Sunday, April 04, 2010

சாதுர்யம் பேசாதடி....



ஒரு ஊரில் ஒரு நல்ல திறமைசாலி இருந்தான். ஒரு நாள் கடைவீதி சென்றிருந்த பொழுது நடந்த கலவரத்தின் நடுவே மாட்டிக் கொண்டதால் அந்த வழக்கில் இவன் பெயரும் சேர்க்கப்பட்டு சிலமாதம் சிறைத்தண்டனை அடைந்தான். சிறையில் இருந்த நேரம் யாரிடமும் பேசிப்பழக பிடிக்காமல் ஒரு எறும்பை பிடித்து தீப்பெட்டியில் வைத்து வளர்த்தான். அந்த எறும்பிற்கு பலவித்தைகளும் கற்றுக் கொடுத்து அவன் சொல்பேச்சு கேட்கும்படி பழக்கினான். சிறையில் உடன் இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற எண்ணத்தில் யாரிடமும் இதைப் பற்றி கூறவே இல்லை.


தண்டனைக்காலம் முடிந்தது. சிறையை விட்டு வெளியே வந்தவுடன் இந்த ரகசியத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற பேராவல் எழுந்தது. கண்ணில் பட்ட ஹோட்டலில் நுழைந்து காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்தான். தீப்பெட்டியில் இருந்து எறும்பை எடுத்து மேஜையின் மேலே விட்டான். சில வித்தைகளை செய்ய சொல்லி “ என்ன சார், சாப்பிடறீங்க ” என்று கேட்டவாறு அருகில் வந்த சர்வரிடம் “இதோ பார்” என்றவாறு எறும்பை காண்பிக்க அவனோ “சாரி சார்” என்று கூறி அந்த எறும்பை நசுக்கி கொன்றான்.

கருத்து : அருமை தெரியாத இடத்தில் பெருமை பேசாதே....

22 comments:

Thamira said...

நெம்ப கருத்து சொல்லுவீங்க போலயே.. இதெல்லாம் ஏற்கனவே படிச்சாச்சு.

vasu balaji said...

சூப்பர்ப்:)

லோகு said...

ம்ம்ம்ம்...

ஆனா இப்ப இந்த கதை சொல்றதுல எதுனா உள்/வெளி/சைடு குத்து இருக்கா?

மின்மினி RS said...

அதுஅது இருக்கவேண்டிய இடத்தில் இருக்கவேண்டும். இந்த நீதியையும் உணர்த்துதே கதை.

நல்ல கதை.ராஜா சார்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல நீதியுள்ள கதை. ராஜா

ஆடுமாடு said...

நீதி கதையா?

சிநேகிதன் அக்பர் said...

//நெம்ப கருத்து சொல்லுவீங்க போலயே.. இதெல்லாம் ஏற்கனவே படிச்சாச்சு.//

நாங்கலெல்லாம் இன்னும் படிக்கலைண்ணே.

//அருமை தெரியாத இடத்தில் பெருமை பேசாதே....//

நெத்தியடி. வாழ்க்கைக்குத் தேவையான கருத்து.

சென்ஷி said...

:-)


நல்ல கருத்து!

கலகலப்ரியா said...

அருமை ராஜா... எனக்கு அருமை தெரிஞ்சிடுத்து... இப்புடி பேய்க் கதை இல்லாம எழுதுங்க ரொம்ம்ப நல்லாருக்கு...

Anonymous said...

கருத்து நிஜமாலுமே சூப்பருங்க

Nathanjagk said...

நறுக் கருத்து! வாழ்த்துக்கள்!

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு... அதில் உள்ள‌ க‌ருத்தும் அருமை

பனித்துளி சங்கர் said...

சிறிய கதை என்றாலும் பெரிய கருத்து இருக்கு . மிகவும் அருமை நண்பரே . தொடருங்கள் !

ஹுஸைனம்மா said...

//கருத்து : அருமை தெரியாத இடத்தில் பெருமை பேசாதே.//

இது போன பதிவின் தொடர்ச்சியா?

Ahamed irshad said...

கதை& கருத்து ஒகே ஒகே...

DREAMER said...

மேட்டர், எறும்பு கடிச்ச மாதிரி சுருக்கமா 'நச்'னு இருக்கு சார்...

-
DREAMER

விக்னேஷ்வரி said...

ஐ, எனக்கு இந்தக் கதை புதுசு. கருத்தும் நல்லாயிருக்கு.

Jerry Eshananda said...

ரசித்தேன்...சிந்தித்தேன்.

மாதேவி said...

நல்ல கருத்து.

சைவகொத்துப்பரோட்டா said...

நீதிக்கதை நல்லா இருக்கு.
இப்போதான் உங்களோட "குழியில் தள்ளிய
குட்டிசாத்தான்" ஒரே மூச்சில் படித்தேன்.......
சரியான திக்.....திக்........திகில் கதை.

அண்ணாமலையான் said...

நல்ல கதை

Jaleela Kamal said...

//அருமை தெரியாத இடத்தில் பெருமை பேசாதே.... //
சரி தான்,/