Saturday, June 20, 2009

ஆத்துல போட்டாலும்...............



ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா நம்ம அரசியல்வாதிங்க கடல்ல கணக்கில்லாம கொட்டுறாங்களேன்னு மனசு பொறுக்காமதான் இந்த பதிவு.

நம்ம மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா நேற்று சென்னையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பேட்டியை முதல்ல படிச்சுட்டு அப்புறம் என் கருத்துக்கு வாங்க.

கடலின் நடுவே காற்றாலை திட்டம் : பரூக் அப்துல்லா அறிவிப்பு

சென்னை : மின் உற்பத்தியை அதிகரிக்க கடலின் நடுவே காற்றாலை அமைக்கப்படும் என மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார் பரூக் அப்துல்லா. சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய பரூக் : மின் உற்பத்தியை பெருக்குவதற்காக கடலின் நடுவே காற்றாலை அமைக்கப்படுவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இதனை மேலும் மேம்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார் . மேலும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து அரசுக்கு அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சுலுகை அளிப்பது குறித்து மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும் என தெரிவித்தார்.


-------------------------------------------------------------------------------------------

உலகின் முன்னணி காற்றாலை உற்பத்தி நிறுவனத்தில் ஈராண்டு காலம் பணிபுரிந்தவன் என்ற முறையில் எனது கருத்து.

நமது நாட்டில் மலைகளில் இயற்கையாக அமைந்துள்ள கணவாய்களின் வழியாக வீசும் காற்றின் வேகத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க பல மாநிலங்களில் காற்றாலை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுதுமே பூமியின் சுழற்சியை பொறுத்து காற்று வீசும் காலம் அதிகரிக்கவோ,குறையவோ செய்கிறது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டின் ஒன்பது மாதங்களுக்கு மேல் நல்ல காற்று வீசுகிறது.நாடு முழுதும் காற்று வீசும் திசை (Wind belt) முழுதும் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய காற்றாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடலில் காற்றாலை என்பது ஐரோப்பிய நாடுகளில்தான் அதிகமாக உள்ளது.ஏனெனில் அங்கு நிலப்பரப்பு குறைவு.எனவேதான் கடலில் காற்றாலை அமைத்துள்ளார்கள்.

நமது நாட்டில் காற்று வீசும் நிலப்பரப்புகள் ஜனசந்தடியில்லாமல் இருப்பதால் இடப்பற்றாக்குறை பிரச்சனையும் இல்லை.உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் மின்கம்பங்கள் மூலம் நாடு முழுதும் விநியோகிக்கப்படுகிறது.தவிரவும் காற்றாலை துறையில் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது. பராமரிப்பு பணிக்கு தேவைப்படும் இயந்திரங்கள்,கருவிகள் மற்றும் பொறியாளர்கள்,தொழிலாளர்களை காற்றாலை அருகில் எடுத்து செல்ல கனரக வாகனப்போக்குவரத்தும் மிகவும் அவசியம்.

கடலின் நடுவே காற்றாலை அமைக்கும் பொழுது பராமரிப்பு பணிக்கு கப்பல்கள் அல்லது உலங்குஊர்திகளையே (Helicopters) பயன்படுத்த வேண்டி வரும்.உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கரைக்கு கொண்டு வர கடலினுள் உயரழுத்த கடத்திகள் (Power Cables) பயன்படுத்தப்படும் பொழுது பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பகுதி முழுதும் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும்.

மேலும் ஏற்கனவே மக்களின் வரிப்பணமான பல ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட சேதுசமுத்திரதிட்டம் ,கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற கடலை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலையில் மீண்டும் ஒரு பொருத்தமில்லாத புதிய திட்டம்.

எனவே நமது நாட்டை பொறுத்தவரை இத்திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதே என் கருத்து.

நண்பர்களே , இப்பதிவின் முதல் நான்கு வரிகளை மீண்டும் ஒருமுறை படித்து கொள்ளுங்கள்.

12 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

படித்தேன். தெளிவாக உங்கள் பார்வைகளை முன்வைத்திருக்கிறீர்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

முதன் முதலா உங்க ஏரியாவுக்கு வந்திருக்கேன்...கவனிக்க மாட்டீங்களா??? (ஹி....ஹி....அட நம்ம வீட்டு பக்கம் வந்து பாருங்க....)

கானா பிரபா said...

பாஸ்

கல்யாணத்துக்கு அப்புறம் மீண்டு(ம்) வந்திட்டீங்களா :), வாங்க வாங்க

goma said...

ஆத்திலே போட்டாகூட எடுத்துவிடலாம் போலிருக்கிறது...கடல்லே போட்டா ,அரசாங்கத்துக்குப் பெரும்[ங்]காயம்தான்

goma said...

ஆத்திலே போட்டா அளந்து போடணும்
கடல்லே போட்டா கவனமா போடணும்

துபாய் ராஜா said...

//படித்தேன். தெளிவாக உங்கள் பார்வைகளை முன்வைத்திருக்கிறீர்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றீ
சுந்தர் சார்.

துபாய் ராஜா said...

வருகைக்கு நன்றீ அபூ.

துபாய் ராஜா said...

அன்பு பிரபா,வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றீ.

//கல்யாணத்துக்கு அப்புறம் மீண்டு(ம்) வந்திட்டீங்களா :), வாங்க வாங்க//

:-)))))))))

உங்களையும் பார்க்கத்தானே போறோம்.

துபாய் ராஜா said...

//ஆத்திலே போட்டாகூட எடுத்துவிடலாம் போலிருக்கிறது...கடல்லே போட்டா ,அரசாங்கத்துக்குப் பெரும்[ங்]காயம்தான்//

உண்மைதான் goma.கடல்ல கரைச்ச பெருங்காயத்துக்குத்தான் கணக்கு கேக்குறோம்.

துபாய் ராஜா said...

//ஆத்திலே போட்டா அளந்து போடணும்
கடல்லே போட்டா கவனமா போடணும்//

இது 'கவர்'மெண்டுக்கு தெரியலியே

தீப்பெட்டி said...

//ஆத்திலே போட்டா அளந்து போடணும்
கடல்லே போட்டா கவனமா போடணும்//

அப்புறம் எப்படி முதலாளிகள் சம்பாதிக்கிறது..
அரசியல்வாதிகள் பொறுக்கி திங்குறது..
நாம ஓட்டுக்கு 500 ரூபா வாங்குறது..

அன்புடன் மலிக்கா said...

மிக தெளிவான விளக்கம் ராஜா.
அருமை..