வேணாம், வேணாம்ன்னு தான் பார்த்தேன். வார்த்தைக்கு வார்த்தை அண்ணாச்சி, அண்ணேன்னு கூப்பிட்டு தங்களை யூத்தா காமிச்சிகிறவங்களுக்காகவும், அல்ல்லோ... ஒரு நிமிஷம் முன்னாடி பிறந்தாலும் அப்படிதான் கூப்பிடுவோம்ன்னு டயலாக் விடுறவங்களுக்காகவும்தான் இந்த பதிவு.
சென்ற மாதம் மிகவும் குறுகிய விடுமுறையில் வந்ததால் சந்திப்பதாக கூறிய நண்பர்களை சந்திக்க முடியாததற்கு மாப்பு கேட்டுக்கிறேன். முக்கியமா நண்பர் எறும்பு ராஜகோபால்.. (அல்லோ... நானாவது 10 நாள் ஊர்ல இருந்தேன். நீங்க 2 நாள் கூட இருக்கலை). இந்த மாத இறுதியில் மீண்டும் ஊருக்கு வருகிறேன். இரண்டு, மூன்று மாதம் இருக்கலாம் என எண்ணம். வாங்க நண்பர்களே நல்லா பழகுவோம்.
நேரமாற்றத்தினால் ஊருக்கு வந்து ஒரு வாரம் எல்லாம் மங்கலாகவே இருந்தது. தெளியும்போது திரும்பி வந்தாயிற்று. இங்கு பயங்கர குளிர். ஊரிலோ கோடை ஆரம்பமாகி அனல் பறக்கிறது. இங்கு குளிரைத் தடுக்க எப்போதும் நாலு சட்டை போட்டு அலைந்த உடம்பிற்கு நம்ம ஊரு வெயிலில் அலைய சுகமாகவே இருந்தது என்றாலும் அதுவே சோதனையாகவும் அமைந்து விட்டது. ஆம். ஊரில் இருந்து கிளம்பும்போதும் இங்கு வந்த பின்னும் ஒரு வாரம் ஜலதோஷம், காய்ச்சல்..சரி என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தானே...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...
இந்த முறை ஊருக்கு வந்திருந்த போது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு...
திருநெல்வேலி மாவட்டத்திலே அதிக கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை எங்கள் ஊரில்தான் உள்ளது. எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் தெரியும் அணையின் தோற்றம்.
அணைக்கு பின்னாடி உள்ள மலையில்தான் வருடம் முழுதும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவி உள்ளது. ஊருக்கு போனால் தினமும் ஆற்றிலும், அருவியிலும் தான் குளியல்.
ராஜா மகள் "பூ"ஜா
36 comments:
நிஜம்மாவே பூ தான் ஜா! ரொம்ப அழகு. இவ்ளோ அருமையான லொக்கேஷன்ல வீட்டை வெச்சுண்டு எங்கியோ குப்பை கொட்ட வேண்டிய நிர்ப்பந்தம்! ஹான்.. என்னத்த சொல்ல. மனசு பாரமா இருக்கு! படங்கள் அழகு அள்ளுது! :))
இயற்கை போட்டோவும், இயற்கையோடு ராஜாவின் போட்டோவும், ராஜாவோடு பூஜாவின் போட்டோவும் அருமை...
// அநன்யா மஹாதேவன் said...
நிஜம்மாவே பூ தான் ஜா! ரொம்ப அழகு. இவ்ளோ அருமையான லொக்கேஷன்ல வீட்டை வெச்சுண்டு எங்கியோ குப்பை கொட்ட வேண்டிய நிர்ப்பந்தம்! ஹான்.. என்னத்த சொல்ல. மனசு பாரமா இருக்கு! படங்கள் அழகு அள்ளுது! :))//
வாங்க அனு மேடம். வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி.பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஊர்.இதுதானே தமிழனின் தலையெழுத்து. நேரத்திலே நான் ஊர் போக வேண்டும்...
ஒரு நிமிசம் மூத்த அண்ணே:)நீங்க துபாய் ராஜாவா?அலக்சாண்டிரியா ராஜாவா?
பூவுடன் பூஜாவுக்கு வாழ்த்துக்கள்.
//நாடோடி said...
இயற்கை போட்டோவும், இயற்கையோடு ராஜாவின் போட்டோவும், ராஜாவோடு பூஜாவின் போட்டோவும் அருமை...//
வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி ஸ்டீபன். நீங்க மணிமுத்தாறு டேம் பார்க்க வந்திருப்பியளே...
// ராஜ நடராஜன் said...
ஒரு நிமிசம் மூத்த அண்ணே:)நீங்க துபாய் ராஜாவா?அலக்சாண்டிரியா ராஜாவா?
பூவுடன் பூஜாவுக்கு வாழ்த்துக்கள்//
வாங்க வாங்க குவைத் ராஜா... வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி.
'அண்ணே' தமிழ்ல்ல எனக்கு பிடிக்காத வார்த்தை.அவ்வ்வ்வ்வ்....
'பூ’ஜா அறிமுகம் அழகு ராஜா:)). அருமையான புகைப்படங்கள். போன வருஷம் போனபோது பார்த்தது.
//பூஜா - ஏ...அப்பா... என்னா போஸ்...
பூஜா - நோ ஸ்மைல் ப்ளீஸ்...//
குழந்தை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!
பூஜா சூப்பர்.
அணையில தண்ணி எப்படியிருக்கு? அடிக்கடி வந்த இடம்தான் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால.
இப்ப... ஏக்கமாத்தான் இருக்கு.
......
//வேணாம்ன்னு தான் பார்த்தேன். வார்த்தைக்கு வார்த்தை அண்ணாச்சி, அண்ணேன்னு கூப்பிட்டு தங்களை யூத்தா காமிச்சிகிறவங்களுக்காகவும், அல்ல்லோ... ஒரு நிமிஷம் முன்னாடி பிறந்தாலும் அப்படிதான் கூப்பிடுவோம்ன்னு டயலாக் விடுறவங்களுக்காகவும்தான் இந்த பதிவு//
எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு. நல்லாருக்கு அண்ணாச்சி... ச்சே.. வேண்டான்னு நினைச்சாலும் 'அண்ணாச்சி' வந்திருது பாருங்க.
படங்கள் நல்லாருக்கு.
ஆஹா...என்ன அருமையான இடத்தில உங்கள் ஊர், வீடு ..... சீக்கரம் செட்டில் ஆய்டுங்க பாஸ் ( அண்ணேன் சொல்லவந்தேன்....!!!! ஹி ஹி )
குட்டி பூ(ரோ)ஜா அழகு.
குட்டி பூ(ரோ)ஜா அழகு.
சபை நல்லாத்தான் இருக்கு ,
பிளைட்ல வர்றப்ப டிக்கெட் எடுதிகளா ?
உங்க ஊரும் குட்டிப்பெண்ணும் ரொம்ப அழகு துபாய் ராஜா!
ராஜாவும் ராஜாவின் ரோஜாவான பூஜாவும் வசீகரிக்கும் அருமையான இடங்களில் பார்க்கும்போது கொள்ளை அழகு.
இப்போதான் ராஜாவின் முகம்பார்க்கிறேன். அழகோ அழகு.
அருமையான படங்கள்.. அதை எடுத்தவிதமும் அருமை.
ம்ம்.. நெல்லை போகனும்..
//வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி ஸ்டீபன். நீங்க மணிமுத்தாறு டேம் பார்க்க வந்திருப்பியளே...///
மணிமுத்தாறு போலிஸ் குவார்ட்டஸில் எனது உறவினர் ஒருவர் இருக்கிறார்.. அவர் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளேன்...
nice pics, pooja is cute,
thanks for sharing
ஊர் நினைப்பை கிளறி விட்டுட்டீகளே........ நல்லா இருங்க, மக்கா!
பூஜா - அழகு மலர்.
புகைப்படங்கள் அருமை........
cute pooja....
ராஜாவும் பூஜாவும் ஊரில் உறவினர்களுடனும், இயற்கை அழகுடன் பொழுதை கழித்து மகிழ்ந்திருப்பது புகைப்படங்களில் தெரியுது... ம்ம்ம்ம்... :-))
அண்ணே, போகும்போது ரெஞ்சு சேச்சி போல் யாரும் கூட வரலையாண்ணே. படங்கள் அருமை.
சொர்க்கமே என்றாலும் நம் ஊரை போல வருமா.
ஆனால் பிழைப்பு நம்மை விரட்டி அடித்து வேடிக்கை பார்க்கிறது. படங்கள் அருமை.
pappaavum, padangalum rum cute.
ராஜா, உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.
கொள்ளை அழகுங்க.
இதுக்கு நான் என்ன கமெண்ட் போடணும் அண்ணாச்சி
;)
பொண்ணுக்கு சுத்தி போட சொல்லுங்க..
மொத்த இடுகையும் ஒருவகையில் நான் லீனியர் ஸ்டைல்.
அண்ணாச்சியில் ஆரம்பித்து (உபதேசம்), ஊருக்கு சென்ற கதையை(பயண கட்டுரை) தொட்டு, பின் ஊரை பற்றி சிலாகித்து அப்படியே புகை படமாக காட்சிகளை கண் முன் விரித்து.. முதலில் அழகு குட்டிபெண்ணின் புகைபடத்தை காண்பித்து ஆனந்தப்படுத்தி பின்பு சடாரென உங்கள் புகை படத்தை இணைத்து அதிர்ச்சி ஏற்படுத்தி பின்பு வீட்டிற்கு இட்டு செல்கிறீர்கள்.
;))
(வெட்டியா இருக்கேன் அதான்)
உங்கள் பொண்ணுக்கு கண்டிப்பா சுத்தி போடுங்கள்.பூஜா அழகு மலர்.
படங்கள் அனைத்தும் அருமை, ஓசியில ஊர சுத்தி காண்பிச்சீட்டீங்க.
அமைச்சருக்கு லொள்ள பாரு..
என்னே அருமையான லொக்கேஷன், இவ்வளவு அருமையான இடத்த விட்டுட்டு போக யாருக்குமே மனசு வராதுங்க....
பூஜாவின் முன்னால் ராஜாவின் பந்தா எடுபடவில்லையே....
போட்டோல்லாம் அருமையா இருக்குண்ணே...
ஊறிக்கிடந்த ஊர் ஞாபகத்தை கிளறிட்டயேண்ணே..
நாங்கள் நண்பர்களுடன் அடிக்கடி அணைகட்டு பகுதிக்கு வருவோம்.. அந்த பசங்களுத்தான் இப்போ போன் பண்ண போறேன்...
//வார்த்தைக்கு வார்த்தை அண்ணாச்சி, அண்ணேன்னு கூப்பிட்டு தங்களை யூத்தா காமிச்சிகிறவங்களுக்காகவும்//
சாரிண்ணே; ரொம்ப ரொம்ப சாரிண்ணே; இதுவரைக்கும் நீங்க எனக்கு தம்பின்னே நினைச்சுட்டு இருந்திட்டேன். இப்பத்தான் தெரியுது, நீங்க அண்ணந்தான்னு!!
பூஜா - ஸ்வீட், அம்மா மாதிரியே!!
படங்களும் பாப்பாவும்...அழகோ அழகு!
wow superb rajah... naan miss pannitten.. sorry.. sorry.. pooja sema cute... convey my luv to her ... :D
ஒளி ஓவியம் அருமை. எகிப்தில் குளிரா? அது ரொம்ப சூடாக இருக்கும்னு நானாவே நினைச்சேன்.
Post a Comment