தேனி : தேனி அருகே நண்பனை கடித்த பாம்பை, உயிரோடு பிடித்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்த சுகுமார் மகன் குமார்(18), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகுராஜா(21). இருவரும் நண்பர்கள். குமார் எங்கு சென்றாலும் அழகுராஜாவை அழைத்துக் கொண்டு தான் செல்வாராம். நேற்று மதியம் நண்பர்கள் இருவரும் அரண்மனைபுதூர் பாலம் அருகே வைகை ஆற்றில் குளிக்கச்சென்றனர். குளித்து விட்டு கரைக்கு வந்தபோது குமாரை, கல் இடுக்கிற்குள் இருந்த ஆறு அடி நீள நல்லபாம்பு கடித்தது. நண்பன் துடித்ததை பார்த்த அழகுராஜா பாம்பை பயமின்றி பிடித்தார். குமாரை ஆட்டோவில் 6 கி.மீ. தூரத்தில் உள்ள தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாம்புடன் ஆஸ்பத்திரி நோக்கி அழகுராஜா ஓடினார்.
இரண்டு கி.மீ. தூரம் ஓடிய பின் அங்கு வந்த இன்னொரு ஆட்டோவில் ஏறி ஆஸ்பத்திரியை அடைந்தார். அங்கிருந்த நோயாளிகளும், நர்சுகளும் பயத்தில் விலகி ஓடினர். குமாரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். டாக்டர்களிடம் பாம்பை காட்டியபின் அழகுராஜா அதை அடித்துக் கொன்றார்.
நண்பனை காப்பாற்றும் வேகத்தில் இருந்த அழகுராஜா, பாம்பை கழுத்தை பிடித்து தூக்கி சென்றதில் பாம்பின் பல் அவர் கையிலும் பதிந்ததை கூட பார்க்கவில்லை. இதை பார்த்த டாக்டர்கள் அவருக்கும் சிகிச்சை அளித்தனர். அழகுராஜா கூறுகையில்; ""நண்பனை பாம்பு கடித்தவிட்டதே என்ற ஆத்திரத்தில், செய்வதறியாது பாம்பை பிடித்துவிட்டேன். கடித்த பாம்பை காட்டினால் தான் அதற்கு தகுந்தாற்போல் டாக்டர் சிகிச்சையளிக்கமுடியும் என்பதால், நண்பனை அந்த வழியே வந்த ஆட்டோவில் ஏற்றிவிட்டு விட்டு, பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு எப்படித்தான் அந்த தைரியம் வந்தது என தெரியவில்லை' என்றார்.
செய்தியின் சுட்டி http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=82 அளித்த அமீரக நண்பர் ஆசிர் தேவதாசனுக்கு நன்றி.
18 comments:
wwaaav... Nice man.
nalla pathivu
ஆ!!!
சிலிர்க்க வைக்கும் நட்பு. பகிர்ந்தமைக்கு நன்றி ராஜா.
தகவலும் சொன்ன விதமும் அருமை ராஜா...
உயிர்காப்பான் தோழன், பாம்பை புடிச்சி தூக்கிட்டு வந்தும்...
பிரபாகர்.
aiyo... pic paarthale naan seththuduven...! greatnga..! :(.. nanri rajah..!
ராஜா ,உயிர் காப்பான் நண்பன் என்பது உண்மையாகிறது பாருங்களேன்.
supper
ராஜா மணியன் போல அழகு ராஜா நல்ல நண்பன்
எங்கன் ஊர்க்க்கரய்ங்க அப்டித்தான் பயமறியார்......
என்ன நட்பு ராஜா!பகிர்தலுக்கு நன்றி!
ஆச்சரியம்!!!!!!
சுவாரஸ்யமான பதிவுதான். ஆனால் பாம்பை எடுத்துக் கொண்டு ஓடுவானேன்?
http://kgjawarlal.wordpress.com
செய்தியில் பெரும்பகுதியை அந்தப் படமே சொல்கிறது.
மிக நல்ல இடுகை
யம்மாடியோ...
என்னாலல்லாம் முடியாதுங்க. பகிர்வுக்கு நன்றிங்க துபாய் ராசா.
கண்மூடித் தனமான நட்பும் அழகு தான்.
பிரண்டுடன் அவரும் ஆட்டோல போய் இருக்கலாமே. ஆனாலும், நட்புக்கு பாராட்டுக்கள்.
good story
Post a Comment