேயே மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.அப்போது, கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஆர்ப்பாட்டக்காரர்களுடன், ஐந்து வயது சிறுவர்களும் அதிகளவில் வந்தனர். ஒன்றரை வயது குழந்தையையும் ஒரு மூதாட்டி தூக்கி வந்தார். இந்தக் குழந்தைகளின் கைகளில் கொடியைக் கொடுத்து கோஷம் போட வைத்தனர். இந்தச் சம்பவத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அரசுடைமையாக்கி அனைவருக்கும் இலவசமாக கட்டாயக் கல்வி வழங்கக்கோரி சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குனரகம் முன் ஆர்பாட்டம் நடத்திய புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியினர். ஆர்பாட்டத்திற்கு வந்திருந்த தாயிடமிருந்து குண்டு கட்டாக குழந்தையை அடாவடித்தனமாக தூக்கி கைது செய்து அழைத்து சென்ற வீரமிக்க போலீசார். இந்த சம்பவத்தை பார்த்த பெண் போலீஸ் உட்பட அனைவரையும் உறையவைத்தது.




அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அரசுடைமையாக்கி அனைவருக்கும் இலவசமாக கட்டாயக் கல்வி வழங்கக்கோரி சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குனரகம் முன் ஆர்பாட்டம் நடத்திய புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்னை கழுத்தை பிடித்து இழுத்து வேனில் முட்டிய ஆண் போலீசார்.


அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அரசுடைமையாக்கி அனைவருக்கும் இலவசமாக கட்டாயக் கல்வி வழங்கக்கோரி சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குனரகம் முன் ஆர்பாட்டம் நடத்திய புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை முடியை பிடித்து இழுத்து வேன் உள்ளே தள்ளும் பெண் போலிஸ்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் பாராமல், கட்சிகளை சாராமல் இந்த இளைஞர்கள் இறங்கி போராடுவது தங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்துதான் என்பதை கூட அறியாமல்அகிம்சை வழியில் போராடுபவர்களிடம் காட்டும் முரட்டுத்தனத்தையும்,மூர்க்கத்தனத்தையும் பாருங்கள். இந்த அதிகாரத்தையும், ஆணவத்தையும் தந்தது யார்.

இதுதாண்டா போலீஸ்....


No comments: