தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று பல தமிழ் உணர்வு மிகுந்த தமிழ் உள்ளங்கள் தவித்துகொண்டிருக்கும் பொழுது தந்தையின் திடீர் மறைவு பேரிடியாய் விழுந்தது. அதற்குள் அதிர வைக்கும் அடுத்த செய்தி. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியத்திற்காக இனவாத இலங்கை அரசின் அனுமதியோடு மலேசியா சென்று பின் முறையான ஆவணங்களோடு தமிழகம் வந்த தாயார் விமானநிலையத்தில் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் என்ன ஆட்சிக்கட்டிலில் இடம் கேட்டாரா அல்லது அடுத்த புரட்சிக்கு ஆள் திரட்ட வந்தாரா... இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்று கேள்விப்பட்ட கற்காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணத்தை இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் தருகின்றன.
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...
13 comments:
இந்த வெட்கக்கேட்டுக்கு கூட ஒற்றுமையின்றி, அரசுக்கு தெரிவித்தார்களா, தலைவரை நாடினார்களா என்று கட்சி பேசும் மனிதர்கள்(?) இருக்கும் வரை எது வேண்டுமானாலும் நடக்கும்.
சொல்றதுக்கு ஒன்னுமில்லை அண்ணே.........எல்லா ஊடகங்களும் வாய் மூடி மவுனியாக........வாழ்க தமிழர் அரசு ////வாழ்க
இந்திய அரசுஇந்த விசயத்தை இணையம் மூலம்தான் தெரிந்து கொண்டேன்
என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்....
இந்தியாவில் குண்டு வைத்து நாம் அப்பாவி மக்களை கொலை செய்வதற்கு மட்டும்தான் தீவிரவாதிகளை சிவப்பு கம்பளம் விரித்து சகல மரியாதையுடன் அனுமதிக்கும் நமது அரசு . அதெப்படி அந்த வயதான தாயை அனுமதிக்க முடியும் . வேண்டுமானால் அந்த தாயிடம் கேட்டு சொல்லுங்கள் அவர்களால் குறைந்தது ஒரு இந்தியனையாவது கொல்ல முடியுமா என்று ? பின்பு நமது அரசு அனுமதி தரும் .
மனதை மிகவும் கனக்க செய்த செய்தி
:(
இதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக அனுபவிப்பார்கள்.
எத்தனை வருந்தினாலும் அதிகாரம் அவர்கள் கையில்
வருத்தமான நிகழ்வு
:-( - it is sad to know about it.
ஒண்ணும் சொல்றதுக்கில்லை :-((((
எண்ணிலடங்கா கோபமும், அளவுகடந்த ஆத்திரமும் வருகிறது ராஜா!
இயலாமையை எண்ணி மனம் வெம்புகிறது!
பிரபாகர்...
யார் என்ன செய்யமுடியும் ராஜா.காற்று அவர்கள் பக்கம் !
அப்படியா? இது என்னங்க அநியாயம். அப்ப எதுக்கு இந்திய தூதரகம் அவங்களுக்கு விசா குடுத்துமாம்? விசா கொடுத்திருக்காட்டி, இந்த வயசான காலத்தில அவங்களுக்கு அலைச்சலும் இருந்திருக்காது. டிக்கெட் செலவு, விசா செலவும் கொஞ்சம் மிச்சமாகி இருக்கும். sigh
:-((
Post a Comment