கொல்லம் மெயில் . திருநெல்வேலி மாவட்ட மக்கள் அனைவருக்கும் மிக அறிமுகமான ஒன்று. ஏன்னா கேரள மாநிலம் கொல்லத்துல கிளம்பற இந்த ரயில் திருநெல்வேலி ஜங்ஷன் வந்த பின் தான் திருச்செந்தூர் போற ரயில் கிளம்பும். அச்சன்கோவில், ஆரியங்காவு, தென்மலை வழியா தமிழ்நாட்டின் செங்கோட்டைக்குள் நுழைந்து தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை டவுண் போன்ற நகரங்கள், பல கிராமங்கள் வழியாக திருநெல்வேலியை அடைந்து பின் திருச்செந்தூர் வரையும் நீட்டிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லை மக்களின் வாழ்வில் இணைந்து விட்ட இந்த ரயிலை சுற்றி அலுவலகங்கள் செல்வோர், கல்லூரிகள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உலகமே இயங்கி கொண்டிருந்தது. பலதரப்பட்ட மக்களுக்கும் பயன் அளித்து வந்த இந்த மீட்டர்கேஜ் ரயில் அகல ரயில் பாதை வேலைகளுக்காக கடந்த 2008ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள பணிகள் முடிவடைந்து இந்த வருட இறுதிக்குள் மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ரயில்பாதையில் பல தொன்மையான பாலங்களும், மலையினை குடைந்து அமைக்கப்பட்ட பல குகைப்பாதைகளும் உள்ளன.சிறிதும், பெரியதுமாக பல மலைக்குகை சுராங்கப்பாதைகளும், இயற்கை அழகு காட்சிகளும் மனதிற்கு மகிழ்ச்சியையும் வித்தியாசமான அனுபவத்தையும் தரக்கூடியவை.
நான் பலமுறை இந்த வழியாக சென்று வந்த பொழுது எடுத்த சில படாங்களும், காணொளிக்காட்சிகளும் உங்கள் பார்வைக்கு.
ஒரு அழகிய நீர்நிலை...
வண்டி, வண்டி.. ரயிலு வண்டி... இந்த பாலத்தை பல திரைப்படங்களிலும் பார்த்து வியந்திருப்போம்.
பாலத்தின் முழுத்தோற்றம்
தேக்குமரங்கள் அடர்ந்த மலையடிவாரம்.....
தேக்குமரங்கள், தென்னை மரங்கள் சூழ ஒரு வீடு....
பலவித மரங்கள் அடர்ந்த காடு....
இது இன்னொரு பெரிய மலைக்குகை...
இந்த ரயில் மறுபடியும் ஓடத்தொடங்கியவுடன் சீக்கிரம் குடும்பத்தோட ஒரு தடவை போய்ட்டு வரணும்ன்னு பிளான்.நீங்களும் வர்றதா இருந்தா சொல்லுங்க. போகும்போது தெரியப்படுத்துறேன்.
18 comments:
அருமையான இடங்கள். நல்ல போட்டோகிராபி
வாங்க மின்மினி. நீங்கதான் முதல் போணி... :))
வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி.
இரண்டாவது போணியா நான் வந்துட்டேன்... எனக்கு அறிமுகமான இடங்கள் தான், ஆனாலும் போட்டாவில் அழகாகவே இருக்கின்றது..
// நாடோடி said...
இரண்டாவது போணியா நான் வந்துட்டேன்... எனக்கு அறிமுகமான இடங்கள் தான், ஆனாலும் போட்டாவில் அழகாகவே இருக்கின்றது..///
இரண்டாவதும் இனிய போணி. வாங்க ஸ்டீபன் வாங்க... நீங்களும் போயிர்க்க்கீங்களா..ரொம்ப சந்தோஷம்.
அருமையான படங்கள் மனதிற்கு இனிமையான இடங்கள்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
நான் மூணாவது போணியா.. நல்ல அருமையான இடங்கள்.. இந்த தடவை ஊருக்குபோனீங்களே, கொல்லம் போனீங்களா ராஜா.. நானும் ஊருக்குபோய் கொல்லம் ரயிலில் போயிட்டுவரணும்.
ஏற்கனவே ஒருமுறை கொல்லம் வரை சென்றுதிரும்பியுள்ளேன். இந்த இடங்களை பார்க்கவேண்டும் என்பதற்காக. இந்த ஆண்டுக்குள் முடியும் என்று சொன்னது மகிழ்ச்சியளிக்கிறது. படங்கள் மிக அருமை ராஜா.
பகிர்வு அருமை ராஜா!
அடுத்தவருடம் இன்னுமோர் இடுகை ரயில் இயங்க ஆரம்பித்த பிறகு இடுங்கள்...
படங்கள், உங்கள் வர்ணனைகள் அருமை.
பிரபாகர்...
//venkat மொழிந்தது...
அருமையான படங்கள் மனதிற்கு இனிமையான இடங்கள்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்./
வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி வெங்கட் சார்...
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நான் மூணாவது போணியா.. நல்ல அருமையான இடங்கள்.. இந்த தடவை ஊருக்குபோனீங்களே, கொல்லம் போனீங்களா ராஜா.. நானும் ஊருக்குபோய் கொல்லம் ரயிலில் போயிட்டுவரணும்.//
நண்பரே நீங்க நாலாவது... குடும்பத்தோட போனா குதூகலமா இருக்கும் ஸ்டார்ஜன்.
// அக்பர் said...
ஏற்கனவே ஒருமுறை கொல்லம் வரை சென்றுதிரும்பியுள்ளேன். இந்த இடங்களை பார்க்கவேண்டும் என்பதற்காக. இந்த ஆண்டுக்குள் முடியும் என்று சொன்னது மகிழ்ச்சியளிக்கிறது. படங்கள் மிக அருமை ராஜா.//
வாங்க அக்பர். கண்களுக்கும், மனதிற்கும் மகிழ்ச்சி தரக்கூடிய அருமையான இடங்கள். நிச்சயம் போக வேண்டிய பயணம். போவோம்.
//பிரபாகர் said...
பகிர்வு அருமை ராஜா!
அடுத்தவருடம் இன்னுமோர் இடுகை ரயில் இயங்க ஆரம்பித்த பிறகு இடுங்கள்...
படங்கள், உங்கள் வர்ணனைகள் அருமை.//
வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி அன்பு நண்பரே... நிச்சயமா ரயில் இயங்க ஆரம்பித்தவுடன் சென்று வந்து மேலும் பல படங்கள், விவரங்களோடு பதிவிடுவேன்.
அழகா படங்களுடன் தொகுத்துருக்கீங்க..
படங்கள் அருமை. எந்த மாடல் கேமராவில் எடுத்தது..??
அண்ணாச்சி, எனக்கும் இந்த ரயிலுக்கும் பெரிய லவ் ஸ்டோரி இருக்கு. அப்புறமா சொல்றேன்.
படங்கள் சூப்பர்.
//கண்ணா.. said...
அழகா படங்களுடன் தொகுத்துருக்கீங்க..
படங்கள் அருமை. எந்த மாடல் கேமராவில் எடுத்தது..??//
கண்ணா, இது Fuji டிஜிட்டல் கேமரால எடுத்தது.
ஆமா, நீங்க இந்த டிரெயின்ல போயிருக்கீயளா... இல்லைன்னா கண்டிப்பா ஒரு வாட்டி குடும்பத்தோட போயிட்டு வாங்க...
/ஆடுமாடு said...
அண்ணாச்சி, எனக்கும் இந்த ரயிலுக்கும் பெரிய லவ் ஸ்டோரி இருக்கு. அப்புறமா சொல்றேன்.
படங்கள் சூப்பர்.//
வாங்க ஏக்நாத் அண்ணாச்சி, இந்த கதை எப்போ நடந்தது... சீக்கிரம் எழுதுங்க. அண்ணாச்சி காதல்கதை எழுதினா கரும்பா இனிக்கும்ல்லா...
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி,நெல்லை டவுண்
இந்த வரிசையில் வீரவநல்லூர் இல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்...
புங்கம்பட்டி நான் பிறந்த ஊர். அங்கே எங்களது தோட்டத்தின் பின்புறம்தான் கொல்லம்-திருநெல்வேலி இரயில் பாதை உள்ளது. தோட்டத்தில் குளிக்கும் போது 8:30 மணிக்கு திருநவேலி பாசஞ்சர் புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் காட்சி என் மனதில் தோன்றுகிறது.
Post a Comment