Tuesday, November 15, 2011

பால் காய்ச்சும்.... பதிவர் சந்திப்பும்...

திடீரென முடிவு செய்தாலும் திருப்தியாக முடிந்த புதுமனை புகுவிழாவின் சில  புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

விழா தினத்தன்று காலை வண்ண ஒளி விளக்குகள், அலங்காரப் பந்தல், பூ மாலை மற்றும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த வீடு



கணபதி ஹோமம் ஏற்பாடுகள்



பூஜை முடிந்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம்


புதுப்பானையில்  தேங்காய் உடைப்பு


புதுப்பானையில் பால் விடும்  ராஜாவும், பூஜாவும்


வாழ்வெல்லாம் வளம் பொங்க வாழ்த்தி பால் விடும் எனது தாயும், தந்தையும்


 உற்றார்,உறவினர்களும், நண்பர்களும்  விழாவிற்கு வருகை தந்து வாழ்த்த மகிழ்ச்சியுடன்  இனிதே நிறைவடைந்தது.


விழாவிற்கு வரமுடியாத பதிவுலக நண்பர்கள் நேரில் சந்திக்க  வேண்டுமென்று  திரு.அ.ரா.சங்கரலிங்கம் மூலம் அன்பு அழைப்பு விடுக்க துணைவியாரோடு சென்று அனைவரையும் சந்தித்து வந்தேன்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஜன்னத்தில் அருமையான சந்திப்பு.அன்றுதான் முதல்முறை சந்தித்தாலும் பலநாள் பிரிந்த உறவுகளை சந்தித்தது போன்ற உணர்வு. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.

சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரகாசிப்பவர்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.

சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அன்பு உள்ளங்கள்
திரு.ராமலிங்கம்
திரு. காளிமுத்து
ஹோட்டல் ஜன்னத் அதிபர் திரு.திவான்

நான், எனது துணைவி

ஆக மொத்தம் பன்னிரெண்டு பேர்.


திரு.ராமலிங்கம், உயர்திரு. சகாதேவன் ஐயா, திரு.ஜோதிராஜ்


அன்பும்,பண்பும், பாசமும், பணிவும் நிறைந்த திரு.ஞானேந்திரன்


மேலதிகப் படங்களுக்கும், தகவல்களுக்கும் திரு.அ.ரா.சங்கரலிங்கம் மற்றும் திரு.கே.ஆர்.விஜயன்  இருவர் பதிவுகளையும் பாருங்கள்.

நன்றி. வணக்கம்.

14 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

என் இனிய வாழ்த்துகள் ராஜா. எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.

'பரிவை' சே.குமார் said...

வளமோடு வாழ வாழ்த்துகள்.

ஆடுமாடு said...

அன்னைக்கு நல்ல மழையாமே ஊர்ல.


அந்த வேட்டி, சட்டையை, கணபதி ஹோமத்தைப் பார்த்ததும்
என் வீட்டு கிரஹப்பிரவேசம் ஞாபகத்துக்கு வந்தது.

வாழ்த்துகள் ராசா.

ராமலக்ஷ்மி said...

இனிய நல்வாழ்த்துக்கள்!!

Radhakrishnan said...

இனிய வாழ்த்துகள்.

venkat said...

இனிய நல்வாழ்த்துக்கள்!!

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் ராஜா !

துபாய் ராஜா said...

// Starjan ( ஸ்டார்ஜன் )said...
என் இனிய வாழ்த்துகள் ராஜா. எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.//

வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி திரு.ஸ்டார்ஜன்.

துபாய் ராஜா said...

// சே.குமார்said...
வளமோடு வாழ வாழ்த்துகள்.//

வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பர் குமார்.

துபாய் ராஜா said...

// ஆடுமாடுsaid...
அன்னைக்கு நல்ல மழையாமே ஊர்ல.

அந்த வேட்டி, சட்டையை, கணபதி ஹோமத்தைப் பார்த்ததும்
என் வீட்டு கிரஹப்பிரவேசம் ஞாபகத்துக்கு வந்தது.

வாழ்த்துகள் ராசா.//

ஆமா அண்ணாச்சி. அன்னைக்கு மழைன்னாலும் சொல்லியிருந்த சொந்தக்காரங்கள்லாம் குடும்பத்தோடு வந்து குதூகலப்படுத்திட்டாங்க.

ஊருக்குப் போனா பெரும்பாலும் வேட்டிதான் கட்டுறது.பால்காய்ச்சு அன்னைக்கு கட்டியிருந்த வேட்டி கல்யாணத்துக்கு எடுத்த பட்டு வேட்டி.அதுக்கப்புறம் கட்டவேயில்லை. சரி. ரொம்ப நாளைக்கப்புறம் மாலையும், கழுத்துமா ஜோடியா மனையிலே உட்காருரோமேன்னு சென்டிமெண்டா கல்யாண பட்டு வேட்டியை எடுத்து கட்டிகிட்டேன்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணாச்சி.

துபாய் ராஜா said...

// ராமலஷ்மி மேடம்
ராதாகிருஷ்ணன் சார்
வெங்கட்
ஹேமா //

மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

Paleo God said...

சூப்பர் தல. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். :))

துபாய் ராஜா said...

Food - சங்கரலிங்கம் சித்தப்பா சார்,
ஷங்கர் பிரதர் வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல பல.

Advocate P.R.Jayarajan said...

பால் காய்ச்சி பதிவர்களையும் நேரில் சந்தித்து உள்ளீர்கள்..
என்னே ஒரு மகிழ்ச்சியான அனுபவம்..!
மகிழ்ச்சியும், இனிமையும் தங்கள் வாழ்வில் தொடரட்டும்.
வளம் பெருகட்டும்.. வாழ்த்துகள்..