Wednesday, April 21, 2010

எகிப்திய விருந்து

நேற்றைய பதிவில் எகிப்தியர் எளிய உணவுதான் உண்பர். ஆனால் விருந்து என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டிவிடுவர் என்று கூறியிருந்தேன். இன்று எனது கூற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எகிப்தில் நாங்கள் பணிபுரியும் மின்சாரஉற்பத்தி நிலைய கட்டுமான திட்டம் (Power Plant Project) இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டதால் ஒரேயடியாக ஊர் திரும்பும் தினம் உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனை அறிந்தது முதல் உள்ளூர் நண்பர்கள் விருந்திற்கு அழைத்துக்கொண்டே இருந்தனர். எவ்வளவோ மறுத்தும் விடாப்பிடியாக இழுத்துச் சென்று மிகச்சிறந்த விருந்தளித்து உபசரித்து மகிழ்ந்தனர்.

அலெக்சாண்டிரியா நகரத்தில் கேரி ஃபோரின் எதிரே அமைந்துள்ள டவுண் டவுன் என்னும் இடத்தில் உள்ள புகழ்பெற்ற பல்பா என்ற எகிப்திய உணவகத்திற்கு சென்றோம்.

உணவகம்
இடம் பிடிச்சாச்சு

சாப்பாடு எப்படி இருக்கும்...
நம்பர் ஒன். சூப்பரா இருக்கும்...

ஸ்டார்ட்டர்கள், வெஜிடபிள் சாலட், பல விதமான சட்னிகள்....



புறா சூப்.
சுவையான எகிப்திய ரொட்டி
காய்ந்த திராட்சை நிறைய போட்டு சூடும்,சுவையும் நிறைந்த வாத்து பிரியாணி


ஸ்டார்ட் மியூசிக்....

சாப்பிட்டு முடிச்சாச்சு...
எல்லாரும் கையைக் கட்டிட்டா பில் யார் கொடுப்பா...
அருமையான விருந்து தந்த அன்பு உள்ளங்கள்
சரியா சாப்பிடலையாம். வீட்டுக்கு போய் சாப்பிட தனி பார்சல்...
அப்போ கெளம்புவோமா....

24 comments:

Chitra said...

"bulb"aaaaaaa!!!!!
nice photos......!

துபாய் ராஜா said...

// Chitra said...
"bulb"aaaaaaa!!!!!
nice photos......!//

சித்ராக்கா, 'பல்பா' கடை பிரியாணி எங்களுக்கு... படம் பார்த்து 'பல்பு' உங்களுக்கு.... :))

சந்தனமுல்லை said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

குலவுசனப்பிரியன் said...

//.. எகிப்தியர் எளிய உணவுதான் உண்பர்.//
டெட்ராய்ட் மிச்சிகன், போய்வந்து கொண்டிருந்தபொது கிரேக்கத் தெருவில் இருந்த கடையில் ஈரோ(Gyro) சாப்பிட்டு அதற்கு அடிமையாகிவிட்டேன். எங்க ஊர் கடையில் அவர்கள் கொடுத்ததில் பாதிதான் தருகிறார்கள். அவ்வளவு சுவையும் இல்லை, ஆனால் விலை 50% அதிகம்.

நல்ல படங்கள். பகிர்வுக்கு நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

எகிப்த் ரொட்டி பாக்க, நம்ம ஊர் பூரி மாதிரியே இருக்கு!!!

நாடோடி said...

விருந்து த‌ட‌புட‌லா இருக்கு......ப‌ட‌ங்க‌ள் அருமை..

கண்ணா.. said...

புறா சூப்பை காண்பிச்சு எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்த உசுப்பேத்தி விட்டாச்சுள்ள...

ரைட்டு நான் இனி புறா வேட்டைக்கு போக வேண்டியதுதான்...

:))

vasu balaji said...

:)). ஸ்டார்டரோட கிளம்பிற வேண்டியதுதான் போல.

ஹுஸைனம்மா said...

//விருந்து என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டிவிடுவர்//

விருந்துன்னா எல்லா நாட்டுக்காரங்களும் ஒரே மாதிரிதான்!! இது ஒண்ணுதான் மக்களை இன, மொழி, மத, எல்லை பேதமில்லாம இணைக்கிறது!!

Thamira said...

Adappaavikala.. Vaaththu biriyani? puthusu puthusaa solli veruppethurangkalee..!!

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ட‌த்துங்க‌ ராசா

ஜெட்லி... said...

புறா சூப்....ஆஹா...
வயிறு பசிக்குது நான் போறேன்..

Anonymous said...

//'பல்பா' கடை பிரியாணி எங்களுக்கு... படம் பார்த்து 'பல்பு' உங்களுக்கு.... :))//

என்னா வில்லத்தனம். =))

விருந்தோம்பலில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிகர் அவர்களே தான். இங்கே கூட, (படிக்க வந்த ஸ்டூடன்ஸ் தான்) வீட்டிற்கு இழுத்திட்டு போய், போதும் போதும் என்றளவுக்கு சாப்பிட வைப்பாங்க. அவங்க நல்லா சாப்பிடுவாங்க. நாங்க அதில ஐந்தில் ஒரு பகுதி கூட சாப்பிட மாட்டோம். நல்லா சாப்பிடலனு நிறைய கட்டி வேற குடுப்பாங்க. அத சாப்பிட்டு முடிக்க எங்களுக்கு ஒரு வாரம் ஆகும். விருந்தோம்பல் எங்களுக்கு மட்டுமே உரியதுனு சொல்லகூடாதுனு அப்ப நினைச்சுப்பேன்.

ஒரு வாட்டி எங்க கிளாஸ் பையனோட அக்கா வெடிங்குக்கு கூட்டிட்டு போனாங்க. சாப்பாட்டு மேசையை பாத்து மயங்கி விழுந்திட்டேன். அவ்ளோ வரைட்டீஸ். டெசட்டே ஒரு 15 வகை இருந்துது. (Fainting)

துபாய் ராஜா said...

//சந்தனமுல்லை said...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

சகோதரி சந்தனமுல்லை...இது பசி ஏப்பமா... இல்லை பார்த்ததிலே வயிறு நிறைஞ்சு வர்ற ஏப்பமா... :))

துபாய் ராஜா said...

அன்பு சகோதரர்கள் குலவுசனப்ரியன், சைவக்கொத்துப்பரோட்டா,நாடோடி ஸ்டீபன், கண்ணா... வரவிற்கும், கருத்திற்கும் நன்றி.

துபாய் ராஜா said...

//வானம்பாடிகள் said...
:)). ஸ்டார்டரோட கிளம்பிற வேண்டியதுதான் போல.//

பாலா சார், ஸ்டார்ட்டர் நானே சாப்பிடலை. ஏன்ன்ன்ன்ன்னா.... அது மாட்டுக்குடல் உள்ளே பிரியாணி வச்சு கிரில் பண்ணது.... :))

துபாய் ராஜா said...

ஹூஸைனம்மா,ஆதிமூலகிருஷ்ணன், கரிசல்காரன்,ஜெட்லி.... நல்லா கெளப்புறமா பசியை.... :))

துபாய் ராஜா said...

//அனாமிகா துவாரகன் said...

விருந்தோம்பலில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிகர் அவர்களே தான். இங்கே கூட, (படிக்க வந்த ஸ்டூடன்ஸ் தான்) வீட்டிற்கு இழுத்திட்டு போய், போதும் போதும் என்றளவுக்கு சாப்பிட வைப்பாங்க. அவங்க நல்லா சாப்பிடுவாங்க. நாங்க அதில ஐந்தில் ஒரு பகுதி கூட சாப்பிட மாட்டோம். நல்லா சாப்பிடலனு நிறைய கட்டி வேற குடுப்பாங்க. அத சாப்பிட்டு முடிக்க எங்களுக்கு ஒரு வாரம் ஆகும். விருந்தோம்பல் எங்களுக்கு மட்டுமே உரியதுனு சொல்லகூடாதுனு அப்ப நினைச்சுப்பேன்.

ஒரு வாட்டி எங்க கிளாஸ் பையனோட அக்கா வெடிங்குக்கு கூட்டிட்டு போனாங்க. சாப்பாட்டு மேசையை பாத்து மயங்கி விழுந்திட்டேன். அவ்ளோ வரைட்டீஸ். டெசட்டே ஒரு 15 வகை இருந்துது. (Fainting)//

உண்மைதான் அனாமிகா.. தமிழர்கள் போல் விருந்தோம்பலில் இவர்களும் சிறந்தவர்கள். இந்த விருந்தில் கூட நான் இரண்டு ரொட்டியும்,கொஞ்சம் பிரியாணியும்,ஒரு சின்ன பீஸ் கறியும் மட்டும்தான் சாப்பிட்டேன்.சாப்பிட முடியாமல் மீதம் வச்சுட்டோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.ஆனால் மீந்த சாப்பாடை வேஸ்ட் பண்ணாமல் அழகா பேக் பண்ணி கையில் கொடுத்துட்டாங்க... இந்திய ஹோட்டல்களில் இதுவரை இந்த பழக்கம் பார்த்திராததால் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன்.

ஹேமா said...

அப்பா....டி எவ்ளோ சாப்பாடு.
புதுசு புதுசா
விதம் விதமா இருக்கு.
படங்கள் அருமையா இருக்கு ராஜா.

பிரபாகர் said...

ஊருக்கு வரீகல்ல பாக்குறப்போ பெரிய விருந்தா ஏற்பாடு பண்ணிடுவோம்... போட்டோவோட கலக்கல் ராஜா!

பிரபாகர்...

Anonymous said...

ennpa ithu enkalu kidaiyathaa...vaathu biriyaniyaaaa.....

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல விருந்து கண்ணுக்கும் வயித்துக்கும்.. ஒரு பிடி பிடிச்சாச்சா..

ஊர்ல இருக்கும்போது போட்ட புளுக்கலர் சட்டை தானே...

மின்மினி RS said...

அசத்தலான விருந்துதான் போங்க.. நல்ல போட்டோஸ்.. அருமை.

சிநேகிதன் அக்பர் said...

அங்கேயும் குப்பூஸ்தானா.

ஆமா பிரியாணியில அரிசியை காணோம். ப்ருஸ்டட் ஆ.

விருந்து முடிஞ்சி ஊர் கிளம்ப வேண்டியதுதான்.