Wednesday, March 24, 2010

நானறியேன் பராபரமே....


வீடாயிரம் நாள்...
பள்ளிக்கூடாயிரம் நாள்....
நான் போகும்
நாடாயிரம் நாள்....

எனதிந்த பாடு
இன்னும்
என்னாயிரம் நாள்....


நானறியேன் பராபரமே....

25 comments:

vasu balaji said...

நல்லாயிருக்கீங்களா ராஜா? ஊருக்கு வந்து திரும்பியாச்சா?

துபாய் ராஜா said...

//வானம்பாடிகள் said...
நல்லாயிருக்கீங்களா ராஜா? ஊருக்கு வந்து திரும்பியாச்சா?..//

அன்புள்ள பாலா சார்,

நலம்.நலமறிய அவா.

ஊருக்கு வந்து திரும்பி சரியாக பத்து நாள் ஆகிறது. மிக குறைந்த நாள் விடுமுறை என்பதால் திரும்பி வந்தது முதல் எதிலும் ஈடுபாடில்லா ஒரு வெறுமையான உணர்வு. அதைத்தான் கவிதையாக எழுதினேன். உறவுகளைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழு(டு)ம் என்னைப் போன்றோருக்கு உங்களைப் போன்ற பதிவுலக சொந்தங்கள்தான் ஆறுதல்.இனி பதிவுகள் தொடரும்.

நன்றி.வணக்கம்.

எறும்பு said...

//இனி பதிவுகள் தொடரும்.//

என்ன பதிவுகள் தொடருமா?
;)

எறும்பு said...

நீங்கள் ஊருக்கு வந்தபோது உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

:)

Ananya Mahadevan said...

Oh, come on Raja.. இங்கே ஃபேமலியாத்தான் இருக்கோம். இருந்தாலும் உங்கள் நிலை தான். அனாதை தான்!துக்கெல்லாம், கவலை வேண்டாம். எல்லாம் சீக்கிரம் சரியாகும்.

கண்ணா.. said...

துபாய் ராஜா ..வந்தாச்சா..வெல்கம் பேக்..

//திரும்பி வந்தது முதல் எதிலும் ஈடுபாடில்லா ஒரு வெறுமையான உணர்வு. //

ஆமாம் உண்மைதான்.. அதும் நம்மூரு தின்னவேலிய விட்டு வர்றதுன்னா.. சாதாரணமா.? சதா ரணம்லா....

முகுந்த்; Amma said...

இப்போ தங்க உங்க சபைக்கு முதன் முதலா வர்றேன். நல்ல இருக்குங்க உங்க கவிதை.
வெளி நாட்டுல இருக்கிற நம்மை போல அனாதைகளுக்கு எங்கும் நிம்மதி இல்லாத பிழைப்பு. என்ன பண்ணுறது இது தான் விதி னுட்டு போகணும்.

ஜெட்லி... said...

புரிகிறது அண்ணே....

பிரபாகர் said...

டோண்ட் வொரி ராஜா...

நிறைய எழுதுங்க... மனசு லேசாகும்...

பிரபாகர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாங்க வாங்க நண்பரே ராஜா..

கவலைவேண்டாம் நாங்களெல்லாம் இருக்கோம்..

ஊரில் அண்ணி, பிள்ளைகள் எல்லாம் நல்லாருக்காங்களா.. எல்லோரையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்.

துபாய் ராஜா said...

//எறும்பு said...
//இனி பதிவுகள் தொடரும்.//

என்ன பதிவுகள் தொடருமா?
;)//

எறும்பு, இனிக்குது உங்க குறும்பு... :))

துபாய் ராஜா said...

//அநன்யா மஹாதேவன் said...
Oh, come on Raja.. இங்கே ஃபேமலியாத்தான் இருக்கோம். இருந்தாலும் உங்கள் நிலை தான். அனாதை தான்!துக்கெல்லாம், கவலை வேண்டாம். எல்லாம் சீக்கிரம் சரியாகும்.//

நன்றி அனு மேடம்.உங்களை போன்ற நல்ல நண்பர்கள் கிடைக்க உதவிய பதிவுலகத்திற்கு என்றென்றும் நன்றி.

துபாய் ராஜா said...

// கண்ணா.. said...
துபாய் ராஜா ..வந்தாச்சா..வெல்கம் பேக்..//

வாங்க கண்ணா வாங்க...நன்றி.

//திரும்பி வந்தது முதல் எதிலும் ஈடுபாடில்லா ஒரு வெறுமையான உணர்வு. //

//ஆமாம் உண்மைதான்.. அதும் நம்மூரு தின்னவேலிய விட்டு வர்றதுன்னா..//

ஆமாம் கண்ணா. ஊருக்கு போனதிலேருந்து வர்ற வரை ஏதாவது தின்னுகிட்டேதான் இருந்தோம்.

//சாதாரணமா.? சதா ரணம்லா....//

வார்த்தை விளையாட்டு அருமைவே..

துபாய் ராஜா said...

//முகுந்த் அம்மா said...
இப்போ தங்க உங்க சபைக்கு முதன் முதலா வர்றேன். நல்ல இருக்குங்க உங்க கவிதை.
வெளி நாட்டுல இருக்கிற நம்மை போல அனாதைகளுக்கு எங்கும் நிம்மதி இல்லாத பிழைப்பு. என்ன பண்ணுறது இது தான் விதி னுட்டு போகணும்.//

வாங்க முகுந்த் அம்மா... முதல் வருகைக்கு நன்றி.நீங்க சொல்றது ரொம்ப சரி.சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...

துபாய் ராஜா said...

//ஜெட்லி said...
புரிகிறது அண்ணே....//

தம்பி உடையான் பதிவிற்கு அஞ்சான். புரிதலிற்கு நன்றி தம்பி...

துபாய் ராஜா said...

// பிரபாகர் said...
டோண்ட் வொரி ராஜா...

நிறைய எழுதுங்க... மனசு லேசாகும்...

பிரபாகர்.//

நன்றி நண்பரே.. பிரிவின் வலி பதிவெழுதினா போகும் என்பது உண்மையான உண்மை.

துபாய் ராஜா said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வாங்க வாங்க நண்பரே ராஜா..

கவலைவேண்டாம் நாங்களெல்லாம் இருக்கோம்..

ஊரில் அண்ணி, பிள்ளைகள் எல்லாம் நல்லாருக்காங்களா.. எல்லோரையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்.//

நன்றி நண்பர் ஷேக்.அனைவரும் நலம்.

சிநேகிதன் அக்பர் said...

வந்து பத்து நாள் தானே ஆச்சு அதுக்குள்ளேயேவா விடுங்க பாஸ் ஒரு மாசம் போகட்டும்....

அப்புறம் எல்லாம் பழகிப்போயிடும் :)

//ஆமாம் உண்மைதான்.. அதும் நம்மூரு தின்னவேலிய விட்டு வர்றதுன்னா.. சாதாரணமா.? சதா ரணம்லா....//

அப்படி போடு அருவாள!

ஆடுமாடு said...

அண்ணாச்சி,
ஓவரா பீல் பண்ணாதீங்க?

எல்லாம் சரியாயிரும். நாங்கலாம் இருக்கம்லா.

அகல்விளக்கு said...

நல்லாயிருக்கீங்களா அண்ணா...

உடம்பெல்லாம் சுகம்தானே....

துபாய் ராஜா said...

//அக்பர் said...
வந்து பத்து நாள் தானே ஆச்சு அதுக்குள்ளேயேவா விடுங்க பாஸ் ஒரு மாசம் போகட்டும்....

அப்புறம் எல்லாம் பழகிப்போயிடும் :)//

ஆஹா அக்பர்.அவனா நீ... :))

//ஆமாம் உண்மைதான்.. அதும் நம்மூரு தின்னவேலிய விட்டு வர்றதுன்னா.. சாதாரணமா.? சதா ரணம்லா....//

அப்படி போடு அருவாள!//

நம்ம ஊருன்னாலே அல்வாவும், அருவாவும் தானே பேமஸ்... :))

துபாய் ராஜா said...

//ஆடுமாடு said...
அண்ணாச்சி,
ஓவரா பீல் பண்ணாதீங்க?

எல்லாம் சரியாயிரும். நாங்கலாம் இருக்கம்லா.//

சரிதான் அண்ணாச்சி.ஆனா நீங்கல்லாம் ஊர்ல்லல்லா இருக்கியோ.
அதான் இம்புட்டு ஃபீலிங்... :))

துபாய் ராஜா said...

//அகல்விளக்கு said...
நல்லாயிருக்கீங்களா அண்ணா...

உடம்பெல்லாம் சுகம்தானே....//

வாங்க தம்பி ஜெய்சிங்,நேரமாற்றம், தட்ப வெப்பநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளாமல் ஊரிலும் இங்கு வந்த பின்னும் உடல்நிலை சரியில்லாமல் மிக கஷ்டப்பட்டேன். இப்போது பரவாயில்லை.

Anonymous said...

Welcome back Raja

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா... ஊருக்குபோயிட்டு வந்த ஃபீலிங்ஸா :-))). கவலைப்படாதீங்க,எல்லாம் சரியாப்போகும்.