Tuesday, June 23, 2009

“இந்தி”யர்கள் பாதுகாப்பு குறித்து விளக்கம் : சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்




இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து விளக்கம் : சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி : வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில், இந்தியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்துக்குப் பிறகு வெளிநாடு வாழ் இந்தியர்கள‌ை பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, என விளக்கமளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் அந்த நோட்டீஸ் வலியுறுத்தியுள்ளது. டில்லியை சேர்ந்த வக்கீல் கார்க், இவர் மத்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசை வருகிற 26ம் தேதிக்குள் இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
---------------------------------------------------------------------------------------------



தமிழ்நாட்டில் எத்தனை தீக்குளிப்பு, எத்தனை மறியல், எத்தனை போராட்டம்....... டெல்லிக்கு கொஞ்சமாச்சும் காது கேட்டதா ???

எந்த "இந்தி"ய மீடியாகாரனாவது எழுதினானா ? எட்டிப்பார்த்தானா ?

இப்ப பாருங்க. ”இந்தி”யர்கள் தாக்கப்பட்டாங்கன்ன உடனே எத்தனை குரல்கள். சுப்ரீம் கோர்ட்டே மத்திய அரசுக்கு நோட்டீஸ் கொடுக்குது.

தமிழ், தமிழ்ன்னு கதைக்காம நாமளும் இந்தியை படிச்சிருந்தா நம்மளையும் இந்தியர்ன்னு மதிச்சிருப்பாங்கல்ல.

இரண்டு தலைமுறையை இந்தி படிக்கவிடாமல் செய்த அரசியல்வியாதிங்களோட புள்ளைங்க, பேரனுங்க எல்லாம் இப்போ “இந்தி”ய அரசாங்கத்தோட மந்திரி சபையில நிரந்தர அமைச்சர்கள்.

போங்கடே போங்க..... புள்ளை குட்டியளையாவது இந்தி படிக்க வைத்து “இந்தி”யர்களா ஆக்குங்க.

7 comments:

மேவி... said...

மிக சரியாக சொன்னிங்க ....

சில சமயம் ஹிந்தி ரொம்ப அவசியமானது

துபாய் ராஜா said...

//மிக சரியாக சொன்னிங்க ....//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

//சில சமயம் ஹிந்தி ரொம்ப அவசியமானது//

சில கிணற்றுத்தவளைகளுக்கு இது புரியமாட்டேங்குதே மேவியாரே!!

தீப்பெட்டி said...

//டில்லியை சேர்ந்த வக்கீல் கார்க், இவர் மத்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்//

//சுப்ரீம் கோர்ட்டே மத்திய அரசுக்கு நோட்டீஸ் கொடுக்குது//

//எத்தனை தீக்குளிப்பு,எத்தனை மறியல்,எத்தனை போராட்டம்.......//

எத்தனை தமிழர்கள் இல்ல.. தமிழ் வக்கீல்கள்.. இல்ல தமிழர் அமைப்புகள்.. உச்ச நீதிமன்றத்திலயோ இல்ல உயர் நீதி மன்றத்துலயோ பொது நல வழக்கு தாக்கல் செய்தாங்க?

தமிழர்களோட மனநிலை அப்படி..
பெருசா ஊருக்கு நடுல உக்காந்துகிட்டு பஞ்சாயத்து பேசிக்கிட்டு பெரிய மனுசனா காட்டிக்குறதுதான் அவனோட எண்ணம். சட்டம் அவனுக்கும் பொதுவாத்தான் இருக்கு. இதுக்கும் ஹிந்தி படிக்குறதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

தமிழர்களோட மனநிலை அப்படி.. பிரச்சனைய தீர்க்குறதுல அவனுக்கு ஆர்வமில்லை.. அத இன்னும் பெருசா இழுத்துப் போட்டு நோகாம நாட்டாமை பேசிக்கிட்டு இருக்கணும்.. அவ்வுளவுதான்.

Anonymous said...

நாங்க இந்திக்கு கன்வர்ட் ஆகலாம்னுட்டு இருக்கோம். எப்படி ஆகிரதுன்னு யாராவது சொல்லமுடியுமா?

துபாய் ராஜா said...

//தமிழர்களோட மனநிலை அப்படி.. பிரச்சனைய தீர்க்குறதுல அவனுக்கு ஆர்வமில்லை.. அத இன்னும் பெருசா இழுத்துப் போட்டு நோகாம நாட்டாமை பேசிக்கிட்டு இருக்கணும்.. அவ்வுளவுதான்.//

தங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் தீப்பெட்டியாரே.

துபாய் ராஜா said...

//நாங்க இந்திக்கு கன்வர்ட் ஆகலாம்னுட்டு இருக்கோம். எப்படி ஆகிரதுன்னு யாராவது சொல்லமுடியுமா?//

வாங்க அனானியாரே.ஒரு நல்ல இந்தி வாத்தியாரை பிடிங்க இல்லைன்னா
தமிழ்நாட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்தா போதும். :))

கோவி.கண்ணன் said...

கிந்தி அவங்க உங்களைப் படிக்கச் சொல்வது அவிங்களுக்கு வந்தா போனால் கஷடப்படாமல் இருக்கனும் தான். மத்தபடி நீங்க கிந்தி படித்தலும் மதராஸி. கிந்தி படிச்சாலும் எப்பவும் போல திரும்பிக் கூட பார்க்கமாட்டானுக